Benefits of Senai Kizhangu : செரிமானம் சீராவது முதல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கட்டிக்காக்கும் சேனை!
Sep 21, 2024, 10:57 AM IST
Benefits of Senai Kizhangu : செரிமானம் சீராவது முதல் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கட்டிக்காக்கும் சேனை!
எலிபெஃன்ட் யாம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சேனைக்கிழங்கு தென்னிந்திய உணவுகளில் அதிகம் இடம்பெறுவது ஆகும். இது எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் கிழங்கு ஆகும். மண்ணுக்கு அடியில் வளரும். இதை நீங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது செரிமானம் முதல் உடல் எடை மேலாண்மை வரை எண்ணற்ற நன்மைகளை உங்கள் உடலுக்கு கொடுக்கிறது. இதில் கூடுதலாக முக்கிய வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளன. இதில் உள்ள வைட்டமின் சி மறறும் பொட்டாசியச் சத்துக்கள் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. சேனைக்கிழங்கில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளன. அது மூட்டுவலி மற்றும் ஆர்த்ரிட்டிஸ் நோயாளிகளுக்கு தீர்வு கொடுக்கிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது. இந்த கிழங்கு இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு இதில் உள் பொட்டாசியம் உதவுகிறது. அது ரத்த அழுத்தத்தையும் முறைப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஒட்மொத்த உடல் ஆரோக்கியத்தையும் காக்கிறது. எனவே இந்த கிழங்கை நீங்கள் அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்துக்கு உதவுகிறது. உடல் எடையை ஆரோக்கியமாக பராமரிக்கவும் செய்கிறது.
சேனைக்கிழங்கில் உள்ள நன்மைகள்
சேனைக்கிழங்கு சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது. தென்னிந்திய சமையலில் அதிகளவில் இடம்பெற்றது சேனைகிழங்குகள். இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனால் உங்களின் செரிமான ஆரோக்கியம் மேம்படுகிறது. மேலும் உங்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. சேனைக்கிழங்கில், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உங்கள் உடலின் வீக்கங்களை குணப்படுத்துகிறது. மூட்டு வலி அல்லது ஆர்த்ரிட்டிஸ் போன்றவற்றால் அவதிப்படுபவர்களுக்கு உதவுகிறது. நீரிழிவு நோயை மேலாண்மை செய்ய உதவுகிறது. இது லோ கிளைசமி இன்டக்ஸ் உணவுகளுள் ஒன்று. இது ரத்த அழுத்த அளவுகளை முறைப்படுத்துகிறது. இதில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் சேனைக்கிழங்கை நோய் எதிர்ப்பை வழங்க வைக்கிறது. ஆன்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்து போராடுகிறது. இதனால் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்படுத்தப்படுகிறது.
சேனைக்கிழங்கு சமையலறை பயன்பாடுகள்
சேனைக்கிழங்கில் வறுவல், கோலா உருண்டை என செய்து அசத்தலாம். இதை வெட்டி மோரில் அலசி, புளி சேர்த்து வேகவைத்து, மசாலா தடவி வறுவல் செய்யப்படுகிறது. தேங்காய் மசாலா அரைத்து சேனைக்கிழங்கு பொரியல் செய்யப்படுகிறது. சேனைக்கிழங்கில் புளிக்குழம்பு வைக்கலாம். சேனைக்கிழங்கு மசியல் மசாலாக்களை வைத்து செய்யப்படுகிறது. இவையெல்லாம் சேனைக்கிழங்கின் அற்புத நன்மைகளை உங்கள் உடலுக்கு கிடைக்கச் செய்கிறது.
சமைக்கும் முறை
கிழங்கை சுத்தமாக அலசிவிட்டு, தோலை நீக்கி சமைத்து சாப்பிடவேண்டும். இந்த கிழங்கை சிறிது காலம் காயவிட்டு சமைக்கவேண்டும். ஏனெனில் இது நாக்கில் அரிப்பை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. எனவேதான் இதை மோரில் கழுவி, புளியை சேர்த்து வேகவைக்கிறோம். சிறிய துண்டுகளாக வெட்டி சமைக்கும்போது, அனைத்து புறங்களிலும் வெந்து இருக்கும். இதை செய்யும்போது கட்டாயம் மஞ்சள் பொடி சேர்க்கப்படுகிறது. அது நிறத்திற்காக மட்டுமல்ல, இதன் வீக்கத்துக்கு எதிரான குணங்களை அதிகரிப்பதற்காகவும்தான்.
எனவே உங்கள் சரிவிகித உணவில் சேனைக்கிழங்கை கட்டாயம் சேர்த்துக்கொளுளுங்கள். உங்கள் உணவுக்கு இது புதிய சுவையைத் தரும். உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைக் கொடுத்து, நீங்கள் அதிகம் சாப்பிடாமல் பார்த்துக்கொள்கிறது. இதில் உள்ள வைட்டமின்கள் உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.