Diabetes: அதிகம் சாப்பிடுபவராக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளதா? - மருத்துவர் கூறும் ஆலோசனை
Aug 28, 2024, 04:14 PM IST
Diabetes: அதிகம் சாப்பிடுபவராக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளதா? - மருத்துவர் கூறும் ஆலோசனை என்ன என்பது குறித்துப் பார்ப்போம்.
Diabetes: கணையத்தால் போதுமான அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது அல்லது உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை உடலால் திறம்பட நிர்வகிக்க இயலாதபோது ஏற்படும் நாள்பட்ட கோளாறு, நீரிழிவு நோய் ஆகும். இன்சுலின் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.
டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு இரண்டும் பொதுவானவை. இருப்பினும், பொதுவாக நீரிழிவு நோயின் இரண்டு வகைகளும், நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் தொடர்புடையவை என்று சமீபத்தில் ஆய்வுகள் வெளியாகியுள்ளன. அதாவது ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது என்பது நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். அவை ஒரு நபரை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கும்.
இதுதொடர்பாக ஃப்ரீடம் ஆஃப் டயாபட்டிக்ஸ் என்ற அமைப்பின் நிறுவனர் மருத்துவர் பிரமோத் திரிபாதி அளித்த பேட்டியில், நீரிழிவு நோய்க்கும் உணவு எடுத்துக்கொள்வதிலும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன என விளக்கினார்.
நீரிழிவு நோய்க்கும் உணவை அதிகம் உண்பதற்கும் உள்ள தொடர்பு என்ன?
"உணவு மற்றும் இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவது உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும். மாறாக, உணவை ஒழுங்கு இல்லாமல் நிறைய சாப்பிடுவது நீரிழிவை அதிகமாக்கும். இதன் விளைவாக மோசமான இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் உடல்நலப் பிரச்னைகள் அதிகரிக்கும் "என்று டாக்டர் பிரமோத் திரிபாதி கூறினார்.
உணவு விழிப்புணர்வின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியுமா?
’’நீரிழிவு நோயாளிகள் தங்கள் கார்போஹைட்ரேட் உட்கொள்ளலை கவனமாக நிர்வகிக்க வேண்டும். அதாவது மாவுசார்ந்த உணவுகளை எடுக்கும்போது மிதமான அளவே எடுத்துக்கொள்ளவேண்டும். அதைத்தொடர்ந்து, இரத்த சர்க்கரை அளவைக் கண்காணிக்க வேண்டும். கடுமையான இன்சுலின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.
உணவு மற்றும் ஆரோக்கியத்தில் சில நேரம் ஓவர் அக்கறையுடன் இருக்கக்கூடாது. இது மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். இது உணவு தொடர்பான கோளாறுகளைத் தூண்டும். உதாரணமாக, கடுமையான உணவுக் கட்டுப்பாட்டின் தேவை, உடல் அமைப்பு மாற்றம் குறித்த தேவையற்ற எண்ணங்களுக்கு வழிவகுக்கும். இதுசில நேரங்களில் ஒழுங்கற்ற உணவு முறை நுகர்வுக்கு வழிவகுக்கும்"என்று டாக்டர் பிரமோத் திரிபாதி கூறினார்.
நீரிழிவு நிர்வாகத்தை பாதிக்கும் உணவு நுகர்வு:
அதிக உணவு உட்கொள்வது, பசியின்மை போன்ற உணவுக் கோளாறுகள் நீரிழிவு கட்டுப்பாட்டை கடுமையாக பாதிக்கும். இதுதொடர்பாக அந்த மருத்துவர் மேலும் கூறியதாவது, "உதாரணமாக, பசியின்மை உள்ளவர்கள் தங்கள் உணவு உட்கொள்ளலை மிகவும் கட்டுப்படுத்தலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகுக்கும். மறுபுறம், அதிகப்படியாக உண்ணும் பழக்கம் கொண்ட ஒருவர் அதிகப்படியான உணவை எடுத்துக்கொள்வதால், நீரிழிவு நோய் அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோயை திறம்பட நிர்வகிப்பது முக்கியம்’’ என்றார்.
நீரிழிவு நோயாளிகள் இயற்கையாகவே இனிப்பு பழங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் தவறாக நம்புகிறார்கள். இருப்பினும், சில பழங்களில் வைட்டமின்கள், நோய் எதிர்ப்புச்சக்திகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
குறிப்பாக ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு மற்றும் செர்ரி போன்ற பழங்கள் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவியாக இருக்கும். இது இரத்த சர்க்கரை கட்டுப்படுத்தவும்; எடை நிர்வாகத்திற்கும் உதவுகிறது. ஆரஞ்சு வைட்டமின் சி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் பிற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் தொழில்முறை மருத்துவ ஆலோசனைக்கு மாற்றாக அல்ல. மருத்துவ நிலை குறித்த ஏதேனும் கேள்விகளுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறவும்.