New Year Wishes For Students: மாணவர்களே..! இந்த புத்தாண்டு வாழ்த்துக்களை புதுவிதமா சொல்லுங்க..!
Dec 14, 2023, 12:00 PM IST
எதிர்காலத் தூணாக விளங்கக்கூடிய மாணவர்கள் இந்த ஆங்கில புத்தாண்டை எப்படி கொண்டாடி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து இங்கே காணலாம்.
புத்தாண்டு என்றாலே ஒருவகை இன்பம் தான். கொண்டாட்டத்தின் உச்சமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாக புத்தாண்டு விளங்கி வருகிறது. புது ஆண்டின் வரவை எதிர்பார்த்து உலகத்தில் உள்ள அனைவரும் காத்திருப்பார்கள்.
பாரபட்சம் இல்லாமல் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்டிகையாக இந்த புத்தாண்டு திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு மகிழ்ச்சி மட்டுமல்லாது வாழ்க்கையையே மகிழ்ச்சியாக கழிக்கக்கூடிய மாணவர்கள் மத்தியில் புத்தாண்டு ஒரு மிகப்பெரிய விசேஷ நாளாகும்.
தொழில்நுட்பக் காலமாக தற்போது மாறி உள்ளதால் மாணவர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் தங்களது வாழ்த்துக்களை பதிவு செய்து கடமைக்காக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மகிழ்ச்சியான தருணங்களை உருவாக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு புத்தாண்டையும் சேர்ந்து, அன்பை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும்.
நாட்டின் மிகப்பெரிய தூணாக விளங்க கூடியவர்கள் மாணவர்கள் மற்றவர்களுக்கு எந்த அளவிற்கு புத்தாண்டு முக்கியமோ அதைவிட மாணவர்களுக்கு புத்தாண்டு மிகவும் முக்கியமாகும். ஏனென்றால் தங்களது வாழ்க்கையை நெறிப்படுத்தக்கூடிய தருணமாக ஒவ்வொரு புத்தாண்டும் அமைகின்றது. அந்த வகையில் வரக்கூடிய 2024 ஆம் ஆண்டு விசேஷ ஆண்டாக அனைவருக்கும் அமைய உள்ளது. மாணவர்களாக விளங்க கூடியவர்கள் மற்றவர்களுக்கு எப்படி தங்களது வாழ்த்துக்களை பகிரலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
மாணவர்களே புத்தாண்டை மகிழ்ச்சியான தருணமாக மாற்றுங்கள்
வாழ்க்கையை தீர்மானிக்கக்கூடிய தருணங்களில் எத்தனையோ மாணவர்கள் இருப்பார்கள். அப்படி இருக்கக்கூடிய மாணவர்கள் அடுத்த கட்டம் என்ன செய்யலாம் என்பது குறித்து சிந்தித்து அதற்கான பயணத்தில் நமது நண்பர்கள் எப்படி செல்ல வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். எடுத்துக்காட்டாக நமது திட்டத்திற்கு ஏற்ப புத்தகங்கள் கொடுப்பது, அதற்கு எந்தப் பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
கூட்டாக செயல்படக்கூடிய மாணவர்கள் ஒன்று சேர்ந்து ஒவ்வொரு மாணவர் வீட்டிற்கும் சென்று அவர்கள் குடும்பத்திற்கு எது தேவையோ அதனை கொடுத்து அல்லது வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ச்சியை பரிமாறலாம்.
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு மாணவர்கள் மத்தியில் தான் அதிகம் இருக்கும். அந்த வகையில் உங்களின் நண்பருக்கு எது பிடிக்குமோ அதனை அன்பின் அடையாளமாக கொடுத்து வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
பள்ளிப்பருவத்தில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு பெரிய பயணம் இருக்காது அவர்களின் ஆசைகள் பிரமாண்டமாக இருந்தாலும் சிறிய எதிர்பார்ப்புகள் தான் இருக்கும். அதனை நிறைவேற்றி உங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
கூட்டாக சேர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உணவருந்தி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.
ஒருவரை ஒருவர் முன்னேற்றக் கொள்ளும் தீர்மானங்களை எடுத்துக்கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
சண்டை, சச்சரவுகள் எத்தனை இருந்தாலும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி புன்னகையை கொடுத்து உங்களது உங்களது வாழ்த்துக்களை தெரிவித்து புத்தாண்டை பிரகாசமாக்கலாம்.
வாழ்த்துக்கள்
- நினைத்ததை நிறைவேற்ற நிற்காமல் கனவு காண வேண்டும். ஏனென்றால் நீங்கள் ஒரு சாதனையாளர் கனவு தான் சாதனைகளை உருவாக்கும். இந்த புத்தாண்டு அதற்கான ஆண்டாக அமையட்டும்.
- பழைய ஆண்டின் முடிவு போல் உங்களின் துன்பங்களுக்கும் இது முடிவு காலமாகும். வரக்கூடிய புத்தாண்டு உங்கள் வாழ்க்கையில் ஒளி விளக்கை அமையட்டும்.
- நீண்ட நாட்கள் கனவாக இருந்தாலும் ஜெயிலர் போல் வசூலை அள்ளுங்கள். போராடி நினைத்ததை லியோ போல் நிறைவேற்றுங்கள். ஜப்பான் போல் சில பிரச்சனைகள் வந்தாலும் உங்கள் வளர்ச்சி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போல் இருக்க புத்தாண்டு வாழ்த்துக்கள்.
- பழைய முறையாக இருந்தாலும் எழுத்துப்பூர்வமாக கூறக்கூடிய வாழ்த்துக்கள் குறைந்துவிட்டன வாழ்த்து அட்டைகள் பரிமாற்றத்தின் மூலம் மறுபடியும் உங்களது அன்பை பரிமாறி புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்