தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Beauty Tips: திரவ லிப்ஸ்டிக்கின் அட்வான்டேஜ் என்ன தெரியுமா?

Beauty Tips: திரவ லிப்ஸ்டிக்கின் அட்வான்டேஜ் என்ன தெரியுமா?

I Jayachandran HT Tamil

Apr 12, 2023, 09:44 PM IST

google News
திரவ லிப்ஸ்டிக்கின் சாதகங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
திரவ லிப்ஸ்டிக்கின் சாதகங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

திரவ லிப்ஸ்டிக்கின் சாதகங்கள் குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.

இப்போது இளம் பெண்களிடையே சாதாரண லிப்ஸ்டிக்குகளை விட திரவ மேட் பினிஷ் லிப்ஸ்டிக் தான் புதிய டிரெண்டாக இருக்கிறது. லிக்விட் மேட் பினிஷ் லிப்ஸ்டிக் ரகங்கள் புத்துணர்ச்சி தருவதாக, உற்சாகமானதாக காணப்படுவதாக உணர்கின்றனர். இதில் சிறந்த அம்சம் என்னவெனில், இவை எளிதாகக் கலைவதில்லை. நீடித்து நிற்கும் தன்மை கொண்ட இந்த லிப்ஸ்டிக் எந்த நிலையிலும் 24 மணி நேரமும், நேர்த்தியாக காட்சி அளிக்க விரும்புகிறவர்களுக்கு மிகவும் ஏற்றவை. அதேநேரத்தில் திரவ லிப்ஸ்டிக்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இருக்கிறது. இதில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றியும் இருக்கின்றன. உங்கள் உதடுகள் மீது மேட் பளபளப்பை முழுமையாக பெற நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில அம்சங்கள் இங்கு கூறப்பட்டுள்ளன.

மேட் பினிஷ் கொண்ட திரவ உதடு வண்ணங்கள் நீடித்து இருக்க கூடியவை என்பதால், உதடுகள் மீது சற்று உலர்ந்திருக்கும் தன்மை கொண்டவை. எனவே உங்கள் உதடு மீது லேசாக இருக்க கூடிய லேசான பார்முலா கொண்ட திரவ மேட் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வது முக்கியம். லாக்மே அப்சல்யூட் மேட் மெல்ட் லிக்விட் லிப் கலர் சரியான தேர்வாக இருக்கும். அதோடு, உங்கள் உதடுகளை சரியாக தயார் செய்து கொள்ள மறக்க வேண்டாம். உதடுகள் மீது வாஸலின் பெட்ரோலியம் ஜெல்லியை தடவிக்கொண்டு, மற்ற மேக்கப்பை முடிக்கும் வரை அது ஊடுருவட்டும். இது உதடுகளின் உலர் தன்மையை கட்டுப்படுத்தும்.

லாக்மே அப்சல்யூட் மேட் மெல்ட் லிக்விட் லிப் கலர் போன்ற திரவ மேட் லிப்ஸ்டிக் ரகங்கள் அடர் வண்ண தன்மை மற்றும் வெல்வெட் மேட் பினிஷ் கொண்டிருப்பதால் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது. கூடுதலான லிப்ஸ்டிக், திட்டு திட்டாக காட்சி அளிக்கலாம். எனவே ஒன்றை மட்டும் தேர்வு செய்து, அதை உதடுகள் மீது மெல்ல ஒரு முறை தடவினால் போதுமானது. கீழ் உதட்டில் இருந்து துவங்கி, மேல் உதட்டின் நடுப்பகுதியில் முடிக்கவும்.

உதடுகள் மீது திரவ லிப்ஸ்டிக்கை பூசிய பிறகு மேட் பினிஷ் தனது ஜாலத்தை காண்பிக்கும். கிளாஸ் அல்லது கிரிமி டெக்சர் ரகங்களில் செய்வது போல உதடுகளை ஒன்றாக குவித்து உரச வேண்டாம். திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்திய பிறகு இவ்வாறு செய்தால், அதன் தோற்றம் பாதிக்கப்படலாம். எனவே, கீழ் உதட்டில் பயன்படுத்திவிட்டு மேல் உதட்டில் பயன்படுத்தி அது உலர்வதற்கு காத்திருக்கவும்.

திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்து இருப்பவை. டச்சப் தேவை இல்லாதவை. இதை தடவிக்கொண்டால் போதும் அது பளபளப்பை அளிக்கும். இரட்டை பூச்சு தேவையில்லை. இது பாதிப்பையே ஏற்படுத்தும். உலர் தன்மையையும் உண்டாக்கும்.

திரவ லிப்ஸ்டிக் ரகங்கள் நீடித்த தன்மை கொண்டவை என்பதால், உலர் தன்மையும் கொண்டவை. எனவே இவற்றை அகற்றுவது கொஞ்சம் கடினம். ஆகவே, திரவ லிப்ஸ்டிக் பயன்படுத்தும் முன், கைப்பையில் நல்ல மேக்கப் ரிமூவர் வைத்திருப்பது நல்லது. லாக்மே அப்சல்யூட் பை பேஸ்ட் மேக்கப் ரிமூவர் சருமத்தின் மீது மிகவும் மென்மையானது. மேக்கப்பை நன்றாக அகற்றக்கூடியது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி