தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Clean Your Kidney : சிறுநீர் கழிக்கும்போது எண்ணற்ற பிரச்னைகளா? அனைத்தையும் சரிசெய்ய இந்த ஒரு தேநீர் போதும்!

Clean your Kidney : சிறுநீர் கழிக்கும்போது எண்ணற்ற பிரச்னைகளா? அனைத்தையும் சரிசெய்ய இந்த ஒரு தேநீர் போதும்!

Priyadarshini R HT Tamil

Jul 02, 2024, 12:39 PM IST

google News
Clean your Kidney : சிறுநீர் கழிக்கும்போது எண்ணற்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? அனைத்தையும் சரிசெய்ய உதவி செய்யும் தேநீர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
Clean your Kidney : சிறுநீர் கழிக்கும்போது எண்ணற்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? அனைத்தையும் சரிசெய்ய உதவி செய்யும் தேநீர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

Clean your Kidney : சிறுநீர் கழிக்கும்போது எண்ணற்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்களா? அனைத்தையும் சரிசெய்ய உதவி செய்யும் தேநீர் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்னையா? சிறுநீர் கழிக்கும்போது தொல்லைகளா? சிறுநீரகத்தில் வீக்கமா? அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கும் இடத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறதா? சிறுநீரகத்தில் கற்கள் ஏற்பட்டு அவதிப்படுகிறீர்கள் என்றால், இந்த தேநீரை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள்.

நாம் அவ்வப்போது நமது சிறுநீரகங்களை சுத்தம் செய்துகொள்ளவேண்டும். ஏனெனில் சிறுநீரகம்தான் நமது ரத்தத்தை சுத்தம் செய்கிறது. நாம் பருகும் அனைத்தையும் சிறுநீரகம் வடிக்கிறது. 

நீங்கள் சோடா முதல் உடலுக்கு நல்லது தரும் எந்த ஒரு பானத்தை பருகினாலும், அதை சிறுநீரகங்கள்தான் சுத்தம் செய்கிறது என்பதை நினைவில்கொண்டு, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை காப்பது அவசியம்.

பொதுவாக அதிகம் தண்ணீர் பருகுவது உங்கள் சிறுநீரகங்களை சுத்தம் செய்யும் ஒரு எளிய வழி. அதை தினமும் செய்யவேண்டும். ஆனால் அவ்வப்போது சேரும் அதிகப்படியான அழுக்குகளை வெளியேற்ற நாம் கட்டாயம் முயலவேண்டும். அதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த தேநீரை பருகவேண்டும்.

தேவையான பொருட்கள்

எலுமிச்சை – 1

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்கவைக்கவேண்டும். அதில் மல்லித்தழையை சேர்த்து நன்றாக அதன் சாறு இறங்கும் வரை கொதிக்கவிடவேண்டும். அது கொதித்து வந்தவுடன் அதை வடிகட்டி, ஒரு எலுமிச்சை பழத்தில் அரைபழத்தை வெட்டி அதை சாறு பிழிந்து அதில் சேர்க்கவேண்டும். மற்றொரு அரைப்பழத்தை அப்படியே அந்த கொதிக்கும் தண்ணீரில் சிறுசிறு துண்டுகளாக சேர்க்கவேண்டும்.

பின்னர் அந்த தண்ணீரை அப்படியே பருகவேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் வாரத்தில் 2 நாட்கள் செய்யவேண்டும். அப்படி செய்யும்போது அந்த வாரம் முழுவதும் உங்கள் சிறுநீரகத்தில் சேர்ந்துள்ள மொத்த கழிவுகளையும் அப்படியே வெளியேற்றிவிடும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி