தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Time Management Tips: தொழில்முனைவோர் நேர மேலாண்மையில் சிறந்துவிளங்க சில குறிப்புகள்!

Time Management Tips: தொழில்முனைவோர் நேர மேலாண்மையில் சிறந்துவிளங்க சில குறிப்புகள்!

Marimuthu M HT Tamil

Jun 25, 2024, 07:58 PM IST

google News
Time Management Tips: நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒவ்வொரு பணிக்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். தொழில்முனைவோர் நேர மேலாண்மையில் சிறந்துவிளங்க சில குறிப்புகள் பற்றி அறிந்துகொள்வோம். (Pixabay)
Time Management Tips: நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒவ்வொரு பணிக்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். தொழில்முனைவோர் நேர மேலாண்மையில் சிறந்துவிளங்க சில குறிப்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

Time Management Tips: நாம் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், ஒவ்வொரு தொழில்முனைவோரும் ஒவ்வொரு பணிக்கும் சரியான அளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். தொழில்முனைவோர் நேர மேலாண்மையில் சிறந்துவிளங்க சில குறிப்புகள் பற்றி அறிந்துகொள்வோம்.

Time Management Tips: திறமையான நேர மேலாண்மை என்பது பிஸியான தொழில்முனைவோருக்கு மிகவும் அவசியமான திறன்களில் ஒன்றாகும். அதனை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்துப் பார்ப்போம். 

தொழில் முனைவோருக்கு இருக்கும் பல்வேறு வேலைகள்:

ஒரு தொழில்முனைவோர் வணிகத்தின் சீரான செயல்பாட்டை உறுதிசெய்கிறார். திட்டமிடுவது முதல் அதனை செயல்படுத்துவது வரை, ஊழியர்களை நிர்வகிப்பது முதல் கூட்டங்களுக்குத் தலைமை தாங்குவது வரை மற்றும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவது என தொழில் முனைவோருக்கு பல்வேறு வேலைகள் இருக்கின்றன. 

இதனால் தொழில் முனைவோர், பல்வேறு சூழல்களில், பல்வேறு பணிகளை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், இவர்களுக்கு நேரமேலாண்மை என்பது மிகப்பெரிய சவால் ஆக இருக்கிறது. 

நமது ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நேரம் ஒதுக்கியிருந்தாலும், திடீரென வரும் பணிகளுக்கும் நேரம் ஒதுக்கவேண்டியநிலை அவசரமாக ஏற்படும்போது, அதன்நேரம், பிறபணிகளின் பணியைப் பாதிக்காதவகையில் பணிசெய்யவேண்டும்.  

டிஜிட்டல் தொழில் நுட்பம் மிகவும் முன்னேறியுள்ளது. இதனைப் பயன்படுத்தி, குறைவான நேரத்திலும் கூடுதலான பணிகளை திறம்பட செய்யமுடியும். 

குழு நிர்வாகத்தைக் கண்காணிக்கும் மென்பொருளைப் பயன்படுத்துங்கள்:

இந்துஸ்தான் டைம்ஸ் லைஃப்ஸ்டைலுக்கு அளித்த பேட்டியில், ஒன் டிஜிட்டலின் நிறுவனர் ஆர் ஹிமானி அஹுஜா, "உற்பத்தித்திறன் கருவிகளைப் பயன்படுத்துவது நேரத்தை மேம்படுத்துவதற்கான முதல் தேர்வாகும். எடுத்துக்காட்டாக, நிறுவன செயல்பாடுகள் மற்றும் தகவல்தொடர்புகளை ஒருங்கிணைக்கும் மென்பொருளைத் தேர்ந்தெடுப்பது, குழு நிர்வாகத்தை அதுவே கவனித்துக்கொண்டு, ஒவ்வொருவரின் பணியின் தன்மையை நமக்குப் பெற உதவும்.

ஒரே நேரத்தில் பல பணிகளைக் கையாள்வது என்பது நேர மேலாண்மையில் இயலாத காரியம்.  இது வேலையில் உற்பத்தித்திறனைத் தடுக்கிறது மற்றும் நிறைய நேரத்தைக் கொல்கிறது. 

பல பணிகளைச் செய்வதற்கான சிறந்த வழி, ஒரு நேரத்தில் ஒரு பணியில் கவனம் செலுத்துவது மட்டுமே. முக்கிய நோக்கங்களை பட்டியலிடும் ஒரு எளிய தினசரி மற்றும் வாராந்திரத் திட்டத்தை உருவாக்குவது, பல பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் ஒப்படைக்கவும் நமக்கு உதவும். 

மேலும், நேரத் தணிக்கை, அன்றாட திட்டங்களின் சாத்தியமான பணி நிலவரத்தை அடையாளம் காண உதவுகிறது. எந்தவொரு வணிக தொழில்முனைவோருக்கும் திட்டமிடல் ஒரு முக்கியப் பகுதியாகும்’’ என்றார். 

திட்டமிடப்படாத கூட்டங்களை இப்படிக் கையாளுங்கள்:

ஒபுலோவின் நிறுவனர் கார்த்திகேயா பத்ரா நேரமேலாண்மை தொடர்பாக வலியுறுத்தியதாவது, "ஒரு வணிக நிறுவனத் தலைவராக, கலந்துகொள்ள பல கூட்டங்கள் மற்றும் பகலில் கவனித்துக்கொள்ள பல பணிகள் கைவசம் இருக்கும். ஆனால், திட்டமிடப்படாத கூட்டங்கள், சீரற்ற செயல்பாடுகள் உங்கள் நேரத்தை அதிகம் திருடவிடாமல் இருப்பது எப்போதும் முக்கியமானது. 

இதுபோன்ற திட்டமிடப்படாத நிகழ்வுகளுடன் நேரத்தை நிர்வகிப்பதற்கான, ஒரு நல்ல யோசனை கடினமான நேரமேலாண்மையை உறுதிப்படுத்திக்கொள்வது ஆகும். 

திட்டமிடப்படாத சந்திப்புகள் அல்லது திட்டமிடப்படாத போன் கால்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் செலவிட வேண்டாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே, அவற்றை உங்கள் நேர நிர்வாகத்தில் சேர்க்காமல் உங்கள் வேலை செய்யப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். 

ஒரு தொழில்முனைவோராக, உங்கள் நேர மேலாண்மை திறன்களை நிர்வகிப்பதன் மூலம் உங்கள் வேலையை முழுமையாகக் கட்டுப்படுத்தலாம். இருப்பினும், சிறந்த நேர மேலாண்மை என்பது உங்கள் செயல்பாட்டு அட்டவணையை திறமையாக ஒழுங்குபடுத்துவது மட்டுமல்ல, அதிக வேலைகளைச் செய்ய அதை புத்திசாலித்தனமாக நிர்வகிப்பதும் ஆகும் என்பதை மறக்கக் கூடாது. 

நேர நிர்வாகத்திற்கு உதவும் அம்சங்கள்:

நேர நிர்வாகத்திற்குத் திட்டமிடுவதற்கு உங்கள் போனில் கூட திட்டமிடலாம். ஒவ்வொரு பணியைப் பரிசோதிக்கச் செல்லும்போதும் அலாரம் செட் செய்துகொள்வது நல்லது. ஒவ்வொரு பணி முடிந்து அலாரம் அடித்ததும், அந்தப் பணியினை முடித்துவிட்டு அடுத்தவேலைக்குப் போகலாம். 

மேலும், ஒரு பணியில் 25 நிமிடங்கள் மட்டுமே செய்யும் வகையில் அதனை திட்டமிட்டுக்கொண்டு, அதில் மொத்த கவனத்தினையும் செலுத்தினால், சுலபமாக முடிக்கலாம். பின் 5 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு, உடனடியாக அடுத்தபணிக்குச் சென்றுவிடவேண்டும். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி