தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Global Warming : மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீடு! அறிவுறுத்தும் நிபுணர்கள்!

Global Warming : மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீடு! அறிவுறுத்தும் நிபுணர்கள்!

Priyadarshini R HT Tamil

Jun 14, 2024, 12:35 PM IST

google News
Global Warming : மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீட்டால் என்ன தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க என்ன செய்யலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
Global Warming : மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீட்டால் என்ன தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க என்ன செய்யலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

Global Warming : மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீட்டால் என்ன தீமைகள் ஏற்படுகின்றன. அவற்றை தடுக்க என்ன செய்யலாம் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

புவிவெப்பமடைதல் 

புவிவெப்பமடைதலை கட்டுப்படுத்த (நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு அளவை குறைக்க) இந்தியா மீண்டும் இயற்கை விவசாயத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

உலகிலேயே புவிவெப்பமடைதலை ஏற்படுத்தும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியேற்றத்தில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

2020ல் கரியமிலவாயுவை விட மோசமான புவிவெப்பமடைதல் பாதிப்பை ஏற்படுத்தும் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியேற்றத்தில் இந்தியாவின் பங்கு 11 சதவீதமாக உள்ளது. 16 சதவீத வாயுவை வெளியேற்றி சீனா முதலிடத்தில் உள்ளது.

12.6.24 அன்று,"Earth System Science Data" பத்திரிக்கையில் வெளியான ஆய்வுக் கட்டுரையில், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு அதிகளவில் வெளியாக, செயற்கை உரங்களின் பயன்பாடே முக்கிய காரணம் எனத் தெரியவந்துள்ளது.

நைட்ரஸ் ஆக்ஸைட்  

2022ம் ஆண்டில், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியேற்றம் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த அளவைக் காட்டிலும், 25 சதவீதம் அதிகமாகியுள்ளது. அதே காலகட்டத்தில் (2022) கரியமிலவாயுவின் அளவு 417 ppm (parts per million) என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதால், அதை குறைக்க மட்டுமே போதிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏனெனில், கரியமிலவாயுவின் உயர்வு என்பது நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு உயர்வைக் காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகம் உயர்ந்துள்ளது.

ஆனாலும், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு நாளுக்கு நாள் உயர்ந்து வருவதாலும்,வளி மண்டலத்தில் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு அதிக நாட்கள் நீடிப்பதாலும், நிபுணர்கள் அதன் அளவையும் கட்டுக்குள் வைத்து புவிவெப்பமடைதலைக் குறைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

என்ன நடந்துள்ளது பாருங்கள்

கடந்த 40 ஆண்டுகளில், நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவின் வெளியீடு 40 சதவீதம் உயர்ந்துள்ளது. (ஆண்டுக்கு 3 மில்லியன் மெட்ரிக்டன் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு பயன்பாடு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது)

1980க்குப் பின்னர், 2020-22 இடைப்பட்ட காலத்தில் தான் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயு வெளியீடு மிக அதிக அளவை எட்டியுள்ளது.

உரங்கள் 

நைட்ரஜன் கலந்த அமோனியா போன்ற உரங்களை அதிகமாக பயன்படுத்துவது, விலங்கு சாணங்களின் பயன்பாடு, போன்றவைகளால் (Animal manure) கடந்த 10 ஆண்டுகளில், செயற்கையாக மனிதர்களின் நடவடிக்கையால் நைட்ரஸ் ஆக்ஸைட் வாயுவின் வெளியீடு 74 சதவீதம் உயர்ந்துள்ளது.

பசுமைக்குடில் வாயுக்களின் வெளியீட்டில் இது 6.4 சதவீதம் என இருந்து, தற்போதைய புவிவெப்பமடைதலில் 0.1°C உயர, அது காரணமாக இருந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை கருத்தில்கொண்டாவது, இந்தியா பயிர்களின் பயன்பாட்டையும் (Cropping systems), உற்பத்தி முறைகளையும் (Production Practices) மாற்றியமைக்க முன்வர வேண்டும் என Centre of Sustainable Agriculture இயக்குநர் ராமஆஞ்சனேயலு போன்ற நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

செயற்கை வேளாண் உரங்கள் பயன்பாடு புவிவெப்பமடைதலை அதிகரிப்பதால், பருவநிலை மாற்ற பாதிப்புகளை (Climate Change) குறைக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டாவது இந்தியா அல்லது தமிழகம் இயற்கை வேளாண் முறைக்கு திரும்புவது சிறப்பாக இருக்கும்.

தமிழகத்தில் பசுந்தாள் உரங்களை பயன்படுத்துவது மட்டுமன்றி, இயற்கை வேளாண்மைக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

நன்றி மருத்துவர். புகழேந்தி.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி