தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?

Egg Cutlet : வாவ் சூப்பர்! குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ்! முட்டை கட்லெட் எப்படி செய்வது என்று தெரியுமா?

Priyadarshini R HT Tamil

Sep 01, 2024, 10:47 AM IST

google News
Egg Cutlet : வாவ் சூப்பர் என குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ், முட்டை கட்லெட் அதை எப்படி செய்வது என்று தெரியுமா?
Egg Cutlet : வாவ் சூப்பர் என குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ், முட்டை கட்லெட் அதை எப்படி செய்வது என்று தெரியுமா?

Egg Cutlet : வாவ் சூப்பர் என குழந்தைகள் குதூகலிக்கும் ஸ்னாக்ஸ், முட்டை கட்லெட் அதை எப்படி செய்வது என்று தெரியுமா?

கட்லெட் சாப்பிடவேண்டுமென்றால் கடைக்கு செல்ல தேவையில்லை. சூப்பர் சுவையான கட்லெட்டை நீங்கள் வீட்டிலே செய்து சாப்பிடலாம். இதற்கு அதிக பொருட்களும் தேவையில்லை வீட்டில் நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும், பால், வெண்ணெய், நெய், மைதா, மிளகாய்த்தூள் போன்றவையே போதும். உருளைக்கிழங்கு, முட்டையும் கூட பெரும்பாலான வீடுகளில் எப்போதும் இருப்பு வைக்கப்படும். அதிகபட்சம் வாங்கவேண்டியது பிரட் தூள் அல்லது ரஸ்க் தூள்தான். இதை தயாரிப்பதும் எளிதுதான். பள்ளியில் இருந்து வீடு திரும்பும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தீர்கள் என்றால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். இதை சரியான ஷேப்பில் பிடிப்பதுதான் கொஞ்சம் சிரமம். எனவே அதை உங்களுக்கு பிடித்தவாறு செய்துகொள்ளலாம். கடைகளில் காணப்படும் கட்லெட் வடிவில் இல்லையென்றால், வேறு வடிவங்களிலும் பிடித்துக்கொள்ளலாம். எனவே கட்டாயம் செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு – கால் கிலோ

முட்டை – 2 (கெட்டியாக வேகவைத்துக்கொள்ள வேண்டும்)

மிளகாய்த்தூள் – முக்கால் ஸ்பூன்

பால் – ஒரு ஸ்பூன்

வெண்ணெய் – ஒரு ஸ்பூன்

மைதா – ஒரு டேபிள் ஸ்பூன்

ரஸ்க் தூள் – ஒரு கப்

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முட்டையை வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதை தோல் உரித்து வட்டமாகவோ அல்லது உங்களுக்கு பிடித்ததுபோல் வெட்டிக்கொள்ளவேண்டும்.

உருளைக்கிழங்கை மிருதுவாகும் வரை வேகவைத்துக்கொள்ளவேண்டும். அதை தோல் உரித்து, பால், வெண்ணெய், உப்பு, மிளகாய்ப் பொடி போட்டு நன்றாக பிசைந்துகொள்ளவேண்டும்.

உருளைக் கிழங்கு கலவையைக் பெரிய உருண்டை எடுத்து அதை தட்டி, அதன் உள்ளே முட்டையை வைத்து சுற்றிலும் முட்டை வெளியே தெரியாமல் மூடி, வட்டவடிமாக கட்லெட்களாக தட்டிக்கொள்ளவேண்டும்.

மைதா மாவில் தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மிளகுத்தூள் போட்டுத் தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், செய்து வைத்துள்ள கட்லெட்களை மைதாமாவில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி இரண்டு பக்கமும்பொன்னிறமாக வறுத்து எடுக்கவேண்டும். எண்ணெய் அல்லது நெய் கூட வறுக்கப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கட்லெட் மீது ரொட்டித்தூள் படிந்து இருக்கவேண்டும். மாவாகப் பிசைந்த உருளைக்கிழங்கு தளர்த்தியாக இருந்தால் தேவையான அளவு மைதா மாவு அல்லது அரிசி மாவு சேர்க்கலாம். அதைவிட பிரட் துண்டுகளை மிக்ஸியில் அடித்து பொடியாக்கி சேர்த்தால் நன்றாக இருக்கும். கோதுமை பிரட்டும் சேர்க்கலாம்.

குழந்தைகள் மிக விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்களுக்கும் பிடிக்கும். இதற்கு சாஸ் தொட்டுக்கொள்வது நல்லது.

முட்டையின் நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

2 முட்டையில் 82 சதவீதம் வைட்டமின் டி சத்துக்கள் உள்ளது. 50 சதவீதம் ஃபோலேட் சத்துக்கள் உள்ளது. 25 சதவீதம் வைட்டமின் பி2 சத்துக்கள் உள்ளது. 40 சதவீதம் உங்கள் செலினியத் தேவையை பூர்த்தி செய்கிறது.

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது. உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது.

முட்டை வயிறை நிரப்பும் அதனால், எடை பராமரிப்பில் உதவுகிறது.

கோலீன்கள் கொண்டது.

ஒமேகா -3 நிறைந்தது.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி