Yugendran: ‘அப்பா இறந்ததும் நாடு மாறிட்டேன்.. யாரையும் நெருங்க முடியல’ யுகேந்திரன் உருக்கம்!
Apr 26, 2023, 05:30 AM IST
Yugendran Malaysia Vasudevan: ‘சினிமா ஒரு நிலையில்லாத தொழில். ஒரு படம் அவுட் என்றால், வாழ்க்கையே அவுட். இன்றைய சினிமாவில், திரும்பி பார்க்கிறதுக்குள்ள 10 பேர் முன்னாடி போயிடுறாங்க’
மறைந்த பிரபல பாடகர் மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகரும் பாடகருமான யுகேந்திரன், கடந்த 8 ஆண்டுகளுக்கு மேல் வெளிநாட்டிற்கு புலம் பெயர்ந்த நிலையில் மீண்டும் இந்தியா வந்துள்ளார். யூடியூப்பிற்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘8 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இது கொஞ்சம் பெரிய ப்ரேக் தான். 2011 ல் அப்பா இறந்த பின், என்னோட குடும்பத்தை சிங்கப்பூருக்கு மாற்றினேன். தயாரிப்பு நிறுவனத்தை அங்கு நடத்தினேன். அங்குள்ள தொலைக்காட்சிக்கு நிறைய ஷோக்கள் பண்ணேன். அங்கு பிஸியா இருந்தேன். நிறைய புராஜக்ட் வந்து கொண்டிருந்தது.
சிங்கப்பூர்-இந்தியா பெரிய பயண நேரம் இல்லை என்பதால், என்னால் அதை சமாளிக்க முடிந்தது. 2017 ல் முனைவர் படிப்பிற்காக என் மனைவிக்கு சிங்கப்பூரில் முயற்சி பண்ணோம், ஸ்காலர்ஷிப் கிடைக்கவில்லை. நியூசிலாந்தில் கிடைத்ததால், 6 ஆண்டுகள் அங்கு போனோம். இப்போ எனக்கான கடமைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இப்போ ப்ரீ ஆகிட்டேன்.
எனக்கு 3 பசங்க. மூன்று பேரும் இசைத்துறையில் நல்ல ஆர்வமாக உள்ளனர். அஜித், விஜய் உடன் நடித்திருக்கிறேன். 2 ஆண்டுக்கு முன்பு வரை நான் படத்தில் நடித்ததே என் பசங்களுக்கு தெரியாது. இந்தியாவில் உள்ள கலாச்சாரத்திற்கும், வெளிநாட்டு கலாச்சாரத்திற்கும் பயங்கர வேறுபாடு உண்டு.
முன்பு விஜய், அஜித் உடன் நேரடியாக பேச முடியும். இப்போ நெருங்கவே முடியல. அவர்களுக்கு பேச விருப்பம் இருக்கும், ஆனால், உடன் இருப்பவர்கள், ‘சார் அவங்களை நீங்க பார்க்க கூடாது சார்’ என பில்டப் பண்ணி வெச்சிருப்பாங்க. இது எல்லா இடத்திலும் உள்ளது தான். பரவாயில்லை, நமக்குனு பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் போது ‘ப்ரோ எப்படி இருப்பீங்க’ என்று கேட்பேன்.
இதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. எனக்கும் என் அப்பாவுக்கு குடும்பம் தான் பிரதானம். அவர்களுக்கு எது தேவையோ அதற்கு தான் முக்கியத்துவம் தருவோம். நானும் என் குடும்பத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுத்தேன். அதை விட பெரிய விசயம் எதுவும் இல்லை.
சினிமா ஒரு கவர்ச்சியான துறை. வெளியில் இருந்து பார்ப்பவர்கள், ‘யப்பா… கார் வெச்சிருக்காங்க, வீடு வெச்சிருக்காங்க, செம்ம ட்ரெஸ் போட்ருக்காங்க’ என்று தான் நினைப்பார்கள். ஆனால் சினிமாக்காரனுக்கு வாடகை வீடு கூட தரமாட்டாங்க. இது எனக்கும் நடந்திருக்கு.
சினிமா ஒரு நிலையில்லாத தொழில். ஒரு படம் அவுட் என்றால், வாழ்க்கையே அவுட். இன்றைய சினிமாவில், திரும்பி பார்க்கிறதுக்குள்ள 10 பேர் முன்னாடி போயிடுறாங்க. கல்யாண மண்டபம், தியேட்டர் கட்டி வெச்சா பிழைத்துக் கொள்ளலாம். தியேட்டர் கூட இப்போது பெரிய லாபம் இல்லை.
பூவெல்லாம் உன் வாசம் முதல் எனக்கு ஷூட் என்றார்கள், போனால், காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு எல்லாம் முடிந்தும் யாரும் அழைக்கவில்லை. மறுநாளும் அதுவே தொடர்ந்தது. ‘என்னடா இது, தெரியாம வந்துட்டேன் போல..’ என வருந்தினேன்.
அப்பாவிடம் போய் ஃபீல் பண்ணேன், ‘ஏன் நீ எதிர்பார்ப்போடு போற? சினிமாவில் நிறைய நடைமுறைகள் இருக்கும், ரிலாக்ஸா இரு’ என்று அறிவுரை கூறினார். முதல் மூன்று நாள் ஏன்டா என்பது போல் இருந்தது, அதன் பின் தான் நடிப்புக்கான ஸ்கோப் வந்தது, நானும் சமாதானம் ஆனேன்.
சினிமாவில் அரசியல் இல்லாமல் இல்லை. பூவெல்லாம் உன் வாசம் நடித்த பிறகு, அஜித், ஜோதிகா நடித்த ராஜாவில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. மீண்டும் அஜித், ஜோதிகாவோடு வேண்டாம் என்று விட்டுவிட்டார்கள். டப்பிங் பேசியிருப்போம் அந்த சீனே இருக்காது, நான் பாடியிருப்பேன், சிடி.,யில் வேறு ஒருவர் பெயர் இருக்கும். இதெல்லாம் சினிமாவில் சகஜம். அப்பா இறந்த பின், இன்று வரை அவர் நினைவு இருக்கிறது. அப்பா பாடல் கேட்டால் அழுகிறேன்,’’
என்று அந்த பேட்டியில் யுகேந்திரன் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்