தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!

Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!

Priyadarshini R HT Tamil

Feb 13, 2024, 12:26 PM IST

google News
Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!
Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!

Healthy Tips : இந்த ஒரு பானம் பல நோய்களுக்கும் தீர்வு! வயதானாலும் இளமை தோற்றம் மாறாது!

இந்த தண்ணீரை 3 முறை மட்டுமே பருகினால் போதும். மூட்டு வலி, உடல் சோர்வு, பாத வலி, பாத எரிச்சல், கை-கால் வலி, கை-கால் குத்தல், வாயுத்தொல்லை, அஜீரண கோளாறு, மலச்சிக்கல், வாய் துர்நாற்றம், சரும துர்நாற்றம், தோல் தொடர்பான நோய்கள், நீரிழிவு எனப்படும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, ஆஸ்துமா, நரம்புக்கோளாறு, இருமல், சளி, சருமம் தொடர்பான பிரச்னைகளையும் தீர்க்கும்.

அதற்கு இந்த பானம் உங்களுக்கு உதவும். இதை பருகினால், வயதானாலும் இளமை பொலிவுடனே மின்னலாம். மேலும் நமது உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சீராக பராமரித்து வியாதிகளை ஓடவிடும்.

தேவையான பொருட்கள்

துளசி – 10 இலைகள்

(நிறைய வகை துளசி உள்ளது. நாம் அதிகம் பயன்படுத்துவது பசுந்துளசிதான். சளி, இருமலுக்கு தீர்வு கொடுக்கிறது. ஆனால் இது பல நோய்களை கட்டுப்படுத்திகிறது. அதனால் துளசி சித்தா மற்றும் ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. அம்மருத்துவங்களில் இது மூலிகைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.

நோய் வருமுன் காத்து, வந்த நோயை விரட்டியடித்து, எதிர்காலத்தில் நமது உடலில் எந்த நோயும் வராமல் இருக்க வழிவகை செய்யுக்கூடிய அற்புதமான மூலிகையாக துளசி உள்ளது. 

நோய் நிவாரணி மட்டுமல்ல, சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது. காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடை கிரகித்து 24 மணி நேரமும் ஆக்ஸிஜனை வெளியிடும் தன்மை கொண்டது இந்த துளசி. துளசியில் உள்ள மருத்துவ குணம் நிறைந்த காற்றால் வளிமண்டலத்தில் உள்ள காற்று சுத்தமாக சுத்திகரிக்கப்படுகிறது.

அதுதான் துளசிக்கு மற்ற தாவரங்களுக்கும் உள்ள வித்யாசம். ஏனெனில் அனைத்து தாவரங்களுமே ஆக்ஸிஜனைத்தான் கொடுக்கின்றன. சுத்தமான காந்றை கொடுப்பதால் தான் துளசி நமது வீடுகளில் வளர்க்கப்படுகிறது. துளசி இருக்கும் இடத்தில் பூச்சிகளும், கொசுக்களும் இருக்காது.

துளசி உடலுக்கு அதிகப்படியான வெப்பத்தை கொடுக்கக்கூடியது என்ற தவறான கருத்தும் உள்ளது. ஆனால், நமது வானிலைக்கு ஏற்ப நமது உடலின் வெப்பநிலையை பராமரிக்கும் தன்மை துளசிக்கு உள்ளது. நீரிழிவு, ரத்த அழுத்தம், பருமன் ஆகிய உலகுக்கு மிக அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய இந்த மூன்று நோய்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் துளசிக்கு உள்ளது.

துளசியை நாம் தினமும் எடுத்துக்கொள்ளும்போது, நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மலச்சிக்கல், வாயுத்தொல்லை ஆகியவற்றை தடுக்கிறது. கிருமி நாசினியாகி சருமத்துக்கு உதவுகிறது. சரும வியாதி உள்ளவர்கள் இதை வாய் வழியாக எடுத்துக்கொள்ளும்போது, வாய் துர்நாற்றம் இருக்காது. வியர்வையால் ஏற்படும் உடல் துர்நாற்றமும் இருக்காது.

ஓமவல்லி இலைகள் – 2

துளசி இலைக்கு சமமான மூலிகை. வாயுத்தொல்லையை சரிசெய்யும். வயிற்றில் இருக்கக்கூடிய நச்சுக்களுக்கு தீர்வு கொடுக்கும். உடல் சோர்வு, உடல் வலி, மூட்டு வலி, நரம்பு வலி, கை-கால் வலி ஆகிய எந்தை பிரச்னையும் ஏற்படாது.

சோம்பு – ஒரு ஸ்பூன்

(செரிமான கோளாறுகளை சரிசெய்யும், வயிற்றில் இருக்கக்கூடிய வாயுக்கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கலை போக்கும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும். கை-கால் வலி, மூட்டு வலி, உடல் சோர்வை போக்கும்)

செய்முறை

பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அதை நன்றாக கொதிக்க விடவேண்டும்.

அதில் எடுத்து வைத்துள்ள இலைகளை நன்றாக அலசி சுத்தம் செய்து சேர்க்க வேண்டும். பின்னர் சோம்பையும் சேர்த்து நன்றாக ஒன்றரை டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் அளவு கொதிக்க விடவேண்டும்.

பின்னர் வடி கட்டி அப்படியே பருகலாம்.

சர்க்கரை நோய் இல்லாதவர்கள் இதனுடன், தேன், கருப்பட்டி, வெல்லம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

துளசி நரம்பு கோளாறுகளை சரிசெய்யும், சுவாச மண்டலத்தை சரிசெய்து ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படாது. அலர்ஜியை சரிசெய்யும். சரும நோய்கள் குணமாகும். முகப்பருக்கள் நீங்கும்.

காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மிகவும் நல்லது. இரவு உறங்கச்செல்லும் முன்னரும் பருகலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் பருகலாம். உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கும் ஒரு பானம்தான். எவ்வித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

அடுத்த செய்தி