Deepavali Sweet Special : வித்யாசமான தீபாவளி ஸ்வீட் – பிரட் சோமாஸ் - டக்குன்னு செஞ்சு இந்த பண்டிகைய அசத்துங்க!
Oct 12, 2023, 06:40 AM IST
Deepavali Sweet Special : வித்யாசமான தீபாவளி ஸ்வீட், பிரட் சோமாஸ், டக்குன்னு செஞ்சு இந்த பண்டிகைய அசத்துங்க!
தேவையான பொருட்கள்
முந்திரி – 1 கைப்பிடி (துருவியது)
பாதாம் – 1 கைப்பிடி (துருவியது)
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சர்க்கரை – 2 ஸ்பூன்
பிரட் – 6 ஸ்லைஸ்
கார்ன் பவுடர் – 2 ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
சர்க்கரை பாகு செய்ய தேவையான பொருட்கள்
சர்க்கரை – 1 கப்
தண்ணீர் – 1 கப்
ஏலக்காய் – 2
குங்குமப்பூ – 2 சிட்டிகை
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் பிரட் துண்டுகளை வட்டமாக வெட்டிக்கொள்ளவேண்டும். அதை சப்பாத்தி தேய்க்கும் கட்டையில் வைத்து பூரிக்கு தேய்ப்பதுபோது தேய்த்து, ஒரு தட்டில் பரப்பிவைத்து ஈரத்துணியால் சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
துருவிய முந்திரி, பாதாம், தேங்காய், சர்க்கரையை ஒன்றாக கலந்து, தேய்த்த பிரட் உள்ளே வைத்து, கார்ன் மாவில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, அதை வைத்து ஓரங்களை ஒட்டி, மூடி வைக்க வேண்டும்.
கடாயில் தாராளமாக எண்ணெய் சேர்த்து, தயாரித்து வைத்துள்ள பிரட் சோமாஸ்களை பொரித்து எடுக்க வேண்டும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் சம அளவு தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்துகரைந்தவுடன், எலுமிச்சை சாறு, ஏலக்காய், குங்குமம்பூ சேர்த்துக்கொள்ளவேண்டும். பாகுபதம் தேவையில்லை சர்க்கரை கரைந்தாலே போதுமானது. குலோப் ஜாமூனுக்கு காய்ச்சுவதுபோல் பாகு இருக்கவேண்டும் அல்லது நீங்கள் வழக்கமாக செய்வதுபோல் பாகு காய்ச்சிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொரித்த பிரட் சோமாஸ்களை பாகில் சேர்த்து, 2 மணி நேரம் ஊறவைத்து சாப்பிடவேண்டும்.
இது வித்யாசமான தீபாவளி ஸ்வீட். இந்த ஸ்வீட்டை செய்து இந்த பண்டிகையை கொண்டாடுங்கள்.
இந்த ஸ்வீட் உங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை 15 முதல் 20 நிமிடங்களில் செய்து முடித்துவிடலாம். சாதாரண நாட்களிலும் பள்ளி முடிந்து வரும் குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட்டை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி உண்பார்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.