தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  க்ரே ஹேருக்கு குட் பாய்! வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடா? கவலை வேண்டாம் இதோ சில ஹேக்குகள்!

க்ரே ஹேருக்கு குட் பாய்! வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடா? கவலை வேண்டாம் இதோ சில ஹேக்குகள்!

Priyadarshini R HT Tamil

Oct 13, 2024, 01:48 PM IST

google News
க்ரே ஹேருக்கு குட் பாய் கூறலாம். ஆனால் தற்காலிகமாகத்தான். வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடுபடுகிறீர்களா? எனில் கவலையே வேண்டாம். இதோ இங்கு சில ஹேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
க்ரே ஹேருக்கு குட் பாய் கூறலாம். ஆனால் தற்காலிகமாகத்தான். வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடுபடுகிறீர்களா? எனில் கவலையே வேண்டாம். இதோ இங்கு சில ஹேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

க்ரே ஹேருக்கு குட் பாய் கூறலாம். ஆனால் தற்காலிகமாகத்தான். வெளியில் தெரியும் வெள்ளை முடியை மறைக்க படாதபாடுபடுகிறீர்களா? எனில் கவலையே வேண்டாம். இதோ இங்கு சில ஹேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை முடியில் வெளியில் தெரியும்போது, அது தெரிவது குறித்து வெட்கமாக உள்ளதா? அதை மறைக்க படாதபாடு படுகிறீர்களா? எனில் அதை மறைக்கச் செய்ய சில ஹேக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருக்கிறீர்கள், வெளியில் துருத்திக்கொண்டு வெள்ளை முடி தெரிகிறதா? அதை என்ன செய்து மறைக்கலாம். இதோ ஐடியாக்கள். இவை நிரந்த தீர்வுகள் கிடையாது. ஆனால் உங்களுக்கு ஒரு தற்காலிக பலனைத்தரும்.

தற்காலிக கன்சீலர்

உங்களின் வெள்ளை முடியை தற்காலிகமாக மறைக்க, தற்காலிக கன்சீலர்கள் உதவும். இதை நீங்கள் உங்கள் தலையில் வெள்ளை முடி தெரியும் இடத்தில் உபயோகிக்கலாம். இது அப்போதைக்கு முடிக்கு கருமை நிறத்தைத் தரும்.

ஷாம்பூ

குளித்து சில மணி நேரங்கள் வரை உங்கள் தலைக்கு கருமை நிறத்தை இந்த ஷாம்பூ கொடுக்கும். ஆனால் இதில் குளிக்கும்போது உங்களுக்கு நிரந்தரமான கருமை நிறம் கிடைக்காது. ஆனால் நீங்கள் இதை பயன்படுத்தும்போது, அது உங்கள் தலைமுடியின் வெள்ளை நிறத்தை மறைத்துக் காட்டும்.

மருதாணி

மருதாணி இயற்கை ஹேர் டை எனலாம். உங்கள் கூந்தலுக்கு இயற்கை நிறத்தைக் கொடுக்கும். உங்கள் கூந்தலும் சிவப்பு மற்றும் பிரவுன் நிறத்தைத் தரும். இது உங்கள் தலைமுடி மொத்தத்துக்கும் நிறத்தைக்கொடுப்பதுடன், ஆரோக்கியத்தையும் அள்ளி வழங்கும்.

காபித்தூள்

தண்ணீரை கொதிக்கவைத்து அதில் காபித்தூளை சேர்த்து கலந்து நரைமுடிகள் உள்ள இடத்திலும், முடியிலும் அப்ளை செய்தால், அது வெள்ளை முடிக்கு கருமை நிறத்தைத் தரும்.

தலை மஸ்காரா

தலை மஸ்காரா என்பது தற்காலிகமான தீர்வாகும். இது உங்கள் வெள்ளை முடியை அந்த நேரத்திற்கு மட்டும் கருமையாகக் காட்டும். இதை தடவிக்கொண்டு வெளியில் சென்றுவிட்டு, நீங்கள் வந்து தலைமுடியை அலசிவிட்டால் நிறம் மாறிவிடும். நீங்கள் இதை தற்காலிகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். தலை முமுமைக்கும் வண்ணத்தையும் மாற்ற வேண்டும் என்ற தேவையில்லை.

ஸ்பிரே

உங்கள் தலைமுடியின் இடையில் உள்ள நரை முடிகளையும், நீங்கள் இந்த ஸ்பிரே மூலம் மறைத்துவிட முடியும். உங்கள் தலைமுடியின் அடர்த்தியையும் இது காட்டும். உங்கள் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். உங்கள் தலைக்கு இந்த ஸ்பிரே அடித்தால் நீங்கள் நிகழ்ச்சிகளுக்கு உங்களை தயார்படுத்திக்கொள்ள உதவும். உங்கள் முடியை அடர்த்தியாக்கி, கருமையாக்கிக் காட்டும்.

க்ரே கவரேஜ் ஹேர் ஜெல்

உங்கள் தலைமுடியை தற்காலிகமாகக் கருப்பாக காட்டக்கூடிய ஜெல்கள் உள்ளது. இவை நிரந்தர தீர்வு கிடையாது. இதில் கொஞ்சம் வண்ணம் கலந்திருக்கும். அது உங்கள் நரைக்கு திரை போட உதவும்.

பீட்ரூட் மாஸ்க்

பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து, அதில் காபித்தூள், மருதாணி பொடி, நெல்லிக்காய் மற்றும் அவுரிப்பொடி கலந்து ஒரு ஹேர் மாஸ்க் செய்து அதையும் தலையில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவைத்து குளிக்கலாம். இது உங்களுக்கு சில வாரங்கள் வரை நரை முடி வெளியில் தெரியாமல் காக்கும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி