Benefits of Fennel Seeds : செரிமானம்; சுவாச புத்துணர்ச்சி; எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் சோம்பு! முழு விவரம் இதோ!
Sep 16, 2024, 12:03 PM IST
Benefits of Fennel Seeds : செரிமானம், சுவாச புத்துணர்ச்சி என எண்ணற்ற நன்மைகளை அள்ளித்தரும் சோம்பு இன்னும் எத்தனை நன்மைகளை வழங்குகிறது என்ற முழு விவரம் இதோ.
தினமும் ஒரு ஸ்பூன் சோம்பை வாயில் போட்டு மெல்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். அதை தெரிந்துகொண்டால் நீங்கள் கட்டாயம் அதை பின்பற்றுவீர்கள். சோம்பில் உள்ள ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள். சோம்பு அல்லது பெருஞ்சீரகம் என்று அழைக்கப்படுகிறது சோம்பு. இந்தியாவில் உள்ள சமையலறைகளில் நீக்கமற இடம் பெற்றிருப்பது. அதன் நன்மைகளை தெரிந்துகொள்ளும் முன்னரே நீங்கள் அதை பயன்படுத்திதான் வந்துள்ளீர்கள். இன்னும் முழுமையாக தெரிந்துகொண்டால் விடவே மாட்டீர்கள். இது சாப்பிட்டவுடன் செரிமானத்துக்காகவும், வாயில் புத்துணர்ச்சியை ஏற்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ஓட்டல்களில் உணவு சாப்பிட்டு திரும்பும்போது கொடுப்பார்கள். இது உங்கள் உடலை சுத்தம் செய்வதுடன் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது. சோம்பு ஒரு ஸ்பூன் தினமும் சாப்பிடுவதால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.
செரிமானத்துக்கு உதவுகிறது
சோம்பில் செரிமானத்துக்கு உதவக்கூடிய எண்ணற்ற நற்குணங்கள் உள்ளன. அவை உங்கள் உடலில் வாயுவை ஏற்படுத்தும் எண்சைம்கள் உருவாகத் தூண்டுகிறது. இது செரிமானத்தை இலகுவாக்குகிறது. மேலும் வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஆகிய பிரச்னைகளையும் தீர்க்கிறது.
சுவாச புத்துணர்ச்சி
சோம்பு இயற்கையிலேயே இனிப்பு சுவை கொண்டது. இது உங்கள் சுவாசத்துக்கு புத்துணர்ச்சியளிக்கிறது. வாய் துர்நாற்றத்தைப் போக்குகிறது. இதன் சுவையும், புத்துணர்வுத்திறனும் அதற்கு உதவுகிறது. இதில் உள்ள பாக்டீரியாக்களுக்கு எதிரான குணங்கள், வாயில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்து போராடி உங்கள் சுவாசத்துக்கு இயற்கை புத்துணர்ச்சியைத் தருகிறது.
ரத்த அழுத்தத்தை முறைப்படுத்துகிறது
சோம்பில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அது ரத்த அழுத்த அளவுகளை முறைப்படுத்த உதவுகிறது. இது உங்கள் உடலில் அதிமான சோடியம் ஏற்படுத்தும் எதிர்மறை பாதிப்புகளுககு எதிராக வினைபுரிந்து, உங்கள் ரத்த அழுத்த அளவை முறைப்படுத்துகிறது. எனவே இதய ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில் கொஞ்சம் சோம்பை மெல்வது நல்லது.
வளர்சிதை மாற்றம்
சோம்பின் உட்பொருட்கள் உங்கள் உடலில் வளர்சிதை மாற்றங்கள் ஏற்பட உதவுகிறது. இது உங்கள் உடல் எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது. எனவே நீங்கள் உணவில் அதிகம் சோம்பு எடுத்துக்கொள்ளும்போது அது உங்கள் உடல் கொழுப்ப எரிக்கும் திறனை அதிகரிக்கிறது. மேலும் நீங்கள் உட்கொள்ளும் உணவை சிறப்பாக செரிக்கச்செய்து சத்துக்களை உடல் எடுத்துக்கொள்ள உதவுகிறது.
சரும ஆரோக்கியம்
சோம்பில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் குயிர்செடின் ஆகியவை உடலில் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை ஏற்படுத்தும் ஃப்ரி ராடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. இது உங்களை ஆரோக்கியமாகவும், சருமத்தை பளபளக்காவும் வைத்திருக்கவும் உதவுகிறது. இது வயோதிகத் தோற்றம் மற்றும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்குகிறது.
பசியைக் கட்டுப்படுத்துகிறது
சோம்பில் உள்ள நார்ச்சத்துக்கள் பசியை கட்டுப்படுத்துகிறது. இது உங்கள் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. இது நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தடுக்கிறது. இது உங்களுக்கு இயற்கையில் பசியைப் போக்கும் நிவாரணியாக இருக்கும். உங்களின் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவும்.
மாதவிடாய் அசவுகர்யங்களைப் போக்குகிறது
சோம்பில் உள்ள ஃபைட்டோஸ்ட்ரோஜென்கள், ஹார்மோன்களின் சமமின்மையைப்போக்கி, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் அசவுகர்யங்களைக் குறைக்கிறது. சோம்பை மெல்லும்போது, அது உங்கள் மாதவிடாயில் ஏற்படும் வலிகளைப் போக்குகிறது. மெனோபாஸ்க்கு முந்தைய அறிகுறிகளைப் போக்குகிறது. மேலும் மாதவிடாய் சுழற்சியை முறைப்படுத்துகிறது.
சுவாச ஆரோக்கியத்துக்கு உதவுகிறது
சோம்பில் உள்ள வீக்கத்துக்கு எதிரான குணங்கள் மற்றும் நுண்ணுயிர்களுக்கு எதிரான குணங்கள் உங்களின் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசக் கோளாறுகளை சரிசெய்கிறது. சளி, இருமல் ஆகியவற்றைப் போக்குகிறது. சுவாச மண்டலத்தில் உள்ள தசைகளுக்கு ஓய்வு கொடுத்து, உங்களுக்கு ஏற்படும் சளியைப் போக்கிற, உங்களின் சுவாசத்தை எளிதாக்குகிறது.
என்ன எங்க போறீங்க? ஒரு ஸ்பூன் சோம்பை எடுத்து வாயில் போட்டு மெல்லத்தானே? ஆரோக்கிய வாழ்வுக்கு வாழ்த்துக்கள்.