தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Garlic Pickle : உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்யலாம் பூண்டு ஊறுகாய்! தயிர் சாதத்துடன் சாப்பிட சொர்க்கம்!

Garlic Pickle : உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்யலாம் பூண்டு ஊறுகாய்! தயிர் சாதத்துடன் சாப்பிட சொர்க்கம்!

Priyadarshini R HT Tamil

Jun 29, 2024, 12:35 PM IST

google News
Garlic Pickle : உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்யலாம் பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி? தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.
Garlic Pickle : உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்யலாம் பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி? தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

Garlic Pickle : உச்சுக்கொட்ட வைக்கும் சுவையில் செய்யலாம் பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி? தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

Garlic Pickle : இந்தியா முழுவதும் பிரபலமானது பூண்டு ஊறுகாய். இதன் காரம் மற்றும் துவர்ப்பு சுவை அலாதியானது. பல முறைகளில் இந்த பூண்டு ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது. இதில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இரண்டும் கலந்து செய்யலாம்.

வெந்தயம் மற்றும் கடுகை வறுத்து, பொடி செய்து போட்டால், நல்ல மணமும், சுவையும் கிடைக்கும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறை உடனடியாகச் செய்வது. இதற்கு மசாலாப் பொடிகள் மற்றும் தாளிப்பு தேவைப்படுகிறது.

தேவையான பொருட்கள்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பூண்டு – 100 கிராம் (தோல் நீக்கி சுத்தம் செய்தது)

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

மிளகாய் தூள் – 4 ஸ்பூன்

புளிக்கரைசல் – கால் கப்

வெல்லம் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

கடுகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

வெந்தயம் – அரை ஸ்பூன்

வரமிளகாய் – 4

பெருங்காயத்தூள் – சிறிதளவு

செய்முறை

பூண்டின் தோலை உரித்து தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். சிறிய பூண்டுகளை பயன்படுத்துவதுதான் ஊறுகாயின் சுவையை அதிகரிக்கும். புளியை ஊறவைத்துக்கொள்ளவேண்டும்.

பூண்டை வறுப்பது எப்படி?

ஒரு கடாயில் எண்ணெய் சூடாக்கி, பூண்டை வறுக்கவேண்டும். குறைவான தீயில் எப்போதும் அடுப்பை வைத்துக்கொள்ளவேண்டும். பூண்டை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மூடிவைத்து வறுக்கும்போது, அது வேகமாக சிவந்துவிடும்.

இதை அவ்வப்போது கிளறவேண்டும். அப்போதுதான் அனைத்து புறங்களிலும் பொன்னிறமாகும். பூண்டு பொன்னிறமானவும், அதை அரித்து எடுத்து தனியாக ஒரு பவுலில் வைத்துக்கொள்ளவேண்டும்.

ஊறுகாய் தயாரிப்பது எப்படி?

அதே எண்ணெயில், தாளிக்க கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்க்க வேண்டும். அவை பொரிந்தவுடன், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். இதை குறைவான தீயில் செய்யவேண்டும்.

பொடிகள் சேர்த்தவுடன், 10 நிமிடத்துக்கு மேல் வறுத்தால் தீய்ந்துவிடும். பின்னர், பூண்டு சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும். புளிக்கரைசல் மற்றும் உப்பு சேர்த்தால் போதும். இந்தக்கலவையை மூடிவைத்து கொதிக்கவிடவேண்டும்.

கடைசியாக வெல்லம் சேர்த்து நன்றாக கலந்துவிடவேண்டும். இதை மேலும் 5 நிமிடங்கள் குறைவான தீயில் கொதிக்கவிடவேண்டும். பின்னர் எண்ணெய் பிரிந்து வரும் அப்போது பூண்டு வெந்திருக்கும். ஊறுகாயும் கெட்டியாக மாறியிருக்கும்.

நன்றாக ஆறியவுடன் காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

பூண்டில் உள்ள நன்மைகள்

பொதுவாக பூண்டு மருத்துவ குணங்கள் நிறைந்தது. பூண்டை பச்சையாக சாப்பிடுவது நல்லது. ஆனால் காரம் அதிகம் இருக்கும். வாயில் துர்நாற்றம் வீசும். அதனால் இதை பச்சையாக சாப்பிட மாட்டார்கள்.

அதனால் பூண்டை பல்வேறு உணவுகளிலும் சேர்த்து எடுத்துக்கொள்கிறார்கள். அப்படி இந்த பூண்டை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் சாப்பிட்ட சாப்பாட்டில் உள்ள சத்தை எளிதாக உடல் உறிஞ்ச உதவுகிறது. உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது.

வாயுத்தொல்லையை சரிசெய்யவும், இடுப்பைச் சுற்றியுள்ள தொப்பையைக் குறைக்கவும் உதவுகிறது. உடல் வளர்சிதை அதிகரித்து, கெட்ட கொழுப்பை வெளியேற்றிவிடுகிறது.

பூண்டில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள், ரத்த நாளங்களில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை வெளியேற்றுகிறது. இதை தினமும் எடுத்துக்கொள்ள உடலில் ஆரோக்கியத்தை அள்ளித்தருகிறது.

உடலில் ஃபரி ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகிறது. உடலில் கொழுப்பை சீராக பராமரிக்க உதவுகிறது.

உடலில் உள்ள தமனிகளை சரிசெய்து இதயநோய் வராமல் பாதுகாக்கிறது. முக்கியமாக எலும்புகளுக்கு உறுதியைக் கொடுத்து, எலும்புகள் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

பூண்டை சாப்பிடும்போது அது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். உடலில் தங்கியிருக்கும் கெட்ட வாயுக்களை கரைத்து வெளியேற்றும். வாழ்நாளை நீட்டிக்கும்.

உடலில் சோர்வை நீக்கும். ரத்த அழுத்தம், கொழுப்பு, மாரடைப்பு, பெருந்தமனி அடைப்பு ஆகியவற்றை தடுக்கிறது. ரத்த நாளங்களை சீரான முறையில் வேலை செய்ய உதவுகிறது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதால் உடல் எடை குறைக்க உதவும். ஒரு மாதத்தில் நல்ல பலன் கிடைக்கும். கை-கால் வலியைப்போக்கும். வாயுத்தொல்லை முற்றிலும் குறைக்கும்.

வறுக்காத பூண்டை சுளுக்குக்கு மருந்தாகப்பயன்படுத்தலாம். தேமலுக்கும் பூண்டு பயன்படுத்தப்படுகிறது.

பூண்டை இடித்து சுளுக்கு ஏற்பட்ட இடத்தின் மீது தடவினால் சுளுக்கு குணமாகும். பூண்டு மற்றும் வெற்றிலையை அரைத்து தேமல் மீது தடவினால் தேமல் மறைந்து ஓடும்.

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பாலில் பூண்டை கொதிக்கவைத்து, பனங்கற்கண்டு சேர்த்து பருகினால் அந்தப் பிரச்னைகள் குணமாகும்.

புற்றுநோயாளிகள் இந்த பூண்டை வேகவைத்து சாப்பிடும்போது, அது அவர்களின் வலியை குறைக்க உதவும்.

இத்தனை நன்மைகள் நிறைந்த பூண்டை தினமும் உணவில் சேர்த்து அதன் முழுப்பலன்களையும் பெறுங்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி