Diwali 2023: தீபாவளிக்கு பின் உடல் எடை அதிகரித்து விட்டதா? கவலை வேண்டாம்.. இதை ட்ரை பண்ணுங்க
Nov 15, 2023, 09:15 AM IST
உடல் எடை அதிகரித்திருந்தால் அதை குறைப்பதற்கு இன்னும் கடுமையான பயிற்சிகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும்.
தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான். கொண்டாட்டம் என்றால் பலகாரங்கள் இல்லாமலா. அப்படி தீபாவளி கொண்டாட்டங்களின் போது உட்கொள்ளும் இனிப்புகளின் பாதிப்புகளில் இருந்து உங்கள் உடலை விரைவாகவும் எளிதாகவும் மீட்க விரும்பினால், இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றலாம்.
தீபாவளி திருவிழாவின் போது சுவையான இனிப்புகள் மற்றும் உணவுகளினால் ஆன விருந்துகள் செய்யப்படுவது. வழக்கம். இது அனைவரையும் ஒரு கணம் கலோரி எண்ணுவதை ஒதுக்கி வைத்துவிட்டு, தின்பண்டங்களை முழுமையாக ருசிக்க வைக்கிறது. ஆனால் தீபாவளிக்குப் பிறகு உடல் எடையை குறைப்பது முக்கியம். பண்டிகைக்கு பிறகு உங்கள் உடலை சுத்தப்படுத்த சில குறிப்புகள்.
உங்கள் உணவில் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்: பண்டிகைக் காலங்களில் சர்க்கரை சாப்பிட்டால், இப்போதே பழங்களைத் தேர்வு செய்யுங்கள். ஏனெனில் அவை உங்கள் இரத்த ஓட்டத்தில் மெதுவாக உறிஞ்சப்படும் இயற்கையான சர்க்கரைகளைக் கொண்டிருக்கின்றன.
தண்ணீர்:
கலோரிகள் குறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டாலே உடல் எடை அதிகரிக்காது. நாள் முழுவதும் அதிகளவு தண்ணீர் குடிக்கலாம். அதேவேளையில் ஒரே நேரத்தில் அதிகம் தண்ணீர் பருகுவதை தவிர்க்கவும். சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது நல்ல பலனை தரும்.
உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்:
நீங்கள் ஜிம்மிற்கு செல்லலாம் அல்லது வீட்டில் யோகா மற்றும் உடற்பயிற்சி செய்யலாம். இது உங்கள் உடல் செயல்பாடுகளைச் மேம்படுத்துவதோடு உற்சாகமாக வைத்து கொள்ள உதவும். கலோரிகளை எளிதில் கரைக்க உதவும். தீபாவளிக்கு பின்பு உணவு, உடற்பயிற்சி, உடல் எடை இந்த மூன்றிலும் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களை கண்காணித்து, உணவுப் பழக்கத்தை மீண்டும் கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டும். உடல் எடை அதிகரித்திருந்தால் அதை குறைப்பதற்கு இன்னும் கடுமையான பயிற்சிகளையும், உணவுக்கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அதற்கேற்ப திட்டமிட்டு செயல்படவும்.
உணவுப் பழக்கம்:
உணவைத் தவிர்ப்பதைத் தவிர்த்து, சத்தான உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உணவைத் தவிர்ப்பது இனிப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கான பசியை அதிகரிக்கும். முழு உணவுகள், புரதம் ஆகியவற்றை எடுத்து கொள்ளுங்கள். மேலும் ஏராளமான திரவங்களை குடிப்பதன் மூலம் நீங்கள் நன்கு நீரேற்றமாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உடலை மீண்டும் புத்துணர்ச்சி கொள்ள செய்யும். புரோபயாட்டிக் உணவுகளை அதிகம் எடுத்து கொள்ளலாம்.
நீரேற்றத்தை பராமரிக்கவும்:
உங்களை நீரேற்றமாக வைத்திருக்க நிறைய திரவங்களை குடிக்கவும். வெள்ளரிகள், சுரைக்காய், பீர்க்கங்காய் , சௌசௌ உள்ளிட்ட காய்கறிகள், மற்றும் பழங்கள் போன்ற பொருட்களை எடுதது கொள்ளலாம் .மேலும் தண்ணீரை அதிகமாக எடுத்து கொள்வதன் மூல சிறுநீர் மற்றும் மலம் வழியாக உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
ஒரு வாரத்திற்குள் 5 முதல் 10 கிலோ எடையை குறைக்க முயற்சிப்பது பெரும் ஆபத்தானது. இத்தகைய இலக்குகளை தவிர்ப்பது நல்லது. நம்மால் முடிந்த இலக்கை நிர்ணயித்து அதை மட்டும் முயற்சிக்கவும்.
ஏற்கனவே உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு எட்டக்கூடிய இலக்குகளை நிர்ணயித்து செயல்படுவது நல்லது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்