தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Stairs: படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது இதயநோய் வராமல் தடுக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

Stairs: படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது இதயநோய் வராமல் தடுக்குமா? மருத்துவர் சொல்வது என்ன?

Marimuthu M HT Tamil

Sep 24, 2023, 12:57 PM IST

google News
படிக்கட்டுகளில் ஏறி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது, இக்கட்டுரை
படிக்கட்டுகளில் ஏறி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது, இக்கட்டுரை

படிக்கட்டுகளில் ஏறி நடப்பதால் ஏற்படும் நன்மைகளை விளக்குகிறது, இக்கட்டுரை

இன்றைய காலத்தில் பலருக்கும் நாற்காலியில் கணினிக்கு முன்பு அமர்ந்து பணிசெய்யும் வகையிலான பணிகிடைப்பதால், உடல் உழைப்பு என்பது இல்லாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால் சிறுவயதில் இதயம் பலவீனப்படுவது, மாரடைப்பு நிகழ்வது ஆகியவை அடிக்கடி நிகழ்வதைப் பார்க்கமுடிகிறது. 

இந்நிலையில் மெடிசின் மற்றும் சயின்ஸ் இன் ஸ்போர்ட்ஸ் மற்றும் எக்ஸர்சைஸ் இதழின்படி, வாரத்திற்கு அரைமணிநேரம் படிக்கட்டுக்களில் ஏறுவது என்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேபோல், 1 நிமிடத்திற்குள் தொடர்ச்சியாக 4 படிக்கட்டுகளில் ஏறும் நபர்களுக்கு நல்ல இதய ஆரோக்கியம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆனால், நீங்கள் 4 படிக்கட்டுகளில் ஏற 1 நிமிடம் 30 விநாடிகளுக்கு மேல் எடுத்துக் கொண்டால், உங்களுக்கு இதய நோயின் தாக்கம் இருக்கிறது எனப்புரிந்துகொள்ளவேண்டும் என மெடிசின் மற்றும் சயின்ஸ் இதழ் கூறியுள்ளது. 

லிஃப்ட்களுக்குப் பதிலாக படிக்கட்டுகளில் செல்வது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் பயன்படுகிறது. 

படிக்கட்டுகளில் ஏறுவதால் இதயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் குறித்து, கொல்கத்தாவின் ஓஹியோ மருத்துவமனையின் நிறுவனரும் மருத்துவ இயக்குனருமான டாக்டர் ஜெயதி ரகித் கூறிய கருத்துகள்.

இதயத்துக்கான உடற்பயிற்சி இது: படிக்கட்டுகளில் ஏறுதல் என்பது இதயத்திற்கு ஏற்ற பயிற்சியாகும். படிக்கட்டு ஏறுதல் என்பது கால்கள் மற்றும் அதன் தசைப்பகுதியை வலுப்படுத்துகிறது. இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. ரத்தம் பாய்தலை சீராக்குகிறது. 

கலோரியை எரிக்கவும், எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும் பயிற்சி: படிக்கட்டுகளில் ஏறி, இறங்குவது என்பது உடலில் இருக்கும் கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது. உடல் எடையை அதிகரிக்காமல் இருக்க உதவி செய்கிறது. லிஃப்டில் செல்வதை விட, மிதமிஞ்சிய கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது. 

மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டம்:  படிக்கட்டு ஏறுதல் உங்கள் உடல் முழுவதும் சிறந்த இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. நீங்கள் ஏறும்போது, ​​​​உங்கள் இதயம் அதிக இரத்தத்தை பம்ப் செய்கிறது. உங்கள் தசைகள் மற்றும் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இந்த மேம்பட்ட சுழற்சி ரத்த உறைவு, பெருந்தமனி தடிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.

கொலஸ்ட்ரால் அளவு குறைந்தது: படிக்கட்டுகளில் ஏறுவது என்பது நல்ல கொழுப்பு(HDL) எனப்படும் உயர் அடர்த்தி கொண்ட கொழுப்புப்புரதத்தை அதிகரிக்க உதவும். இது தமனிகளில் பிளாக் உண்டாவதைத் தடுக்கும்.

குறையும் மன அழுத்தம்: படிக்கட்டுகளில் ஏறுவது மன அழுத்தத்தைக் குறைக்கும். படிக்கட்டுகளில் ஏறும் செயல்பாடு, எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இதனால், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கமுடியும். 

உங்கள் அன்றாட வழக்கத்தில் இந்த எளிய மாற்றத்தை இணைத்துக்கொள்வது ஆரோக்கியமான இதயத்திற்கு வழிவகுக்கும். எனவே, அடுத்த முறை படிக்கட்டுகள் மற்றும் லிஃப்ட் ஆகியவை நம் கண்முன்னே இருக்கும்போது, ​​உங்கள் தேர்வு இதயத்தின் நலனுக்காக படிக்கட்டுகளில் ஏறுவதற்கு முக்கியத்துவத்தைத் தாருங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்

டாபிக்ஸ்

அடுத்த செய்தி