தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Karthigai Deepam: கொலை வெறியில் துங்கா.. கடைசி நொடியில் நர்ஸ் செய்த தந்திரம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai Deepam: கொலை வெறியில் துங்கா.. கடைசி நொடியில் நர்ஸ் செய்த தந்திரம்.. - கார்த்திகை தீபம் அப்டேட்!

Sep 16, 2024, 10:38 AM IST

google News
Karthigai deepam: ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!
Karthigai deepam: ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

Karthigai deepam: ஐசியூவில் தீபா.. தட்டி தூக்க பிளான் போடும் துங்கா, கார்த்திக் செய்யப் போவது என்ன? கார்த்திகை தீபம் அப்டேட்!

தாலியோடு அலையும் கார்த்திக்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம், இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில், கார்த்திக் கையில் தீபாவின் தாலி கிடைத்தது. இதையடுத்து அவன் தீபாவை ஹாஸ்பிடலில் சேர்த்த பெண்மணி வீட்டிற்கு வந்து விசாரித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

மருத்துவமனையில் தீபா

ஐசியூவில் தீபா

அதாவது கார்த்திக்கிடம் அந்த பெண்மணி தீபாவை சென்னையில் உள்ள கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டதாக சொல்ல, கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான். மறுபக்கம் தீபா ஐசியூவில் இருக்க, அதே ஹாஸ்பிடலுக்கு வந்த ஐஸ்வர்யாவின் உறவினர் ஒருவர், தீபா ஐசியூவில் இருப்பதை பார்த்து ஐஸ்வர்யாவுக்கு தகவல் கொடுத்து விடுகிறார். இதையடுத்து அவளும் ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வருகிறாள்.

அதேபோல் கீதாவை தேடி அலையும் துங்காவும் அதே ஹாஸ்பிடலுக்கு வர, அங்கு தீபாவை பார்த்த அவன், அவள்தான் கீதா என்று நினைத்து இவங்க பேர் கீதா, எனக்கு தெரிந்த பொண்ணு தான்.. எங்க கூட அனுப்பி வச்சிடுங்க என்று நர்ஸிடம் பாவமாக பேசினான். அதனை நம்பிய நர்ஸ் தீபாவை அவர்களுடன் அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்கிறாள்.

ஐஸ்வர்யா

இதைத்தொடர்ந்து துங்கா,தனது ஆட்களுக்கு கீதா கிடைச்சிட்டா, அவளை நம்ப இடத்துக்கு கூட்டிட்டு போய் கொன்னுடலாம் என்று பேசிக் கொண்டிருந்தான்.  அதைக்கேட்ட நர்ஸ் தீபாவுக்கு பதிலாக வேறொரு பெண்ணை அவர்களுடன் ஆம்புலன்ஸில் அனுப்பி வைக்க முடிவு செய்கிறாள்.

துங்கா அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப, கார்த்திக் ஹாஸ்பிடல் நோக்கி வர, ஐஸ்வர்யாவும் இதே ஹாஸ்பிடலுக்கு வருகிறாள்.  இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கடந்த எபிசோடில் நடந்தது என்ன? 

முன்னதாக,  துங்கா ஒரு ரெஸ்டாரெண்ட்ட் வந்து ரவுடிகளை வர வைத்து, கீதா போட்டோவை காட்டி சல்லடை போட்டு தேடச் சொல்கிறான். கார்த்தியும் அதே ரெஸ்டாரெண்ட் வர, அவனுக்கும் கார்த்திக்கும் ஒரு சிறிய மோதல் உருவாகிறது. இதையடுத்து கார்த்திக் அங்கிருந்து கிளம்பி வருகிறான்.

ஹாஸ்பிடலில் தீபா

வரும் வழியில், தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த பெண்ணின் கணவர் தீபாவின் தாலியை விற்க எடுத்துச் சென்று கொண்டிருந்த போது அவன் எதிரில் வந்த கார்த்திக் மீது தவறுதலாக மோதி விடுகிறான். இதையடுத்து தாலி கீழே விழ, கார்த்திக் அதை பார்த்து அவனை மிரட்டி விசாரிக்க, இது பற்றி என் பொண்டாட்டிக்கு தான் தெரியும் என்று வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். அடுத்து அந்த பெண்மணி கார்த்தியிடம் தீபாவை ஹாஸ்பிடலில் அனுமதித்த விஷயத்தை சொல்கிறாள்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி