Chicken Tandoori : கோழி பிடிக்குமா? அப்ப வாங்க பட்டுனு தந்தூரி சிக்கன் செஞ்சு சாப்பிடலாம்!
Jul 06, 2023, 12:07 PM IST
Chicken Tandoori : நீங்கள் இதை மாலை நேர சிற்றுண்டியாக கூட செய்து சாப்பிடலாம். ஆனால் இரவு உணவு சாப்பிட முடியாது. பரவாயில்லை இதோடு நிறுத்திவிடலாம். உங்கள் நண்பர்களுடனான சந்திப்பை மேலும் சுவாரஸ்மாக்கும் இந்த தந்தூரி சிக்கன். குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே மறக்காம எப்படின்னு செஞ்சுபாத்துடுங்க.
சிக்கன் விரும்பிகளுக்கு இந்த எளிய ரெசிபி பெரிய உதவியாக இருக்கும். பட்டுன்னு பத்தே நிமிஷத்துல செஞ்சிடலாம் தந்தூரி சிக்கன். ஆனா அதுக்கு நீங்க முன்னாடியே அதை ஊறவைத்துவிடவேண்டும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வருகிறார்கள் அவர்களுக்கு உடனடியாக அதிரடியாக எதாவது செய்ய வேண்டும் என்றால் இதை செய்யலாம். இதை ஊறவைத்து செய்வதால் செரிமானத்துக்கு எளிதாகிறது. பொதுவாகவே ஊறவைக்க தயிர், எலுமிச்சைச்சாறு, எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் தேவைப்படுகிறது. எலுமிச்சை மற்றும் தயிர் இதற்கு வித்யாசமான சுவையை வழங்குகிறது. நீங்கள் இதை மாலை நேர சிற்றுண்டியாக கூட செய்து சாப்பிடலாம். ஆனால் இரவு உணவு சாப்பிட முடியாது. பரவாயில்லை இதோடு நிறுத்திவிடலாம். உங்கள் நண்பர்களுடனான சந்திப்பை மேலும் சுவாரஸ்மாக்கும் இந்த தந்தூரி சிக்கன். குழந்தைகளுக்கும் பிடிக்கும். எனவே மறக்காம எப்படின்னு செஞ்சுபாத்துடுங்க.
தேவையான பொருட்கள்
சிக்கன் - ஒரு கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் பொடி - 2 ஸ்பூன்
மஞ்சள் - கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1 ஸ்பூன்
கரம் மசாலா பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - ஒரு கப்
கடுகு எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கசூரி மேத்தி - 1 டேபிள் ஸ்பூன்
கார்ன் மாவு - 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் லெக்பீசை எடுத்து நன்றாக கழுவி, அதை காய வைக்கவும், பெரிய பாத்திரத்தில், தயிர், எலுமிச்சை சாதம், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, கசூரி மேத்தி பொடி, கடுகு எண்ணெய் உப்பு ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து வைத்துக்கொள்ள வேணடும். இதை நன்றாக நறுக்கிய சிக்கன் துண்டுகளுக்கு தடவி நன்றாக ஊறவிடவும். இதை பிரிட்ஜீக்குள் 8 - 10 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர் எடுத்து வெளியே ஒரு மணி நேரம் வைக்க வேண்டும். அவனை 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்ய வேண்டும்.
பேக்கிங் தட்டை எடுத்து, அதில் ஒரு அலுமினியம் ஷீட்டை வைத்து ஊறவைத்த சிக்கனை அதில் வைத்து, கார்ன் மாவை மேலே தூவிவிடவேண்டும். இதை அவனில் வைத்து 45 - 50 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் உங்கள் சிக்கன் தந்தூரி ரெடி. அவ்வப்போது எடுத்து சிக்கனை இடையில் திருப்பிவிடவேண்டும்.
வெளியில் எடுக்கும்போது அவை மொறு, மொறு பதத்தில் இருக்க வேண்டும். முழுவதும் சமைக்கப்பட்டிருக்க வேண்டும். அவனை அணைத்தபின் அதை அவனிலேயே அதை 10 நிமிடம் வைக்க வேண்டும். உங்கள் தந்தூரி சிக்கன் சாப்பிடுவதற்கு தயாராக உள்ளது. அதை பிறருடன் சேர்ந்து சாப்பிட்டு மகிழங்கள்.
அந்த ஊறவைத்த சிக்கனை கிரில் செய்து சாப்பிடலாம். நெய் அல்லது வெண்ணெய் சேர்த்தும் பேக் செய்து எடுக்கலாம். தண்ணீராக தயிரை பயன்படுத்தக்கூடாது. சிக்கன் தொடை, பிரஸ்ட் இந்த சிக்கன் தந்தூரி செய்ய ஏற்ற பாகங்கள். உங்கள் வீட்டிலே செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
டாபிக்ஸ்