Watermelon Seeds Benefits: 'இனி தூக்கி எறியாதீங்க'..தர்பூசணி விதைகளை ஆண்கள் சாப்பிட்டால் இத்தனை பயன்களா?
Apr 15, 2024, 07:58 PM IST
Watermelon Seeds Benefits: கோடைக் காலத்தில் கட்டாயம் சாப்பிடவேண்டிய பழங்களுள் மிக முக்கியமானதாக உள்ளது தர்ப்பூசணி. அதிலும், குறிப்பாக தர்பூசணி விதைகளில் ஆண்களுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதுபற்றி தெரிந்துகொள்வோம்.
கோடை காலத்தில் தர்பூசணி பழம் மனிதனுக்கு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. இவற்றை சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கிறது. மேலும்.. பல ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கின்றன. ஆனால் பலர் செய்யும் தவறு என்னவென்றால், தர்பூசணியை சாப்பிட்டு அதன் விதைகளை துப்புவதுதான். இந்த விதைகளில் ஆண்களுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு ஆணும் தனது இல்லற வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கு அவர்களின் உடலில் எந்த பலவீனமும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் அவசியம். பொதுவாக, ஒரு ஆண் தந்தையாக விரும்பினால், அவறது விந்தணு எண்ணிக்கை துல்லியமாக இருக்க வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் பலவீனமாகிறது மற்றும் திருமண வாழ்க்கை கசப்பாக மாறும். அத்தகைய சூழ்நிலையில் தர்பூசணி விதைகள் கண்டிப்பாக விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.
பொதுவாக கோடை காலம் என்றாலே நம் நினைவுக்கு வருவது தர்பூசணி தான். இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. கோடையில் இதை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாது. இது இதயகோளாறு, கண் பிரச்னைகள் மற்றும் புற்றுநோய் ஆபத்துக்களை குறைக்கும் தன்மைகொண்டது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. இந்த பழத்தின் நன்மைகள் பற்றி பலரும் அறிந்திருக்கிறார்கள். ஆனால் இந்த பழத்தில் உள்ள விதைகளின் மற்ற நன்மைகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். திருமணமான ஒவ்வொருவரும் தர்பூசணி விதைகளை சாப்பிட வேண்டும் . இதனால் அவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.
ஆண்களுக்கு தர்பூசணி விதைகளின் நன்மைகள்
தர்பூசணி விதைகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள சிட்ருலின் ஆண்களின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தர்பூசணி விதைகளில் உள்ள துத்தநாகம் ஆண்களின் இனப்பெருக்க அமைப்புக்கு சிறந்தது. இது விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
தர்பூசணி விதையில் உள்ள குளுடாமிக் அமிலம், மாங்கனீசு, லைகோபீன், லைசின், அர்ஜினைன் ஆகியவை ஆண்களின் பாலியல் செயல்திறனை மேம்படுத்துகின்றன. ஆண்கள் தர்பூசணி விதைகளை சாப்பிட்டால், அது அவர்களின் கருவுறுதலை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், செரிமானத்தையும், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. விந்தணு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தின் விதைகளை சாப்பிட வேண்டும்.
தர்பூசணி விதையில் உள்ள சத்துக்கள்
தர்பூசணி விதைகளில் புரதம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம், தாமிரம் போன்ற முக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது தவிர, உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் ஆகியவற்றை வழங்குகிறது.
தர்பூசணி விதைகளை எப்படி சாப்பிடுவது?
தர்பூசணி விதைகளை அப்படியே கூட சாப்பிடலாம். அவற்றை நன்கு வெயிலில் காயவைத்து சாப்பிடுவது மற்றொரு முறை. நீங்கள் விரும்பினால் அவற்றை வறுத்தும் சாப்பிடலாம்.. ஆனால் தர்பூசணி விதைகளை நீங்கள் எப்படி சாப்பிட்டாலும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே இந்த கோடையில் தர்பூசணி சாப்பிட்டால்.. விதைகளை நீக்கவே வேண்டாம். சாப்பிட்டு பயன் பெறுங்கள்..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்