தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  மத்தி மீனுக்கு ஏன் இவ்வளவு மவுசு? விலையக் கேட்டா ரவுசு! மத்திக்கேன் இத்தனை பவுசு

மத்தி மீனுக்கு ஏன் இவ்வளவு மவுசு? விலையக் கேட்டா ரவுசு! மத்திக்கேன் இத்தனை பவுசு

I Jayachandran HT Tamil

Mar 14, 2023, 09:12 PM IST

google News
மத்தி மீனுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி பற்றியும் அதைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.
மத்தி மீனுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி பற்றியும் அதைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.

மத்தி மீனுக்கு ஏற்பட்டுள்ள கிராக்கி பற்றியும் அதைச் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் இங்கு காணலாம்.

தமிழகத்தில் வங்கக் கடலோரம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மத்தி மீன் என்றால் மக்களுக்கு நன்றாகத் தெரியும். கேரளத்தில் இந்த மீனை சாளை என்றும் பேசாளை என்றும் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் மத்தி மீனை சார்டைன் என்கின்றனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு கிலோ பதினைந்து ரூபாய்க்கு விற்ற மீன் இப்போது கிலோ 400 ரூபாய்க்கு விற்கிறது. அந்த அளவுக்கு மத்தி மீனுக்கு இப்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது.

காரணம் இதில் நிறைந்துள்ள அபரிமிதமான புரதச்சத்தும், ஒமேகா 3 அமில கொழுப்பும்தான். இது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் உகந்த ஊட்டச் சத்துகளாகும்.

இருபதாண்டுகளுக்கு முன் இந்த மீனை மீனவர்கள் மட்டுமே சாப்பிட்டு வந்தனர். அல்லது உரத்துக்கு அனுப்பிவிடுவர்.

இப்போது மருத்துவ உலகம் மத்தி மீனில் உள்ள அத்தியாவசிய சத்துக்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளதால் இதன் விலை இப்போது சக்கை போடு போடுகிறது.

இப்போது மத்தி மீன் தான் கடலூர் மாவட்ட மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. இப்போது தூத்துக்குடி, ராமேஸ்வரம் கடற்பகுதிகளிலும் ஏராளமான மத்தி மீன்கள் கிடைக்கின்றன. தமிழகம் முழுவதும் இப்போது தாராளமாகக் கிடைக்கிறது. பொதுவாக ஆண்டு தோறும் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மத்தி மீன்கள் கிடைக்கிறது. மற்ற மாதங்களில் இனப் பெருக்கத்துக்காக மத்தி மீனை மீனவர்கள் பிடிப்பதில்லை.

100 கிராம் மத்தி மீனில் புரதச்சத்து 20.9 கிராமும், கொழுப்பு சத்து 10.5 கிராமும், சாம்பல் சத்து 1.9 கிராமும், நீர்ச்சத்து 66.70 கிராமும் உள்ளது.

அயிலா, விலைமீன் ஆகியவற்றை விட மத்தி மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் அதிகம் உள்ளதால் ட்ரை கிளிசரைடுகள் அளவை குறைத்து இதய நோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

தோல் நோய், மூளை மற்றும் நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, முடி உதிர்தல் ஆகிய நோய்கள் வரும் வாய்ப்பை குறைக்கும்.

மத்தி மீனில் வைட்டமின் டி என்ற உயிர்ச்சத்து உள்ளது. இந்த சத்து செல்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. மத்தி மீன் பல்வேறு புற்று நோய்கள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.

மத்தி மீனை உண்பதால் கண், இதயம், நீரிழிவு, எலும்பு மற்றும் உடலில் உள்ள அனைத்து பாகங்களும் நன்மை அடையும்.

வாரம் இருமுறை மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் நாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள், மத்தி மீன் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம்.

மத்தி மீன்களில் கால்சியம் அதிகம் இருப்பதால் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

கூடுதலாக மத்தி மீனில் இருக்கும் வைட்டமின் பி 12 நாம் உடலில் இருக்கும் ஹோமோசைஸ்டீன் அளவை கட்டுபடுத்தி இதய பாதிப்பில் இருந்து நம்மை காப்பற்றி இதயம் பலப்பட உதவும்.

மத்தி மீனில் அயோடின் கலந்த தாதுச்சத்து உள்ளதால் அதை நாம் உணவில் சேந்த்து சாப்பிட்டு வந்தால் முன் கழுத்துகழலை நோய் ஏற்படுவதை தடுக்கலாம்.

மத்தி மீனின் செல்களில் இருந்து தான் கால்சியம் மாத்திரைகள் தயாரிக்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை சாப்பிடுவதால் சருமத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது.

கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள் மத்திமீனை உணவில் சேர்த்துக் கொள்வதால் கண் குறைபாடு நீங்கி பார்வை திறன் அதிகரிக்கும்.

உடற்பயிற்சி செய்பவர்கள் டயட்டில் உள்ளவர்கள் வாரம் இரு முறை மத்தி மீனை உணவில் சேர்த்து கொண்டால் நாம் உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி