IFFI 2023: கோவா சர்வதேச திரைப்பட விழா! விடுதலை, பொன்னியின் செல்வன் 2 உள்பட 5 படங்கள் திரையிடல்
Oct 24, 2023, 04:25 PM IST
கோவாவில் நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் சினிமா படங்கள், சினிமா அல்லாத படங்கள் என மொத்தம் 5 படங்கள் தமிழில் இருந்து திரையிடப்படவுள்ளன.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவான IFFI ஆண்டுதோறும் கோவா மாநிலத்தில் நடைபெற்று வருகின்றன. கோவா சர்வதேச திரைப்பட விழா என்றும் அழைக்கப்படும் இந்த நிகழ்வு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.
இதையடுத்து இந்த ஆண்டுக்கான 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறவுள்ளது. இதையடுத்து இந்த திரைப்பட விழாவில் திரையிட 25 படங்கள் தேர்வாகியுள்ளன. பிரபல இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் டிஎஸ் நாகபர்னா தலைமையிலான 12 ஜூரி உறுப்பினர்கள் அடங்கிய குழு இந்த திரைப்பட விழாவில் திரையிட இருக்கும் இந்திய படங்களை தேர்வு செய்துள்ளனர்.
அதன்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், கார்பி ஆகிய மொழிகளை சேர்ந்த படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இந்த திரைப்பட விழாவில் தமிழில் இருந்து மொத்தம் நான்கு படங்கள் திரையிடப்படவுள்ளன.
இந்திய பனோரமாவில் தேர்வு செய்யப்பட்ட 25 படங்களில் வெற்றிமாறனின் விடுதலை, ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை, சம்யுக்தா விஜயன் இயக்கிய நீள நிற சூரியன் ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன.
அதேபோல் மெயின்ஸ்ட்ரீம் சினிமா பிரிவில் தேர்வாகியுள்ள 5 படங்களில், மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் திரையிடப்படவுள்ளது.
இந்த லிஸ்டில், சுதிப்தோ சென் இயக்கத்தில் வெளியாகி நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படமும் இடம்பிடித்துள்ளது.
இது தவிர 20, சினிமா அல்லாத திரைப்படங்கள் திரையிடுவதற்கு தேர்வாகியுள்ளன. இதில் பிரவீண் செல்வம் இயக்கிய நன்செய் நிலம், எட்மோண்ச் ரான்சன் இயக்கத்தில் இந்தி, தமிழ், அஸ்ஸாம், வங்காளம், ஆங்கில மொழிகளில் வெளியான லைஃப் இன் லூம் ஆகிய படங்கள் திரையிடப்படவுள்ளன.
கன்னடத்தில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த கந்தாரா திரைப்படமும் கோவா சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்படவுள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்