Girl Baby Names : அழகான, கவர்ச்சிகரமான பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன! தேர்வு செய்யுங்கள்!
Aug 27, 2024, 02:30 PM IST
Girl Baby Names : அழகான, கவர்ச்சிகரமான பெண் குழந்தைகளின் பெயர்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து உங்கள் செல்ல இளவரசிக்கான பெயரை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
ஒருவருக்கு பெயர்தான் பெரிய அடையாளம்
இன்றும் நாம் பெரிய சாதனையாளர்களின் பெயர்களைக்கூறி அவர்களைப்போல் நீ வளரவேண்டும். இவர்களைப் போல் நீ இந்தத்துறையில் சாதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறோம். நமது பெயரை நிலைக்கச் செய்துவிட்டாலே அது நமது ஒட்டுமொத்த பரம்பரையின் அடையாளமாகவே மாறிவிடும்.
அந்த வகையில் ஆளுமைகளை பல்வேறு துறைகளிலும், அவரது வாரிசுகளும் அவர்களின் பெயர்களாலே அறியப்படுவதையும் பார்த்திருக்கிறோம். எனவே பெயர் ஒரு மனிதனின் பெரிய அடையாளம். நாம் சாதிக்கும்போது அந்தப் பெயர் நமது ஒட்டுமொத்த குடும்பத்தின் அடையாளமாகவே மாறிவிடும்.
எனவே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்கும்போது மிகவும் கவனம் தேவை. நீங்கள் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் சக்தி வாய்ந்ததாக இருக்கவேண்டும். அப்போதுதான் அந்த பெயரின் பலனும் அவர்களின் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். குழந்தைகளுக்கு சிறிய பெயர்களை வைத்து அதை முழுதாக கூறி அழைக்கும்போதுதான் அந்த பெயருக்குரிய முழுப்பலனும் கிடைக்கிறது. ஏனெனில் ஒவ்வொரு பெயரும் ஒரு அர்த்தமும், ஆற்றலும் உண்டு.
இந்தப்பெயர்களை உங்கள் குழந்தைகளுக்கு சூட்டி அவர்களின் வாழ்வு மேம்பட உதவுங்கள். ஹெச்.டி தமிழ் தினமும் இதுபோன்ற பெயர்களை அர்த்தங்கள் மற்றும் எழுத்துக்கள் அடிப்படையில் ஆண், பெண் குழந்தைகளின் பெயர்களை தொகுத்து வழங்கிவருகிறது. இன்னும் உங்களுக்கு அதிக பெயர்கள் வேண்டுமெனில் எங்களுடன் இணைந்திருங்கள்.
ஜாரா
ஜாரா என்றால் விடியலைப்போல் பிரகாசமானவர் என்று பொருள். உங்கள் செல்ல மகள் உங்கள் வாழ்வில் விடியலைப்போன்ற பிரகாசமானவர். உங்கள் வாழ்வின் விடியல் என்று பொருள். மலரும் மலர், ஒளி, இளவரசி, மிளிர்கிற, பளபளப்பான, மலரும் என எண்ணற்ற பொருள்களைக் கொண்ட பெயர்.
நிஷா
நிஷா என்றால் இரவு, இருள் என்று பொருள். சமஸ்கிருதத்தில் நிஷா என்றால் இரவு என்று பொருள். நிஷா, ராத்திரி என்ற பெண் தெய்வத்தின் பெயராக இந்து மதம் குறிப்பிடுகிறது. அவர்தான் இரவில் உறங்கும் உலகை காக்கும் கடவுளாவார். இவர் சூரியக்கடவுளின் குழந்தை என்று இந்து புராணங்கள் கூறுகின்றன. அழகான, அற்புதங்கள் நிறைந்த இரவு வானம் என்பதைக் குறிக்கிறது.
அர்ஷியா
அர்ஷியா என்றால் சொர்க்கம் என்று பொருள். உங்கள் மகள் உங்கள் வீட்டுக்கு சொர்க்கத்தை கொண்டு வந்தவர் என்பது இதற்கு பொருள். வானத்தில் ஜொலிப்பவள். மதிப்புமிக்கவள் என்பதைக் குறிக்கிறது. இது அரபியில் இருந்து தோன்றிய பெயர். முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு பரவலாக வைக்கப்படும் பெயர்.
நித்யா
நித்தியமான, மாறாத, அழியாத, எப்போதும் இருக்கக்கூடிய என்று பொருள். இந்தப்பெயருக்கு அன்றாட பூஜைகள், ஞானம், அறிவு, கருணை ஆகிய அர்த்தங்களும் உள்ளன. இந்து கடவுள் லட்சுமிதேவியைக் குறிக்கிறது. இந்தப்பெயர் உங்கள் பெண் குழந்தைக்கு மிகவும் ஏற்ற பெயராக இருக்கும்.
த்விஷா
த்விஷா, த்விஷா என்றால் ஒளி, வெளிச்சம் என்று பொருள். உங்கள் வாழ்வில் ஒளியை நிரப்பியவர் உங்கள் மகள் என்ற அரத்தத்தை குறிக்கிறது இந்தப்பெயர். மகிழ்ச்சியானவர், அறிவானவர் என்பதையும் குறிக்கிறது.
சமைரா
சமைரா என்றால் பொழுதுபோக்கக்கூடிய துணை, மயக்கும் தன்மை கொண்டவர் என்று பொருள். இது சமஸ்கிருதத்தில் இருந்து பெறப்பட்ட பெயர். கவர்ச்சிகரமான அல்லது அழகான போன்ற அர்த்தங்களைக் கொண்டது. இந்தப்பெயரைக் கொண்டவர்கள் ஞானமுள்ளவர்களாக, சுதந்திரமானவர்களாக மற்றும் கிரியேட்டிவானவர்களாக இருப்பார்கள்.
அவனி
அவனி என்றால், பூமி மற்றும் இயற்கை என்று பொருள். இந்து கடவுள் பூமாதேவியின் பெயரைக் குறிப்பிடுகிறது. அவனி என்றால் நதி என்றும் பொருள். உங்கள் மகள் நதிபோல் ஓடிக்கொண்டு இருப்பாள்.
ஆர்ணா
ஆர்ணா என்பது இந்துக்கடவுள் லட்சுமி தேவியின் பெயராகும். இந்தப்பெயரை உங்கள் பெண் குழந்தைகளுக்கு வைத்தால் அவர்கள் செல்வத்தில் சிறந்து விளங்குவார்கள். கல்வி, அறிவு, செல்வம் உங்களை மகளை சூழவேண்டுமெனில் அவருக்கு இந்தப்பெயரை வைத்து மகிழுங்கள்.
கைரா
கைரா என்றால் சூரியன், அரியனை அல்லது சிம்மாசனம் என்று பொருள். கிரேக்கத்தில் இதற்கு கடவுள் என்று அர்த்தம். குரே என்றால் கிரேக்கத்தில் பெண் என்று பொருள், அந்த வார்த்தையில் இருந்து கைரா என்பது தோன்றியது. பெர்சியப் பெயரின் கிரேக்க வடிவம்தான் கைரஸ். சூரியன் என்ற அர்த்தம் கொண்டது.
அன்வி
அன்வி என்றால் அன்பானவர், அன்விட்டா என்ற சமஸ்கிருத வார்த்தையில் இருந்து தோன்றிய பெயர் அன்வி. ஆன்மா, வாழ்வின் சுவாசம் என்பதை குறிக்கிறது. இந்தப்பெயரைக் கொண்டவர்கள் ஆற்றல் நிறைந்தவர்களாகவும், கிரியேட்டிவானவர்களாகவும், பல்துறை வித்தகர்களாகவும் இருப்பார்கள்.
டாபிக்ஸ்