தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Irfan Explanation ‘கல்யாணம் முடிஞ்ச 10 நாள்ல; என் குடும்பமே உடைஞ்சு போச்சு; - விபத்து குறித்து வாய் திறந்த இர்ஃபான்!

Irfan Explanation ‘கல்யாணம் முடிஞ்ச 10 நாள்ல; என் குடும்பமே உடைஞ்சு போச்சு; - விபத்து குறித்து வாய் திறந்த இர்ஃபான்!

Jun 04, 2023, 03:42 PM IST

google News
சரியாக மறைமலை நகர் அருகில் வந்தபோது, அப்போது ஒரு ஒன்பது மணி இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய மச்சான் வண்டியை ஓட்டி வந்து கொண்டிருந்தான்.
சரியாக மறைமலை நகர் அருகில் வந்தபோது, அப்போது ஒரு ஒன்பது மணி இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய மச்சான் வண்டியை ஓட்டி வந்து கொண்டிருந்தான்.

சரியாக மறைமலை நகர் அருகில் வந்தபோது, அப்போது ஒரு ஒன்பது மணி இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய மச்சான் வண்டியை ஓட்டி வந்து கொண்டிருந்தான்.

பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு அறிமுகமே தேவையில்லை. பல்வேறு உணவகங்களுக்கு சென்று அந்த உணவகத்தில் இருக்கும் உணவுகளை ருசித்து அதனை வீடியோவாக வெளியிட்டு வந்த இவர் அண்மை காலமாக சினிமா பிரபலங்களையும், அரசியல்வாதிகளையும் பேட்டி எடுத்து வருகிறார்.

இவருக்கு யூடியூப்பில் லட்சக்கணக்கான ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். கடந்த மாதம் இருவருக்கு திருமணம் நடந்தது. அதனைத்தொடர்ந்து மறுவீட்டிற்காக மணப்பெண் வீட்டிற்கு சென்று விட்டு சென்னை திரும்பிய போது இவரது காரானது மறைமலை நகர் அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி பல்வேறு விதமான செய்திகள் முன்னதாக வெளியாகின. இந்த நிலையில் அன்றைய தினம் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது, “ இந்த விஷயத்தைப் பற்றி நானே உங்களிடம் சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த விபத்தை பற்றி பல நபர்கள் பல்வேறு வகையாக செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த வாரம் 25ஆம் தேதி மறு வீடு முடித்துக் தஞ்சாவூரில் இருந்து கிளம்பி சென்னை வந்தோம். நான், என்னுடைய மச்சான் என்னுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் எல்லோரும் ஒரே காரில் வந்து கொண்டிருந்தோம். சரியாக மறைமலை நகர் அருகில் வந்தபோது, அப்போது ஒரு ஒன்பது மணி இருக்கும் என்று நினைக்கிறேன். என்னுடைய மச்சான் வண்டியை ஓட்டி வந்து கொண்டிருந்தான்.

அப்போது அங்கிருந்து ஒரு பாட்டி உள்ளே வந்து விட்டார். என்னுடைய மச்சானும் எப்படியோ திருப்பி பார்த்தார். ஆனால் அந்த விபத்தை தவிர்க்க முடியவில்லை. அங்கு வெளிச்சமும் இல்லாத காரணத்தால் அங்கு என்ன நடக்கிறது என்பதையும் சுத்தமாக எங்களால் பார்க்க கூட முடியவில்லை. அந்த விபத்தில் உயிர் ஒன்று போய்விட்டது. அந்த மூதாட்டியின் இறப்பு அவர்களின் குடும்பத்திற்கு எந்த அளவு பாதிப்பை கொடுத்திருக்கும் என்பதை யோசித்து கூட பார்க்க முடியவில்லை.

அந்த விபத்து எங்களுக்கே அப்படி ஒரு பாதிப்பை கொடுத்திருக்கும் போது அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்காக பெரிய வருத்தத்தை நாங்கள் இங்கு தெரிவித்துக் கொள்கிறோம். என்னுடைய குடும்பமே இந்த விஷயத்தால் உடைந்து போய்விட்டது.

கல்யாணம் முடிந்த பத்து நாட்களில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பதை என் குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.

அதைப்பற்றி நான் நினைக்கும் போதெல்லாம் எனக்கு நடுக்கம் ஏற்படுகிறது. மீண்டும் காரில் உட்காருவதற்கு பயமாக இருக்கிறது. நாங்கள் சந்தித்த விபத்தின் அந்த பகுதியிலேயே அன்றைய தினம் நான்கு விபத்துக்கள் நடந்தது. அதைப் பற்றி எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. நாங்கள் சம்பந்தப்பட்ட விபத்து பற்றி மட்டும் பல்வேறு வகையான செய்திகள் வெளியிடப்பட்டன.

அதனை பார்க்கும்போது அய்யய்யோ என்ன இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என்று தோன்றியது. அதற்கு ரிப்ளை கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது.. ஆனால் இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன். எவ்வளவு மன அழுத்தத்திற்குள் உள்ளாகி இருக்கிறேன் என்பதை சொல்லி முடியாத்ய்.

ஒரு பிரச்சினை நடந்து விட்டது சரி.. எதிர்கொள்ளலாம். அந்தப் பிரச்சினையை வைத்துக்கொண்டு அதிலிருந்து வேறு வேறு பிரச்சினைகளை எழுப்புவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. காவல் நிலையத்தில் அந்த விபத்து சம்பந்தமான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;இதனை தொடர்ந்து நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம்.

நீதிமன்றத்தில் வழக்கு செல்லும் பொழுது என்னுடைய வண்டியின் இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்களுக்கு கொடுக்க வேண்டியதாக இருக்கும். இது மட்டுமில்லாமல் நானும் என்னுடைய தரப்பில் இருந்து அவர்களுக்கு நிச்சயமாக ஏதேனும் ஒன்றைச் செய்வேன். சேனல் பேரை குறிப்பிட விரும்பவில்லை ஒரு குறிப்பிட்ட சேனல் இந்த சம்பவம் பற்றி தவறான செய்திகளை வெளியிட்டார்கள்; நான் அந்த சேனலின் தலைவரிடம் இது சம்பந்தமாக பேசி நடந்த விபரங்களை சொன்னேன்; அதன் பின்னர் அது சம்பந்தமான வீடியோ தூக்கப்பட்டது.

சில சமயங்களில் நான் சிலர கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கெல்லாம் நாம் ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இந்த சம்பவத்தில் எல்லோரும் அரக்கர்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். எப்போது நேரம் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இர்ஃபான் கஷ்டப்பட வேண்டும் என்பதற்காக சிலர் சில விஷயங்களை செய்தார்கள் இல்லையா அவர்களுக்காக இதைச் சொல்கிறேன்;

நான் உண்மையில் கஷ்டப்பட்டு விட்டேன். இந்த விஷயத்தில் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இன்னொரு சேனலில் வண்டிக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்றெல்லாம் செய்தி வெளியிட்டு இருந்தார்கள்;அப்படியெல்லாம் ஒன்றுமே இல்லை. வாகனம் குறித்து என்னவெல்லாம் கேட்டார்களோ அவை எல்லாவற்றையும் நாங்கள் காவல் நிலையத்தில் கொடுத்து விட்டோம்” என்று பேசினார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி