Actor Soori:அம்மா சொன்ன ஒரு வார்த்தை; டீக்கடை அம்மன் ஹோட்டலான கதை - சூரி பேட்டி!
Mar 24, 2023, 07:17 AM IST
நடிகர் சூரி தனது அம்மன் கடைக்கு பின்னால் உள்ள நெகிழ்ச்சி கதையை பகிர்ந்து இருக்கிறார்
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக கொண்டு உருவாகி இருக்கும் திரைப்படம். விடுதலை. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது.
இந்த படத்தில் குமரேசன் என்ற பெயரில் போலீஸ் கான்ஸ்டபிளாக சூரியும், வாத்தியார் பெருமாள் என்ற போராளியாக விஜய் சேதிபதியும் நடித்துள்ளனர். படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற மார்ச் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படம் தொடர்பாக நேர்காணல் கொடுத்த சூரி தன்னுடைய அம்மன் உணவகம் பற்றி பேசினார். அவர் பேசும் போது, “ நான் அந்த ஹோட்டலுக்கு அம்மன் என்று பெயர் வைப்பதற்கான காரணம் என்னுடைய அம்மாவும் என்னுடைய அண்ணன் தம்பிகள் தான்.
நான் சினிமாவில் சாப்பாடு கிடைக்காமல், டீ கிடைக்காமல் அவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறேன். தீபாவளி, பொங்கலுக்கு கூட நான் சொந்த ஊருக்கு போனது கிடையாது; குடும்பமே சந்தோஷமாக பொங்கலை கொண்டாடும் பொழுது ஒருவன் மட்டும் அங்கு சினிமா என்று கிடக்கின்றானே என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கும்.
1996 இல் சினிமாவுக்காக நான் இங்கு முயற்சி செய்ய வந்தேன் அதன் பின்னர் கிட்டத்தட்ட ஏழு வருடங்களாக ஊருக்குச் செல்லவே இல்லை.காரணம் என்னவென்றால் ஊருக்குச் செல்லும் பொழுது ஏதாவது ஒன்றை வாங்கிச் செல்ல வேண்டும். ஆனால் அதற்கு கையில் போதுமான பணம் இருக்காது. இன்னொன்று அங்கு சென்றால் சினிமாவில் நீ இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று குடும்பத்தினர் கேட்பார்கள் அப்பொழுது நான் சினிமாவில் ஜெயிக்கவும் இல்லை.
எங்களுக்கு அம்மன் என்ற டீக்கடை ஒன்று இருந்தது. ஒரு டீ கடை காலப்போக்கில் இரண்டு மூன்று டீக்கடைகளாக மாறியது. அப்போதுதான் எனது அம்மா தயவு செய்து ஒரு ஹோட்டல் ஆரம்பிங்கள் என்றார்.
அரசு மருத்துவமனையில் எங்களது ஹோட்டலை வைப்பதற்கான காரணம் ஒருமுறை எனது உறவினர் ஒருவருக்கு உடல் சரியில்லாமல் போக, அங்கு சென்றிருந்த என்னுடைய அம்மா அங்கு வெகு நேரமாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது; அப்பொழுதுதான் என்னிடம் இதற்குள் நமது கடையை வைக்க முடியுமா என்று கேட்டார்.

|#+|
அதன் பின்னர் தான் அமைச்சரை பார்த்து அதற்கான ஏற்பாடுகளை செய்து அரசு மருத்துவமனையில் அம்மன் ஹோட்டலை திறந்தோம்; அதை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார்” என்று பேசினார்.
டாபிக்ஸ்