தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Happy New Year 2024: புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்ல ரெடியா ?- பிடிச்சவங்களுக்கு இதை சொல்ல மறந்திடாதீர்கள்..!

Happy New Year 2024: புத்தாண்டுக்கு வாழ்த்து சொல்ல ரெடியா ?- பிடிச்சவங்களுக்கு இதை சொல்ல மறந்திடாதீர்கள்..!

Karthikeyan S HT Tamil

Dec 14, 2023, 09:00 AM IST

google News
New Year Wishes For General: 2023 விடைபெறும் நேரத்தில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டுக்கு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க நீங்கள் அனுப்பக்கூடிய வாழ்த்துகள் இங்கே உள்ளன.
New Year Wishes For General: 2023 விடைபெறும் நேரத்தில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டுக்கு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க நீங்கள் அனுப்பக்கூடிய வாழ்த்துகள் இங்கே உள்ளன.

New Year Wishes For General: 2023 விடைபெறும் நேரத்தில் பிறக்கப்போகும் ஆங்கில புத்தாண்டுக்கு உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க நீங்கள் அனுப்பக்கூடிய வாழ்த்துகள் இங்கே உள்ளன.

கிட்டதட்ட 2023 ஆம் ஆண்டின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டோம். புதிய ஆண்டு பிறக்கப்போகும் நன்னாளில் நம் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது நீண்ட காலமாக பின்பற்றி வரும் நடைமுறையாகும். நண்பர்கள், உறவினர்கள், உடன் பணியாற்றுபவர்கள் என பலருக்கும் வாழ்த்து தெரிவிப்பது வழக்கமான ஒன்று தான். 

முன்பெல்லாம் புத்தாண்டு என்றாலே வண்ண வண்ண வாழ்த்து அட்டைகளை அனுப்பி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்வோம். ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் எல்லாமே செல்போன் மாயமாகிவிட்டது. இதனால் எஸ்எம்எஸ், வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் என பல தளங்களில் வாழ்த்து பரிமாற்றம் பரவி காணப்படுகிறது.

பல மாற்றங்கள் நம்மிடையே பரவி காணப்பட்டாலும் புத்தாண்டு வாழ்த்து கூறுவது உறவுகளை வலுப்படுத்தவும் சமூக உணர்வை பிரதிபலிப்பதாகும். இது ஒருவருக்கொருவர் அன்பை பகிர உதவும் மிகப்பெரிய பிணைப்பு ஆகும். 

ஒருவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதன் மூலம், நீங்கள் அவர்களைப் பற்றி அக்கறை காட்டுகிறீர்கள் என்பதையும், உங்கள் வாழ்க்கையில் அவர்களின் இருப்பை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதையும் காட்டுகிறீர்கள். இந்த புத்தாண்டில் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு வாழ்த்த உதவும் பொதுவான சில வார்த்தைகள் இங்கே..!

2024 புத்தாண்டு வாழ்த்துக்கள்:

1.புத்தாண்டு என்பது மகிழ்ச்சியை மட்டுமல்ல, நம் கனவுகளை நிறைவேற்றும். நம்பிக்கையுடன் அல்லது நம் வாழ்வின் புதிய தொடக்கத்தை மகிழ்ச்சியடையச் செய்கிறது. எனவே, புத்தாண்டு அனைவருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

2.எண்ணங்கள் ஈடேறும் ஆண்டாக இவ்வாண்டு உங்களுக்கு நல்ல ஆண்டாக அமையட்டும். இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

3.இந்த புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும். மாற்றங்கள் மலரட்டும். எல்லோருடைய வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

4. பிறக்கும் புத்தாண்டு அனைவருக்கும் தடைக் கற்களை தகர்த்தெறியும் வெற்றி ஆண்டாக அமையட்டும். அனைவருக்கும் மகிழ்சி மிகு புத்தாண்டு வாழ்த்துக்கள்..

5. புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வெற்றி, மகிழ்ச்சி, சந்தோஷம் மற்றும் வளம் ஆகியவை கிடைக்கட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள் 2024.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி