தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  முருங்கை மட்டன் குழம்பு; தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும்!

முருங்கை மட்டன் குழம்பு; தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும்!

Priyadarshini R HT Tamil

Oct 29, 2024, 06:54 PM IST

google News
முருங்கை மட்டன் குழம்பு, தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும். பிறகென்ன, வைத்து சாப்பிடுங்கள்.
முருங்கை மட்டன் குழம்பு, தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும். பிறகென்ன, வைத்து சாப்பிடுங்கள்.

முருங்கை மட்டன் குழம்பு, தீபாவளி காலையில் சுடச்சுட இட்லியுடன், சூடாக சாப்பிட, கொண்டாட்டங்கள் களைகட்டும். பிறகென்ன, வைத்து சாப்பிடுங்கள்.

தீபாவளி நெருங்கிவிட்டது. புத்தாடைகள், பட்டாசுகள், பலகாரங்கள் என கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டது. தீபாவளி நாளன்று காலையில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடைகள் உடுத்தி, மத்தாப்பூக்கள் கொழுத்தி மகிழ்ந்திருப்பீர்கள். அன்று காலையில் இட்லியுடன் சாப்பிட மட்டன் குழம்பு இல்லாவிட்டால் எப்படி? எனவே தீபாவளியன்று காலையில் முருங்கை, மட்டன் குழம்பு தயாரிப்பது எப்படி என்று பாருங்கள். பொதுவாகவே மட்டன் குழம்பில் கத்தரிக்காள், முள்ளங்கி போன்ற காய்கறிகள்தான் பெரும்பாலும் சேர்ப்பார்கள். ஆனால், இங்கு முருங்கைக்காய் சேர்த்து செய்யப்படும் மட்டன் குழம்பு என்றால் அத்தனை ருசி நிறைந்ததாக இருக்கும். இதை நீங்கள் இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவை அள்ளும். எனவே கட்டாயம் இந்த தீபாவளிக்கு இந்த குழம்பை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

தேவையான பொருட்கள்

எலும்போடு மட்டன் – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 2

பச்சை மிளகாய் – 2

இஞ்சி – பூண்டு விழுது – 2 ஸ்பூன்

முருங்கைக்காய் – 2 (முற்றம் இல்லாததாக பார்த்து தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளுங்கள்)

எண்ணெய் – 4 ஸ்பூன்

மல்லித்தூள் – அரை ஸ்பூன்

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

தேங்காய் – 3 பத்தைகள்

மல்லித்தழை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

செய்முறை –

மட்டனை ஒரு குக்கரில் போட்டு 6 -7 விசில் விட்டு வேக வைத்துக்கொள்ளுங்கள். தக்காளி மற்றும் பச்சை மிளகாயில் தலா ஒன்று மட்டும் எடுத்து, தேங்காயுடன் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அது சூடானவுடன், நறுக்கி வைத்த வெங்காயத்தை முதலில் சேர்த்து வதக்கவேண்டும். வெங்காயம் கொன்னிறமானவுடன், இஞ்சி - பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ளவேண்டும்.

பின்ளர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக குழைய வதக்கி உப்பு, மல்லித்தூள், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிவிட்டு, பின்னர் நறுக்கிய முருங்கைக்காய் சேர்த்து வதக்கக்கிக்கொள்ளவேண்டும். இப்போது வேகவைத்த மட்டனை வேகவைத்த நீரோடு சேர்த்து ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து அரைத்த தேங்காய் பேஸ்டை ஊற்றி கிளறிவிட்டு அடுப்பை மிதமான தீயில் எரியவிட்டு 5 முதல் 6 நிமிடங்கள் நன்றாகக் கொதிக்கவிடவேண்டும்.

பின்னர் மல்லித்தழை தூவி குழம்பை இறக்கிவிடவேண்டும். ருசியான கமகமக்கும் முருங்கை மட்டன் குழம்பு ரெடி. சாதம் இட்லி, தோசை, ஆப்பம், ரொட்டி என அனைத்திற்கும் ஏற்றது. நறுக்கிய முருங்கைக்காயாக போடாமால், முருங்கைக் காயை தனியே வேக வைத்து உள்ளிருக்கும் ஜெல்லியை மட்டும் வழித்து எடுத்து குழம்பில் சேர்த்தும் சமைக்கலாம் அதுவும் ருசியாகவே இருக்கும். ஆனால் அதுபோல் சமைக்கும்போது, அந்த ஜெல்லி குழம்புடன் கரைந்துவிடும். அது ஒரு சிலருக்குப்பிடிக்காது. எனவே உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செய்துகொள்ளுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை ஹெச்.டி தமிழ் உங்களுக்காக தொகுத்து வழங்கி வருகிறது. எனவே அரிய பல தகவல்கள் மற்றும் வித்யாசமான ரெசிபிக்களை தெரிந்துகொள்ள எங்கள் இணையப் பக்கத்துடன் இணைந்திருங்கள். தீபாவளியையொட்டி, எண்ணற்ற பலகார ரெசிபிக்களும் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் பயன்படுத்தி பலன்பெறுங்கள். இனிய, பாதுகாப்பான, ஆரோக்கியமான தீபாவளி வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி