உடல் ஆரோக்கியத்துக்கு பயன் தரும் 20 இயற்கை மருத்துவக் குறிப்புகள்
Mar 14, 2023, 03:32 PM IST
உடல் ஆரோக்கியத்துக்கு பயன் தரும் 20 இயற்கை மருத்துவக் குறிப்புகள் குறித்து இங்கு அறிந்து கொள்ளலாம்.
வீட்டில் இருக்கும் சில பொருட்களைக் கொண்டே உடலில் ஏற்படக்கூடிய சிறிய உபாதைகளைக் குணப்படுத்தலாம்.
1. கறிவேப்பிலை, இஞ்சி, சீரகம் இவற்றைத் தண்ணீரில் கொதிக்கவைத்து, ஆறவைக்க வேண்டும். அந்த நீரை வடிகட்டி குடித்தால் அஜீரணத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
2. மணத்தக்காளி கீரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.
3. நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வத்தல் சாப்பிட்டு வர இளம் நரை மறையும்.
4. குங்குமப்பூவை, தாய்ப்பாலில் குழைத்து கண்மீது பற்றுஇட கண் நோய் குணமாகும்.
5. பாதாம்பருப்பில் வைட்டமின் ‘ஈ' சத்து அதிக அளவில் உள்ளது. தினமும் 10 முதல் 15 பாதாம் பருப்புகள் சாப்பிடுவதன் மூலம் சருமம், தலைமுடி, நகங்கள் ஆகியவை பளபளப்பாகும்.
6. ஆப்பிள் பழம், தேன், ரோஜா இதழ், குங்குமப்பூ, ஏலக்காய் ஆகியவை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வர சுகப்பிரசவம் ஆகும்.
7. கர்ப்பிணிப் பெண்கள் இரவு படுக்குமுன் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்ந்து சாப்பிட்டால் குழந்தை, சுகப்பிரசவம் ஆகும்.
8. குழந்தைகளுக்கு ஏற்படும் தொடர் இருமலுக்கு சிறிது பெருங்காயத்தை வெந்நீரில் கரைத்து தெளிந்த நீரை கொடுத்து வர, இருமல் குறையும்.
9. கோவைப்பழம் சாப்பிட தீராத பல் வலிக்கு நிவாரணம் பெறலாம்
10. தொண்டையில் சதை வளர்ச்சி உள்ளவர்கள் ஜாதிக்காயுடன் கடுக்காய், சித்தரத்தை, திப்பிலி ஆகியற்றை சம அளவு எடுத்துக் கொண்டு, வால்மிளகு இரண்டு பங்கு கூட்டி, நன்கு பொடியாக்கிக் கொள்ளவும். அதில் 2-4 சிட்டிகை அளவு தேனில் கலந்து உட்கொண்டு வரலாம். இப்படி தொடர்ந்து 2 அல்லது 3 மாதங்கள் செய்து வர தொண்டையில் சதை வளர்ச்சி குணமாகும்.
11. அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்,வயிற்றுவலி போன்றவற்றைக் குறைக்க மிளகு அருமருந்து. உணவில் மிளகைச் சேர்த்துக் கொள்வதால் இவை ஏற்படாமல் தவிர்க்கப்படும். ஏற்பட்டால் குணமாகும்.
12. மிளகு சாப்பிடுவதால் வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கிறது. அது வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்னைகளைச் சரிசெய்கிறது. ஆனால் அல்சர் உள்ளவர்கள் மிளகை அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது.
13. வெந்தயம் வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும். சிறிதளவு வெந்தயத்தை வறுத்து, சோம்பும், உப்பும் சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
14. கசகசாவை நன்கு ஊறவைத்து அரைத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் சீதபேதி கட்டுப்படும்.
15. சர்க்கரை நோய் உள்ளவர்கள் பாகற்காய், அவரைப்பிஞ்சு ஆகியவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.
16. வெந்தயத்தை ஊறவைத்து அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் குறையும்.
17. தினமும் ஒரு கைப்பிடி அளவு வால்நட்ஸ் சாப்பிட்டால் சருமம் பளபளப்பாகும். இதிலும் வைட்டமின் ‘ஈ' சத்து நிறைந்துள்ளது.
18. தினமும் கையளவு நாவல்பழங்களைச் சாப்பிட்டால், சிறுநீர்க்குழாயில் ஏற்படும் தொற்று குணமாகும். சிறுநீர்க்குழாயில் காணப்படும் பாக்டீரியாவை அழிக்கக்கூடிய ராசயனங்கள் நாவல்பழத்தில் உள்ளன. .நாவல்பழம் அடிக்கடி சாப்பிட, சர்க்கரை நோய் கட்டுப்படும்.
19. துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்து ஊறவிட்டு, குளித்து வந்தால் முகம் அழகு பெறும்
20. தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி அல்லது தேன்காய் விதை ஒன்றை சாப்பிட்டால் சர்க்கரை நோய் விரைவில் கட்டுக்குள் வரும்.
டாபிக்ஸ்