தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Deepavali Sweets Special: கடையில் வாங்கும் காலா ஜாமூன் இந்த தீபாவளிக்கு வீட்டிலே செய்யலாம்! வட இந்தியாவின் பிரபல இனிப்பு

Deepavali Sweets Special: கடையில் வாங்கும் காலா ஜாமூன் இந்த தீபாவளிக்கு வீட்டிலே செய்யலாம்! வட இந்தியாவின் பிரபல இனிப்பு

Priyadarshini R HT Tamil

Oct 10, 2023, 04:00 PM IST

google News
Deepavali Sweets Special : கடையில் வாங்கும் காலா ஜாமூன் இந்த தீபாவளிக்கு வீட்டிலே செய்யலாம். வட இந்தியாவில் பரவலாக செய்யப்படும் இந்த ஜாமூனை நீங்கள் வீட்டிலேயே எளிதாக செய்ய முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள ரெசிபி படித்து செய்து இந்த தீபாவளியை கொண்டாடுங்கள்.

தேவையான பொருட்கள்

நெய் – 1 ஸ்பூன்

பால் – அரை கப்

மில்க் கிரீம் – கால் கப்

பால் பவுடர் – 1 கப்

பன்னீர் – அரை கப்

மைதா – கால் கப்

பேக்கிங் சோடா – கால் ஸ்பூன்

முந்திரி – 1 கைப்பிடி

பாதாம் – 1 கைப்பிடி

பிஸ்தா – 1 கைப்பிடி

எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

சர்க்கரை பாகு செய்ய

சர்க்கரை – அரை கிலோ

எலுமிச்சை சாறு – அரைப்பழம்

ஏலக்காய்ப்பொடி – ஒரு சிட்டிகை

தண்ணீர் – அரை லிட்டர்

குங்குமப்பூ – ஒரு சிட்டிகை

செய்முறை

கடாயை சூடாக்கி அதில் நெய், பால், மில்க் கிரீம், பால் பவுடர் என அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கட்டி வராமல் நன்றாக கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நல்ல மாவுப்பதம் வரும் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கட்டிபட்டுவிடக்கூடாது. எனவே கை எடுக்காமல் கிண்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் பன்னீர் சேர்த்து நன்றாக கிளறி கோவா செய்துஎடுத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏற்கனவே அடுப்பில் கிளறி எடுத்த மாவு சேர்த்து நன்றாக பிசைய வேண்டும்.

இதில் மைதா, பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துகொண்டே பிசைந்து குலோப் ஜாமூன் மாவு பதத்திற்கு பிசைந்துகொண்டே இருக்க வேண்டும்.

முந்திரி, பாதாம், பிஸ்தா அனைத்தையும் தனியாக இதே மாவு சிறிது சேர்த்து பிசைத்து வைத்துக்கொள் வேண்டும். தேவைப்பட்டால் ஃபுட் கலர் சேர்க்கலாம்.

ப்ளைகான உள்ள மாவை சிறுசிறு உருண்டைகளாக உருட்டி அதன் உள்ளே, நட்ஸ் கலந்த மாவை வைத்து உருட்டி உருண்டைகளை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து சூடாக்கி, அதில் உருண்டைகளை பொரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அவற்றை ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகில் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் வரை ஊறவிட வேண்டும். ஊறவிட்டு பின்னர் சாப்பிட்டால் இந்த தீபாவளி சுவையான கொண்டாட்டமாக மாறும்.

சர்க்கரை பாகு செய்வது எப்படி?

சம அளவு சர்க்கரை மற்றும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வேண்டும். அடுப்பில் வைத்து சர்க்கரை கரைந்தவுடன் அதில் எலுமிச்சை சாறு, ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். குலோப் ஜாமூனுக்கு பாகுபதம் என்பதெல்லாம் தேவையில்லை. சர்க்கரை கரைந்தாலே போதுமானது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி