தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  வீரியமிக்க விந்தணுக்கள், ஆரோக்கியமான கருமுட்டை பெறவேண்டுமா? இதோ இந்த உணவை ஃபாலோ பண்ணுங்க!

வீரியமிக்க விந்தணுக்கள், ஆரோக்கியமான கருமுட்டை பெறவேண்டுமா? இதோ இந்த உணவை ஃபாலோ பண்ணுங்க!

Priyadarshini R HT Tamil

Nov 11, 2024, 03:02 PM IST

google News
வீரியமிக்க விந்தணுக்கள், ஆரோக்கியமான கருமுட்டை பெறவேண்டுமா? இதோ இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடவேண்டும். உடனே உடற்பயிற்சி, யோகா ஆகியவையும் நீங்கள் செய்யவேண்டும்.
வீரியமிக்க விந்தணுக்கள், ஆரோக்கியமான கருமுட்டை பெறவேண்டுமா? இதோ இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடவேண்டும். உடனே உடற்பயிற்சி, யோகா ஆகியவையும் நீங்கள் செய்யவேண்டும்.

வீரியமிக்க விந்தணுக்கள், ஆரோக்கியமான கருமுட்டை பெறவேண்டுமா? இதோ இந்த உணவுகளை நீங்கள் சாப்பிடவேண்டும். உடனே உடற்பயிற்சி, யோகா ஆகியவையும் நீங்கள் செய்யவேண்டும்.

கருத்தரிப்பு, திருமணம் முடிந்தோ அல்லது குழந்தை வேண்டும் என்று எண்ணும்போதோ உடனே குழந்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போவதுதான் கருவுறாமை ஆகும். நீங்கள் எத்தனை முறை பாதுகாப்பின்றி உடலுறவு வைத்துக்கொண்டாலும், உங்களால் கருத்தரிக்க முடியவில்லையென்றால், நீங்கள் அதற்கு உரிய காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள் கருவுற முடியாமல் போவதற்கு, ஆரோக்கிய பிரச்னைகள், உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாகின்றன. ஆனால் பாதுகாப்பான பல சிகிச்சைகள் உங்களை கருவுறவைக்கும். இயற்கை முறையிலும் சில வழிகளை பின்பற்றினால் உங்களால் கருவுற முடியும்.

அறிகுறிகள்

கருவுறாமைக்கு தெளிவான அறிகுறிகள் கிடையாது. ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னைகளால் பெண்களால் கருவுற முடியாமல் போகிறது. ஆண்களுக்கு ஹார்மோன் பிரச்னைகளாலும் கருவுற முடியாமல் போகிறது. ஆனால் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று அல்லது பெறாமல் என இரு முறைகளிலும் கருவுறுகிறார்கள்.

எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?

உங்களுக்கு கருவுறுதல் பிரச்னைகள் ஏற்பட்டால், ஓராண்டு வரை நீங்கள் காத்திருக்கவேண்டும். அதற்கு பின்னர்தான் மருத்துவரை அணுகவேண்டும்.

பெண்களுக்கு,

35 வயதை கடந்துவிட்டால்,

40 வயதை கடந்த பின்னர்,

மாதவிடாய் பிரச்னைகள் ஏற்பட்டால், தாமதல் மற்றும் வலி போன்றவை,

கருவுறுதல் கோளாறுகள்,

ஒருமுறைக்கு மேல் கருச்சிதைவு

இடுப்பில் வீக்கக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்தால்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஆண்களுக்கு,

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்,

விறைப்புக் கோளாறுகள்,

புற்றுநோய் சிகிச்சை பெற்றவராக இருந்தால்,

ஹெர்னியா அறுவைசிகிச்சை செய்பவராக இருந்தால்,

உடன் பிறந்தவர்களுக்கு கருவுறுதல் கோளாறுகள் இருந்தால்,

என்ன உணவு உட்கொள்ளவேண்டும்?

சமீப காலங்களாக பெண்கள் 30 வயதுக்கு மேல் தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பெண்களும், படிப்பு, வேலை என செட்டில் ஆனவுடன்தான் திருமணத்தை எண்ணிப்பார்க்கிறார்கள். இதனால் அவர்களுக்கு கருத்தரிப்பதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. எனவே பெண்கள் விரைவில் கருத்தரிக்கவேண்டுமெனில் சில உணவுப்பொருட்களை எடுத்துக்கொள்ளவேண்டும். அது என்னவென்று பாருங்கள்.

பெண்கள் தங்கள் உணவில் அதிகளவில் நெல்லிக்காயை எடுத்துக்கொள்ளவேண்டும். அதை பச்சடி, சாறு என எடுத்துக்கொள்ளலாம். ஆனால் அதுபோல் எடுக்கும்போது, அவர்களுக்கு சளி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது என்றால், நெல்லிக்காயை உலரவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. விரைவில் கருத்தரிக்கவும் உதவுகிறது. இதில் அதிகளிவில் நெல்லிக்காயில் தேநீர் தயாரித்தும் பருகலாம். இது ஒரு காய கற்ப பொருளும் ஆகும். இது வயோதிகத்தைத் தடுக்கும் ஆற்றல் நிறைந்தது. அதனால் ஆரோக்கியமான கருமுட்டை மற்றும் விந்தணுக்கள் உருவாக வாய்ப்பாகிறது. மேலும் கருவும் ஆரோக்கியமாக வளர உதவுகிறது.

நட்ஸ்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இரும்சசத்து அதிகம் கொண்ட முருங்கைக்கீரை போன்றவற்றையும் நீங்கள் உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவேண்டும். இவை கருப்பைக்கு வலு சேர்ப்பவை. விதைகள், சூரிய காந்தி விதைகள், ஆளி விதைகள், பரங்கி விதைகள், சியா விதைகளை அதிகம் உணவில் சேர்க்கும்போது அது உங்களுக்கு ஹார்மோன்களை சமப்படுத்தி கரு உருவாகத் தேவையான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. எனவே நீங்கள் கருத்தரிக்க முயல்பவர் என்றால் கட்டாயம் ஆரோக்கிய உணவு உட்கொள்ளவேண்டும். அதனுடன் உடற்பயிற்சியும் செய்யவேண்டும்.

திருமணம் முடிந்து நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தயாராகிவிட்டால், உடனே இவற்றை பழக்கத்தில் கொள்வது அவசியம். இவைதான் உங்களின் கருமுட்டைகளையும், விந்தணுக்களையும் வீரியமாக்கக் கூடியவை ஆகும்.

இதுபோன்ற எண்ணற்ற வித்யாசமான ரெசிபிக்கள், தகவல்கள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி