தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Benefits Of Garlic : தினமும் காலையில் ஒரே ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Benefits of Garlic : தினமும் காலையில் ஒரே ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

Priyadarshini R HT Tamil

Jul 22, 2024, 11:08 AM IST

google News
Benefits of Garlic : தினமும் காலையில் ஒரே ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? தெரிந்தால் தினமும் கட்டாயம் சேர்பீர்கள்.
Benefits of Garlic : தினமும் காலையில் ஒரே ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? தெரிந்தால் தினமும் கட்டாயம் சேர்பீர்கள்.

Benefits of Garlic : தினமும் காலையில் ஒரே ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரியுமா? தெரிந்தால் தினமும் கட்டாயம் சேர்பீர்கள்.

தினமும் காலையில் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு வாருங்கள். அது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கும்.

பூண்டு பற்களை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

பூண்டு, சூப்பர் ஃபுட் உணவுகளுள் ஒன்று. இது பல நூற்றாண்டுகளாக, இதன் மருத்துவ குணங்களுக்காக உணவு, சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

எனவே தினமும் காலையில் வெறும் வயிற்றில், ஒரு பல் பூண்டு சாப்பிடுவது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொடுக்கிறது. உங்கள் அன்றாட உணவில் ஒரு பல் பூண்டை மென்று சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். அவை என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது

பூண்டில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளது. இதில் அலிசின் போன்ற உட்பொருட்கள் உள்ளது. இது நுண்ணுயிர்களுக்கு எதிரானது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. இது உங்கள் உடலின் நோய் தொற்றுகள் மற்றும் நோயை எதிர்த்து போராட உதவுகிறது. பூண்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால், உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற தொற்றுகள் அடிக்கடி ஏற்படாமல் தடுக்கிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது

பூண்டில் உள்ள அலிசின் என்ற உட்பொருள் உங்கள் உடலில் உள்ள ரத்த நாளங்களை அமைதிப்படுத்தி, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இதனால் உங்கள் உடலின் ரத்த அழுத்த அளவு குறைகிறது. எனவே பூண்டை உட்கொள்வது உங்களுக்கு ரத்த அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் இதய நோய் ஆபத்துக்களை குறைக்கிறது.

கொழுப்பு அளவை அதிகரிக்கிறது

பூண்டு, உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. இந்த இரு கொழுப்புக்களும் சமமாக இருப்பது உங்கள் உடலில் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.

கழிவுநீக்கத்தை மேம்படுத்துகிறது

பூண்டு, உங்கள் கல்லீரலில் உள்ள கழிவு நீக்க எண்சைம்களை அதிகரிக்கிறது. பூண்டில் உள்ள சல்ஃபர் உங்கள் உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை அதிகரித்து உங்கள் உடலின் கழிவுநீக்கத்தை அதிகரிக்கிறத. உங்களுக்கு நாள்பட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

செரிமான ஆரோக்கியம்

பூண்டு, செரிமான எண்சைம்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ப்ரிபயோடிக் உட்பொருட்கள், குடல் நுண்கிருமிகளை அதிகரிக்கிறது. இதனால் பூண்டை நீங்கள் தினமம் சாப்பிடும்போது, அது செரிமானக் கோளாறுகளைப் போக்குகிறது. மேலும் வயிறு உப்புசம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கலைப் போக்குகிறது. இது உங்கள் உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறத.

வீக்கத்தை குறைக்கிறது

பூண்டில் உள்ள சல்ஃபர் என்ற உட்பொருள், வீக்கத்துக்கு எதிரான குணங்கள் நிறைந்தது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கிறத. இது ஆர்த்ரிட்டிஸ் போன்ற நிலைகளைத தடுக்கிறது. வீக்கக்கோளாறுகளையும் போக்குகிறது.

எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

பூண்டில் உள்ள வைட்டமின் சி, பி6 மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள், வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. பூண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது, உங்கள் உடலில் எலும்புப்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிரான உட்பொருட்கள், சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. மேலும் முகப்பருக்களை போக்குகிறது. தெளிவான சருமத்தை உருவாக்குகிறது. பூண்டை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளும்போது, அது உங்களுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. சருமத்தை பளபளப்பாக்குகிறது.

அத்தலடிக் திறனை அதிகரிக்கிறது

உடலில் நைட்ரிக் ஆசிட் உற்பத்தியை பூண்டு அதிகரிக்கிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசைகளுக்கு ஆக்ஸிஜன் செல்வதை உறுதிசெய்கிறது. ரத்த ஓட்டம் உடலின் திறனை அதிகரிக்கிறது. மயக்கம், வாந்தி, சோர்வு ஆகியவற்றை குறைக்கிறது.

அடுத்த செய்தி