ஆரோக்கிய குறிப்புகள் : இந்த உணவுகளை சாப்பிட்டால் இத்தனை ஆபத்தா? அது என்னவென்று பாருங்கள்! எச்சரிக்கையாக இருங்கள்!
Updated Jun 17, 2025 04:22 PM IST

ஆரோக்கிய குறிப்புகள் : அது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், பல்வேறு வியாதிகள் வராமலும் தடுக்கிறது. அது கேன்சர் உள்ளிட்ட வியாதிகளும் ஏற்படாமல் காக்கிறது.
சில உணவுகளில் உங்கள் உடலுக்கு கேன்சரை வரவைக்கும் ஆபத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே நாம் எப்போதும் சரிவிகித மற்றும் பல்வேறு உணவு முறையை பின்பற்ற வேண்டும். அது உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், பல்வேறு வியாதிகள் வராமலும் தடுக்கிறது. அது கேன்சர் உள்ளிட்ட வியாதிகளும் ஏற்படாமல் காக்கிறது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி
பதப்படுத்தப்பட்ட இறைச்சி வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது உடலில் கேன்சர் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதில் பேக்கான், சாஸேஜ் மற்றும் ஹாட் டாக்ஸ் ஆகியவை முக்கிய இடம் வகிக்கின்றன. இதை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது அது குடல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கிறது.
சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியை அதிகம் எடுத்துக்கொண்டால், அதுவும் அதிக வெப்பநிலையில் சமைக்கப்பட்டது என்றால், அதற்கும் குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வறுத்த உணவுகள்
அதிக வெப்பநிலையில் சமைத்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகளில் கார்சினோஜெனிக் வேதிப்பொருட்கள் உருவாகி, அவை கேன்சரை ஏற்படுத்துகின்றன.
சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள்
சர்க்கரை அதிகம் நிறைந்த குளிர்பானங்கள், சோடா சேர்த்து செய்யப்படும் குளிர் பானங்களும், உடல் எடை அதிகரிக்க வழிவகுப்பவை. அதுவும் பல்வேறு வகை கேன்சரை ஏற்படுத்த முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆல்கஹால்
அதிகளவில் ஆல்கஹால் நீங்கள பருகும்போது, அது பல்வேறு வகை கேன்சரையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகளில், பிரிசர்வேடிவ்களும், அடிடிவ்களும் அதிகளவில் கலந்துள்ளன. இவையும் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கின்றன.
உப்பு நிறைந்த மற்றும் ஊறவைத்த உணவுகள்
உப்பு நிறைய சேர்த்து ஊறவைத்த உணவுகள், ஊறுகாய், மசாலாக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ளும்போது, வயிற்றுப்பகுதியில் கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
கிரில் செய்யப்பட்ட உணவுகள்
அதிக வெப்பத்தில் கிரில் செய்யப்படும் உணவுகள், குறிப்பாக இறைச்சிகளில் அதிகளவில் ஹெட்ரோ சைக்ளிக் அமைன்கள் உருவாகி, அவையும் உடலில் கேன்சர் வரும் வாய்ப்பை அதிகரித்துவிடும்.
செயற்கை இனிப்பூட்டிகள்
செயற்கை இனிப்பூட்டிகளுக்கும், கேன்சருக்கும் தொடர்பு உள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே செயற்கை இனிப்பூட்டிகள் நிறைந்த உணவை உட்கொள்ளாதீர்கள்.
டிரான்ஸ் ஃபேட்கள்
அதிகளவில் டிரான்ஸ் ஃபேட்கள் அடிக்கடி எடுத்துக்கொண்டாலும் கேன்சர் ஏற்படும். அது ஹைட்ரோஜினேட்டட் எண்ணெய்களில் அதிகம் உள்ளது. அதை உட்கொள்வதால் கேன்சர் மடுமல்ல பல்வேறு வியாதிகளும் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இதய நோய்கள், சில வகை புற்றுநோய்களும் ஏற்பட வாய்ப்புள்ளது.
டாபிக்ஸ்