Bottle Guard Paratha : சுரைக்காயில் செய்யலாம் பராத்தா! காய்கறிகள் எடுத்துக்கொள்ளாத குழந்தைகளுக்கு பெஸ்ட்!
Mar 30, 2024, 01:37 PM IST
Bottle Guard Paratha : சுரைக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இது உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இது ஆசிய கண்டம் முழுவதிலும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுரைக்காயில் பராத்தா செய்து சாப்பிடுவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். இதை செய்வது மிகவும் சுலபம். எனவே சுரைக்காய் பராத்தாவை செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.
தேவையான பொருட்கள்
சுரைக்காய் - 1
கோதுமை மாவு - 2 கப்
பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
இஞ்சி - 1 துண்டு துருவியது
உப்பு – தேவையாள அளவு
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
மிளகாய் தூள் – ஒன்றரை ஸ்பூன்
மல்லித்தூள் – ஒன்றரை ஸ்பூன்
சீரக தூள் – ஒரு ஸ்பூன்
ஆம்சூர் தூள் – ஒன்றரை ஸ்பூன்
கரம் மசாலா தூள் – ஒரு ஸ்பூன்
ஓமம் – கால் ஸ்பூன் (விரும்பினால்)
கசூரி மேத்தி – ஒரு டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – ஒரு டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை -
சுரைக்காயை கழுவி சுத்தம் செய்யவும். தோலை உரித்து, காயை துருவவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை எடுத்து கொள்ளவும்.
பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், சீரக தூள், ஆம்சூர் தூள், கரம் மசாலா தூள், ஓமம், கசூரி மேத்தி மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.
அடுத்து கோதுமை மாவை தேவையான அளவு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு பிசையவும்.
மாவு கையில் ஒட்டாமல் இருக்க சிறிது எண்ணெய் சேர்த்து பிசையவும்.
மாவை சிறிய சிறிய உருண்டைகளாக உருவாக்கவும்.
மாவு உருண்டைகளை ரொட்டிகளாக உருட்டி, சிறிது நெய் விட்டு தவாவில் இருபுறமும் வேகவைக்கவும்.
சுவையான சுரைக்காய் பராத்தா தயார்.
நன்றி - ஹேமா சுப்ரமணியன்.
சுரைக்காயில் உள்ள சத்துக்கள்
சுரைக்காய் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. இது உடலுக்கு தேவையான தண்ணீர் சத்தை வழங்குகிறது. இதில் மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது. இது ஆசிய கண்டம் முழுவதிலும் பரவலாக உபயோகிக்கப்படுகிறது.
100 கிராம் சுரைக்காயில், 10.99 கலோரிகள் உள்ளது. கொழுப்பு 0.13 கிராம், கார்போஹைட்ரேட்கள் 1.68 கிராம், நார்ச்சத்துக்கள் 2.12 கிராம், கால்சியம் 15.42 மில்லி கிராம், பாஸ்பரஸ், சிங்க் 24.63 மில்லி கிராம், சோடியம் 1.46 கிராம், பொட்டாசியம் 124 கிராம், மெக்னீசியம் 10.93 கிராம் உள்ளது.
இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காயை நாம் சரிவிகித உணவில் பயன்படுத்திக்கொள்ளலாம். இது குறைந்த கலோரிகள் கொண்டது. இது நார்ச்சத்துக்கள் நிறைந்தது. வைட்டமின்களும், மினரல்களும் கொண்டது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது.
சுரைக்காயில் உள்ள நன்மைகள்
இதில் அதிகளவில் தண்ணீர் சத்துக்கள் உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
குறைவான கலோரிகள் கொண்டது.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.
செரிமானத்துக்கு உதவுகிறது.
கல்லீரல் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
ரத்த சர்க்கரை அளவை முறைப்படுத்துகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்