தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Fever Kashyam : கடும் சளி; சுடும் காய்ச்சல்; ஒரே ஒரு கசாயம் போதும் என்றால் நம்ப முடிகிறதா?

Fever Kashyam : கடும் சளி; சுடும் காய்ச்சல்; ஒரே ஒரு கசாயம் போதும் என்றால் நம்ப முடிகிறதா?

Priyadarshini R HT Tamil

Jun 04, 2024, 06:01 AM IST

google News
Fever Kashyam : கடும் சளி, இருமல் மற்றும் சுடும் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு கசாயம் போதும் என்றால் நம்ப முடிகிறதா? இதோ ரெசிபி செய்து சாப்பிட்டு குணம் பெறுங்கள்.
Fever Kashyam : கடும் சளி, இருமல் மற்றும் சுடும் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு கசாயம் போதும் என்றால் நம்ப முடிகிறதா? இதோ ரெசிபி செய்து சாப்பிட்டு குணம் பெறுங்கள்.

Fever Kashyam : கடும் சளி, இருமல் மற்றும் சுடும் காய்ச்சலால் அவதிப்படுகிறீர்களா? ஒரே ஒரு கசாயம் போதும் என்றால் நம்ப முடிகிறதா? இதோ ரெசிபி செய்து சாப்பிட்டு குணம் பெறுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

காய்ச்சல் வந்துவிட்டால் நாம் பாராசிட்டமால் மாத்திரைகளை தேடி ஓடுவோம். ஆனால் இந்த கசாயம் மட்டும் போதும். உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்கள் காய்ச்சலை விரட்டியடிக்கும்.

காய்ச்சல் கஷாயம் செய்ய தேவையான பொருட்கள்

வேப்பம் ஈர்க்கு – 7 (இலையை நீக்கிவிட்டு கிடைக்கும் குச்சி)

கறிவேப்பிலை ஈர்க்கு – 7

மிளகு – அரை ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

இஞ்சி – ஒரு இன்ச்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

உப்பு – சிட்டிகை (தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளலாம். கசாயத்தின் கசப்பு சுவை தெரியாமல் இருக்க சேர்க்கப்படுகிறது அல்லது கஷாயத்தை வடிகட்டிய பின்னர் தேனையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்)

செய்முறை

மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தூள் அனைத்தையும் சிறிய உரலில் சேர்த்து தட்டிக்கொள்ள வேண்டும். அதில் ஈர்க்குகளையும் சேர்த்து நன்றாக தட்டிக்கொள்ள வேண்டும். இவையனைத்தின் விழுது இரண்டு ஸ்பூன் அளவுக்கு வரும்.

இதை ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். தண்ணீர் அரை டம்ளராக சுண்டியவுடன் வடிகட்டி, அதில் தேவைப்பட்டால் இந்துப்பு அல்லது தேன் கலந்து பருகவேண்டும். அப்படியே வேண்டுமானாலும் பருகலாம்.

சளி, இருமல், காய்ச்சல் அடிக்கடி ஏற்படும் காலங்களில் நீங்கள் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மூன்று முதல் 5 நாட்கள் மட்டுமே இந்த கஷாயத்தை தேவையின் அடிப்படையில் எடுத்துக்கொள்ள வேண்டும். மழைக்காலங்களில் வாரத்தில் ஒருமுறை எடுத்துக்கொண்டால் உங்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பைத் தரும்.

இந்த கஷாயத்தை நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகலாம். இதை மிதமான சூட்டில் பருகவேண்டும். பருகும்போதும், பருகியவுடனும் உங்கள் உடலில் இருந்து வியர்வை வெளியேறும். அது உங்கள் காய்ச்சல் சீரடைகிறது என்பதற்கான அறிகுறியாகும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி