Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டில் உள்ள கார்டனுக்கு எந்த வகைச் செடிகளை தேர்வு செய்யவேண்டும்?
Sep 28, 2024, 07:00 AM IST
Gardening Tips : ‘சீரான தோட்டம் சிறப்பான தோட்டம்’ வீட்டில் உள்ள கார்டனுக்கு எந்த வகைச் செடிகளை தேர்வு செய்யவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள சிறிய தோட்டமோ அல்லது பெரியதோ அதற்கு பராமரிப்பு என்பது கட்டாயம் வேண்டும். உங்கள் தோட்டத்தை பராமரிக்கத் தேவையான குறிப்புகளை நீங்கள் தெரிந்துகொள்வது உங்கள் தோட்டத்தில் உள்ள செடிகள் அனைத்தும் வளர்வதற்கு துணைபுரியும். நீங்கள் வீட்டில் தோட்டம் அமைக்க விரும்பினால் அது உங்களுக்கு பல்வேறு விஷயங்களை மனதில் ஏற்படுத்தும். அதுவும் உண்மைதான், ஒரு தோட்டம் அமைக்க நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியது இதுதான். நீங்கள் உங்களின் தாவரங்களை நடவு செய்வது எப்படி? சிறந்த மண் எது? அவற்றை எப்போது வெட்டவேண்டும்? அவற்றுக்கு போதிய தண்ணீர் மற்றும் சூரியஒளி கிடைக்க என்ன செய்யவேண்டும். இயற்கையே சிறந்த ஆசான். நீங்கள் தோட்டம் அமைக்க அமைக்க, உங்களுக்கு எது சரியாக செயல்படும். எது வளராது என்பதை கற்றுக்கொடுத்துவிடும்.
தோட்டக் குறிப்புகள்
உங்களுக்குத் தேவையான தோட்டக் குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இவை குறிப்பாக யாருக்கெல்லாம் உதவியாக இருக்கும் என்றால், தோட்டம் அமைக்கும் வேலையை துவங்கியுள்ளவர்களுக்குத்தான். தோட்டத்தை நீங்கள் கஷ்டப்பட்டு நடவேண்டாம். இந்த குறிப்புக்களை பின்பற்றினால் நீங்கள் மகிழ்ச்சியுடன் தோட்ட வேலைகளில் ஈடுபட முடியும்.
தாவரங்கள் வளரும் நிலைகள்
சுற்றுச்சூழல், வானிலை என அனைத்தையும் பார்த்து உங்கள் தோட்டத்தில் எந்தச் செடிகளை நட்டால் அது உங்களுக்கு பலன்தரும் என்று பாருங்கள். உங்கள் பகுதிகளில் பொதுவாக வளரும் தாவரங்களை பரிசோதியுங்கள். அவற்றில் உள்ளதை பார்த்து எதை தவிர்க்கவேண்டும் என்று புரிந்துகொள்ளுங்கள். எந்த வகை மரங்கள், செடிகள், கொடிகள் நடலாம் என முதலில் முடிவு செய்யுங்கள். குறிப்பாக காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப எவை வளரும் அல்லது வளராது எனப்பாருங்கள். உங்களுக்கு தெளிவான ஐடியாக்கள் கிடைக்கும். இதன்மூலம் நீங்கள் எப்போது பழங்கள் நடலாம் அல்லது காய்கறிகள் நடலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள். இதனால் நீங்கள் வளராத ஒரு செடியை நட்டு அவதிப்படும் அவசியம் இருக்காது.
நீங்கள் ஒரு செடியை நட விரும்பினால் அது எத்தனை காலம் வளரும் எனப்பாருங்கள். இதனால் நீங்கள் சில செடிகளை வீட்டுக்குள்ளும், சிலவற்றை வெளியேயும் வளர்க்கலாம அல்லது வளர்ப்பதை தவிர்க்கலாம்.
ஒவ்வொரு செடிக்கும் எந்த அளவுக்கு வெளிச்சம் வேண்டும் என்று பாருங்கள். காய்கறிகளுக்கெல்லாம் 8 மணி நேர நேரடி சூரிய வெளிச்சம் தேவைப்படும். இது அன்றாடம் கிடைத்தால்தான் அந்தச் செடிகள் வளரும். சில காய்கறிகளுக்கு நல்ல விளைச்சல் கொடுக்கு நாள் முழுவதும் சூரிய வெளிச்சம் இருந்துகொண்டே இருக்கவேண்டும். உங்கள் தோட்டத்தில் நிழல் இருந்தால் அதில் பயிரிட கீரை, முள்ளங்கி, முட்டைக்கோஸ் ஆகிய தாவரங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
சில தாவரங்கள் இரவில் பூக்கும், சில தாவரங்கள் பகலில் பூக்கும் தன்மைகொண்டவை. சில தாவரங்கள் இரவு மற்றும் பகலில் பூக்கும் தன்மைகொண்டவை என்பதால் அதற்கு ஏற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் பகுதியில் வளரும் தன்மைகொண்ட தாவரங்கள் மிகவும் சிறந்தவையாகும். அதனால் நீங்கள் வெளியூர் அல்லது வெளிநாட்டுச் செடிகளை வளர்க்கவேண்டும் என்று நினைக்கவேண்டாம். இந்தச்செடிகள்தான் உள்ளூரில் செழித்து வளரும். எனவே புதிய தாவரங்கள் குறிப்பாக உங்கள் பகுதிக்கு உதவாத செடிகளை தேர்ந்தெடுக்காதீர்கள். ஏனெனில் புதிய தாவரங்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறாது.
இதுபோன்ற தோட்டக்கலை குறிப்புக்களை உங்களுக்கு ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்தி வழங்கி வருகிறது. இதன் நோக்கம் தோட்டக்கலையில் ஆர்வம் கொண்டவர்களை ஊக்குவிப்பதாகும். எனவே இதை பயன்படுத்தி தகவல்களைப் பெற தொடர்ந்து எங்கள் இணையப்பக்கத்தில் இணைந்திருங்கள்.
டாபிக்ஸ்