Chicken Shorbha : சளியை அடித்து விரட்டும் சிக்கன் ஷோர்பா! குளிர்காலத்தை இதமாக்கும் உணவுகளில் முதலிடம்!
Jan 23, 2024, 11:39 AM IST
Chicken Shorbha : சளியை அடித்து விரட்டும் சிக்கள் ஷோர்பா! குளிர்காலத்தை இதமாக்கும் உணவுகளில் முதலிடம்!
தேவையான பொருட்கள்
பெரிய வெங்காயம் – 1 பொடியாக நறுக்கியது
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
சிக்கன் – கால் கிலோ
ஷோர்பா மசாலா செய்ய தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடி
மல்லித்தலை – ஒரு கைப்பிடி
இஞ்சி – ஒரு துண்டு
பூண்டு – 8 பல்
மிளகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
(இந்தப்பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்)
மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
ஒரு குக்கரில் எண்ணெய் ஊற்றி, வெங்காயத்தை வதக்க வேண்டும்.
அதனுடனே சுத்தம் செய்த சிக்கனையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.
இவற்றுடன் அரைத்து வைத்த மசாலா விழுதை சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் தேவையான அளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரை மூடி 6 விசில் விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சூடான, ஆவி பறக்கும் சிக்கன் ஷோர்பா ரெடி. குளிர்காலத்தில் இதை செய்து சாப்பிட்டால், குளிருக்கு இதமாகவும், குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இருமல் தொல்லைகளையும் போக்கும்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்