Benefits of Raw Papaya : பழத்தில் பல பலன்கள் உள்ளது தெரியும்! பப்பாளி காயிலும் இத்தனை நற்குணங்களா?
Sep 20, 2024, 09:42 AM IST
Benefits of Papaya : பழத்தில் பல பலன்கள் உள்ளது தெரியும். பப்பாளி காயிலும் இத்தனை நற்குணங்கள் உள்ளதா? இதில் சமையலும் செய்ய முடியுமா?
பப்பாளி பழம் நமது சருமத்தை பளபளப்பாக்கும் இயற்கை மூலம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனால் நாம் அதை தினமும் சாப்பிடலாம். ஆனால் பப்பாளி காயிலும் எண்ணற்ற நன்மைகள் உள்ளது தெரியுமா? இதையும் நாம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள முடியும். பப்பாளி காயில் எண்ணற்ற ஆரோக்கிய குணங்கள் உள்ளது. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம். வைட்டமின் சி, ஏ, பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் பப்பைன் என்ற எண்சைம்கள் உள்ளது. இது செரிமானம் மற்றும் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் கொண்டது. பப்பாளியை காய செய்து சாப்பிடும்போது அதனால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். பப்பாளி காயை எண்ணற்ற வகைகளில் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். கேரடில் இருந்து செய்யக்கூடும் அனைத்து உணவுகளும் பப்பாளி காயிலும் செய்ய முடியும்.
பப்பாளிக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்
ஊட்டச்சத்துக்கள் அதிகம்
பப்பாளிக்காயில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளன. உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் வைட்டமின் ஏ, சி, ஃபோலேட், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உள்ளன.
நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு ஊட்டமளிக்கிறது
பப்பாளிக்காயில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி சத்துக்கள் உங்கள் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகின்றன. இது தொற்றுக்களை குறைத்து உங்கள் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
செரிமான ஆரோக்கியம்
பப்பாளி காயில் பப்பைன் என்ற எண்சைம்கள் உள்ளது. இது உங்கள் செரிமானத்தை பாதுகாக்கிறது. இது செரிமான கோளாறுகளை சரிசெய்கிறது. இது மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் ஆகியவற்றை போக்குகிறது.
வீக்கத்துக்கு எதிரான குணங்கள்
பப்பாளிக்காயில் உள்ள எண்ணற்ற ஃபைட்டோகெமிக்கல்களில் வீக்கத்துக்கு எதிரான குணங்கள் உள்ளது. இது உங்கள் உடலில் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இது நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
உடல் எடை மேலாண்மை
பப்பாளிக்காயில் கலோரிகள் குறைவு. இதில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது உடல் வளர்சிதை மற்றும் செரிமான கோளாறுகளைப் போக்கும் எண்சைம்களைக் கொண்டது. உங்கள் உணவில் பப்பாளிக்காய்களை சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களின் உடல் எடையை முறையாகப் பராமரிக்க உதவுகிறது.
சரும ஆரோக்கியம்
பப்பாளிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உங்கள் சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது. வயோதிக தோற்றத்தை குறைக்கிறது. சரும சேதத்தை தடுக்கிறது. ஃப்ரி ராடிக்கல்களால் ஏற்படும் சரும கோளாறுகளைப் போக்குகிறது.
இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது
பப்பாளிக்காயில் பொட்டாசியச் சத்துக்கள் உள்ளது. இது ரத்த அழுத்தத்தை குறைத்து முறைப்படுத்துகிறது. ரத்த அழுத்த உயர்வைத் தடுக்கிறது. இதில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்துக்கள் உடலில் கொழுப்பு அளவை அதிகரிக்கிறது.
புற்றுநோய் தடுப்பு
பப்பாளிக்காயில் ஐசோதியோசயானேட்கள் மற்றும் ஃப்ளேவனாய்ட்கள் அதிகம் உள்ளது. இது புற்றுநோய்க்கு எதிரான குணங்களைக் கொண்டது. குறிப்பாக குடல், புராஸ்டேட் மற்றும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் ஆபத்துக்களை குறைக்கிறது.
மாதவிடாய் வலி
பப்பாளிக்காயை சாப்பிடுவது அல்லது பப்பாளி இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் தேநீரைப் பருகுவது உங்கள் உடலில் மாதவிடாய் வலிகள் ஏற்படாமல் தடுக்கும். இது உங்களுக்கு மாதவிடாய் பிரச்னைகளினால் ஏற்படும் அசவுகர்யங்களைப் போக்குகிறது.
கண் ஆரோக்கியம்
பப்பாளிக்காயில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது உங்கள் கண்பார்வைத்திறனை அதிகரிக்க உதவும். இது வயோதிகம் தொடர்பான பார்வைக்குறைபாடுகளைப்போக்குகிறது.
பப்பாளிக்காய்களை சாப்பிடும் முறை
பப்பாளிகாயின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, நீங்கள் செய்யப்போகும் டிஷ்களுக்கு ஏற்ற வகையில் துருவியோ அல்லது நறுக்கியோ சாப்பிடவேண்டும். இதை பச்சையாகவும் சாப்பிடலாம். சமைத்தும் சாப்பிடலாம். இதன் சுவை வெள்ளிரியின் சுவைப்போன்று இருக்கும்.
பப்பாளிக்காய்களை மிதமான அளவு மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இதனால் நோய் எதிர்ப்பு, சரும ஆரோக்கியம், செரிமானம் என எண்ணற்ற நன்மைகள் உள்ளது. உங்கள் உணவுப்பழக்கத்தில் ஏதேனும் மாற்றங்களை செய்யும்போது, உங்கள் மருத்துவரிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது. ஏனெனில் ஒரு சிலருக்கு உணவு அலர்ஜி இருக்கலாம்.
பொறுப்பு துறப்பு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவையாகும். இது உங்களுக்கு ஒரு துணை மட்டுமே. தரமான உங்கள் மருத்துவரின் பரிந்துரையால் வழங்கப்படுவதைவிட துல்லியமானது என்று நாங்கள் கூறமாட்டோம். எப்போதும் மேலதிக விவரங்களுக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது.