Chettinadu Chicken : சுவையான செட்டி நாடு பெப்பர் சிக்கன் வறுவல்; ஓட்டல் ஸ்டைலில் செய்வது எப்படி? இதோ ரெசிபி!
Apr 08, 2024, 04:34 PM IST
இதை சாதம், வெரைட்டி ரைஸ், சாப்பத்தி, பூரி, இட்லி, தோசை, நாண், ரொட்டி என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இதை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – அரை கிலோ
எண்ணெய் – வறுக்க தேவையான அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தயிர் – கால் ஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது – ஒரு டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 4
மிளகு – அரை ஸ்பூன்
பூண்டு பல் – 6
கறிவேப்பிலை – 2 கொத்து
அரைக்க தேவையான பொருட்கள்
காய்ந்த மிளகாய் – 2
மிளகு – 6
மல்லித்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
செய்முறை -
சிக்கனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.
கடாயில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும்.
வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துகொள்ள வேண்டும்.
4 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், ஊற வைத்திருக்கும் சிக்கன் துண்டுகளை போட்டு ஒருமுறை நன்றாக கிளறிவிட்டு மூடி வைத்து வேகவைக்க வேண்டும்.
மற்றொரு கடாயில் 3 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன், மிளகு, பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த சிக்கனுடன் சேர்த்து கலந்து சிறிது நேரம் நன்றாக வேகவிடவேண்டும். பின்னர் மல்லித்தழை தூவி இறக்கினால் மணமணக்கும் மனம் மயக்கும் ஓட்டல் ஸ்டெல் செட்டிநாடு பெப்பர் சிக்கன் ரெடி.
இதை சாதம், வெரைட்டி ரைஸ், சாப்பத்தி, பூரி, இட்லி, தோசை, நாண், ரொட்டி என அனைத்துக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிட சுவைஅள்ளும். இதை வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
மனஅழுத்தத்துக்கு மருந்து
சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது
வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.
சாப்பிடுவதற்கு எளிதானது
சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.
சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது
இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.
எலும்பை வலுப்படுத்துகிறது
இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.
எடை இழக்க உதவுகிறது
புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.
சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.