தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Rajinikanth: ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்தது எதனால்?

Rajinikanth: ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பிய ரஜினிகாந்த்.. காதலை சொல்லாமல் மெளனமாக இருந்தது எதனால்?

Aarthi Balaji HT Tamil

Jul 26, 2024, 04:30 AM IST

google News
Rajinikanth: ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்பா?.
Rajinikanth: ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்பா?.

Rajinikanth: ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்பா?.

நடிகர் ரஜினி ஒருமுறை தன்னுடன் நடித்த ஸ்ரீதேவியை திருமணம் செய்ய விரும்பினார் என்று கூறப்படுகிறது. இது உண்மையா? இங்கே பார்க்கலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் திரையுலகில் 'ஸ்டார்' நடிகராக இருந்து வருகிறார் . பெரும்பாலும் ஸ்ரீதேவியுடன் கருப்பு - வெள்ளை படங்களில் நடித்தார். அவருக்கும், ஸ்ரீதேவிக்கும் திரைக்கு முன்னால் மட்டுமின்றி திரைக்குப் பின்னாலும் நல்ல உறவு இருக்கிறது. ஆனால் அந்த உறவு காதல் உறவா? அல்லது வெறும் நட்பா?.

நடிகர் ரஜினி, ஸ்ரீதேவியுடன் நடித்த முதல் படம் ‘மூணு முடிச்சு’. 1976 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் ரஜினிகாந்த் 25 வயது சித்தியாக ஸ்ரீதேவி நடித்திருந்தார். அப்போது அவருக்கு 13 வயது தான். இந்தப் படத்தில் ஆரம்பித்த இவர்களின் பந்தம் பல வருடங்கள் தொடர்ந்தது.

4 மொழிகளில் 22 படங்கள்

இந்தப் படத்துக்குப் பிறகு இருவரும் அபூர்வ ராகங்கள், 16 வயதினிலே, நான் ஜானி என 4 மொழிகளில் 22 படங்களில் இணைந்து நடித்தனர். அண்ணன், தம்பியாக ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளனர். அப்போது திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக இருந்த கமலுக்கும், ரஜினிக்கும் இடையே நல்ல பந்தம் இருந்தது. 

நடிகர் ரஜினிகாந்த் பல படங்களில் இணைந்து நடிப்பதற்கு முன்பே ஸ்ரீதேவியின் குடும்பத்தினருடன், குறிப்பாக ஸ்ரீதேவியின் தாயாருடன் நெருங்கிய நட்புடன் இருந்துள்ளார். ஸ்ரீதேவி ரஜினிகாந்தை விட 13 வயது இளையவர். இதனால், ரஜினி அவரை மிகவும் பாதுகாத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

ரஜினிகாந்த், ஸ்ரீதேவி காதல்

பல படங்களில் இணைந்து நடித்தாலும் இவர்களுக்குள் காதல் என்ற ஒன்று இருந்தது என்பதில் சந்தேகமில்லை . ஸ்ரீதேவி, ரஜினியை காதலிக்கிறாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை . ஆனால் ரஜினிகாந்த், ஸ்ரீதேவியை காதலித்ததாக இயக்குனர் கே.பாலச்சந்தர் பத்திரிக்கை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார் .

ஸ்ரீதேவிக்கு 16 வயதாக இருக்கும் போது ஸ்ரீதேவி தாயாரிடம் அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு ரஜினி கேட்டகலாம் என இருந்தார். கிரஹபிரவேச விழாவின் போது பாலசந்தரும் , ரஜினிகாந்தும் ஸ்ரீதேவி இல்லத்திற்கு சென்று இதுபற்றி பேசி இருந்தார்கள். அப்போது மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருட்டாக இருந்ததால், ரஜினி இதுபற்றி பேசாமல் சென்டிமென்டாக வந்ததாகவும் கூறப்படுகிறது .

7 நாட்கள் விரதம்

இது குறித்து பிரபல ஒருவர் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் இணைந்து நடித்த பிறகும் நல்ல நண்பர்களாகவே இருந்தனர். அப்போது ரஜினியின் தனிப்பட்ட தொலைபேசி எண் கே.பாலச்சந்தர், கமல் ஹாசன், ஸ்ரீதேவி ஆகியோரிடம் மட்டுமே இருந்தது . ஒருமுறை நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் . அப்போது ஸ்ரீதேவி 7 நாட்கள் விரதம் இருந்து அவருக்கு கோவில் காணிக்கை அனுப்பியதாக கூறப்படுகிறது .

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி