(5 / 9)3. பன்னீர் டிக்கா சைவப்பிரியர்களுக்கு மிகவும் உகந்த உணவு இது. பன்னீரை சிறு துண்டுகளாக வெட்டி அதில் கம்பியில் துளைத்து தந்தூர் அடுப்பில் ரோஸ்ட்டாக வறுத்து எடுக்க வேண்டும். அதைப் பார்த்தாலே யாருக்கும் நாக்கில் எச்சில் ஊறும். தேவையான பொருட்கள்- பன்னீர் - அரை கிலோ தக்காளி - 1 வெங்காயம் -1 குடைமிளகாய் - 1 சீரகம் - அரை டீஸ்பூன் காய்ந்த மல்லி - அரை டீஸ்பூன் பிரவுன் ஏலக்காய் -1 பச்சை ஏலக்காய் - 10 கிராம்பு - அரை டீஸ்பூன் குறுமிளகு - அரை டீஸ்பூன் அன்னாசிப்பூ - 2 சீரகம்- அரை டீஸ்பூன் இஞ்சிப்பூண்டு பேஸ்ட் - 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன் சிவப்பு மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் மல்லித்தூள் - 2 டீஸ்பூன் உப்பு - 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன் ரீபைண்டு எண்ணெய் - அரை டீஸ்பூன் எலுமிச்சை - 2 உலர்ந்த மாங்காய்த்தூள் (ஆம்ச்சூர்) - அரை டீஸ்பூன் சாட் மசாலா - அரை டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 நன்கு அடித்த தயிர் - 100 கிராம் கரம் மசாலா - அரை டீஸ்பூன் மல்லித்தழை- சிறிதளவு புதினாத்தழை - சிறிதளவு செய்முறை- வாணலியில் வெறுமனே சீரகம், காய்ந்த மல்லி, பிரவுன் மற்றும் பச்சை ஏலக்காய், கிராம்பு, குறுமிளகு, அன்னாசிப்பூவை வறுத்துப் பொடித்து வைக்கவும். 2.ஒரு பாத்திரத்தில் இஞ்சிப்பூண்டு பேஸ்ட், மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு, காஷ்மீரி மிளகாய்த்தூள், ரீபைண்டு எண்ணெய், நறுக்கிய மல்லித்தழை, புதினா, எலுமிச்சை சாறு, ஆம்ச்சூர் பவுடர், தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். 1.ஒரு டிரேயில் பன்னீர் துண்டுகள், அரிந்த வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை எடுத்துக் கொள்ளவும். 2. அத்துடன் மசாலா பொருட்களை சேர்த்து கலக்கவும். பன்னீரில் மசாலை பொருட்களை பூசி விடவும். 3.கம்பிகளில் பன்னீர், வெங்காயம், குடைமிளகாய், தக்காளியை ஒன்றன்பின் ஒன்றாகக் கோத்து விடவும். 4.மசாலா பூசிய பன்னீர் டிக்காவை பிரிட்ஜில் 45 நிமிடங்கள் வைத்திருக்கவும். 5. பின்னர் அதை எடுத்து தந்தூரி அடுப்பில் நன்கு வேகவிடவும். 6. சுடச்சுட பன்னீர் டிக்காவை பரிமாறுங்கள். டிக்காவுடன் புதினா சட்னி மிகச்சுவையாக இருக்கும். 4. லஸ்ஸி பஞ்சாபிகளுக்கும் லஸ்ஸிக்கும் ஏகப்பொருத்தமாக இருக்கும். நல்ல கெட்டியான தயிரில் செய்யப்படும் லஸ்ஸி ஒவ்வொரு வாய் எடுத்து சாப்பிடும்போதும் வாயில் தித்திக்கும். தேவையான பொருட்கள்- கெட்டியான தயிர் - அரை கப் வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 ஸ்கூப் சர்க்கரை - 1 டீஸ்பூன் குங்குமப்பூ - 1 பிஞ்ச் தண்ணீர் - கால்கப் நறுக்கிய பாதாம் - 3 செய்முறை - 1. தயிர், சர்க்கரை, தண்ணீர், வெண்ணிலா ஐஸ்கிரீம் எடுத்து நன்கு கடையவும். 2. ஒரு சிறிய கிண்ணத்தில் குங்குமப்பூவை எடுத்து ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீரை விட்டு கலக்கவும். 3.கடைந்த வைத்துள்ள லஸ்ஸியை பெரிய டம்ளரில் ஊற்றி மேல்புறமாக குங்குமப்பூ கரைசலை இட்டு லேசாகக் கலக்கவும். 4. பாதாம் துண்டுகளைத் தூவி அருந்தலாம்.