தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவியவர்..நாகேஷ், வாலி என சினிமாவில் பல ஜாம்பவான்கள், தரமான படைப்புகள் உருவாக்கிய இயக்குநர்

தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவியவர்..நாகேஷ், வாலி என சினிமாவில் பல ஜாம்பவான்கள், தரமான படைப்புகள் உருவாக்கிய இயக்குநர்

Oct 31, 2024, 06:00 AM IST

google News
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவியவர், இயக்குநர், தயாரிப்பாளராக பல ஜாம்பவான்கள், தரமான படைப்புகள் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் முக்தா சீனிவாசன். தமிழ் சினிமாவில் வரலாறு படைத்து விட்டு சென்ற ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்கிறார். நாகேஷ், வாலி முதல் இவரது அறிமுகங்களை செல்லி கொண்ட போகலாம்.
தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவியவர், இயக்குநர், தயாரிப்பாளராக பல ஜாம்பவான்கள், தரமான படைப்புகள் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் முக்தா சீனிவாசன். தமிழ் சினிமாவில் வரலாறு படைத்து விட்டு சென்ற ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்கிறார். நாகேஷ், வாலி முதல் இவரது அறிமுகங்களை செல்லி கொண்ட போகலாம்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவியவர், இயக்குநர், தயாரிப்பாளராக பல ஜாம்பவான்கள், தரமான படைப்புகள் உருவாக்கிய பெருமைக்கு உரியவர் முக்தா சீனிவாசன். தமிழ் சினிமாவில் வரலாறு படைத்து விட்டு சென்ற ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்கிறார். நாகேஷ், வாலி முதல் இவரது அறிமுகங்களை செல்லி கொண்ட போகலாம்.

தமிழ் சினிமாவுக்கு தங்களது பல்வேறு படைப்புகளால் பெருமையை தேடி தந்த ஜாம்பவான்களில் முக்கியமானவர் மறைந்த இயக்குநர், தயாரிப்பாளர் முக்தா சீனிவாசன். மறைந்த பழம்பெரும் இயக்குநர் டி.ஆர். சுந்தரம் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களாகவும், கலைத்துறையில் ஜாம்பவான்களாகவும் இருந்த எம்ஜிஆர், கலைஞர் கருணாநிதி ஆகியோரின் உதவியாளராக தனது கலையுலக பயணத்தை தொடங்கியுவராக உள்ளார்

சினிமா பயணம்

தமிழ் பிராமண குடும்பத்தை சேர்ந்த முக்தா சீனிவாசன் கலை மீதான ஆர்வத்தால் முறையாக சினிமாவை கற்றுக்கொண்டு இயக்குநர் ஆனவராக உள்ளார். இளம் வயதில் சேலம் கருவூல அலுவலகத்தில் கணக்கராக பணியாற்றிய இவர், பின்னர் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் கிளை அலுவலகத்தில் தட்டச்சராக பணியாற்றினார்.

அதன் மூலம் திரைத்துறைக்குப் பயணம் செய்த இவர். க்ளாப் பாயாக சினிமாவில் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து வசன ஆசிரியராக உயர்ந்தார். மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்படங்களில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர், உதவி இயக்குநராக மாறினார்.

பின்னர் மாடல் தியேட்டரில் இருந்து வெளியேறிப் பல நிறுவனங்களில் பணியாற்றினார். இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தர் இயக்கிய அந்த நாள் படம்தான் முக்தா சீனிவாசன் உதவியாளராக பணியாற்றிய முதல் படம்.

இயக்குநராக முதல் படம்

தொடர்ந்து டி.ஆர். ரகுநாத் இயக்கி 1957இல் வெளியான அலாவுதீனும் அற்புத விளக்கும் படத்தில் திரைக்கதை ஆசிரியாராக பணியாற்றிய முக்தா சீனிவாசன், அதே ஆண்டில் வெளியான முதலாளி படம் மூலம் இயக்குநர் ஆனார். சிறந்த பிராந்திய மொழி படத்துக்கான தேசிய விருதை இந்த படம் வென்ற நிலையில் கவனம் பெற்ற இயக்குநர் ஆனார்.

முதலாளி படத்தை தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி கணேசனை வைத்து படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார். இவரது ஆஸ்தான ஹீரோவாக 1960களில் ஜெமினி கணேசன் இருந்துள்ளார்.

1961ஆம் ஆண்டு தனது சகோதரரான ராமசாமியுடன் இணைந்து முக்தா பிலிம்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அதற்குப் பிறகு சீனிவாசனாக இருந்த இவர் முக்தா சீனிவாசன் என அழைக்கப்பட்டார்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் ரஜினிகாந்த்க்கு மிகப்பெரிய திருப்பம் கொடுத்த திரைப்படம் பொல்லாதவன். அந்த படத்தைத் தயாரித்து இயக்கியவர் இவர் தான். அதேபோல் உலக நாயகன் கமல்ஹாசனை உலகறிய செய்யும் விதமாக ஆஸ்கர் வரை சென்ற நாயகன் படத்தை தயாரித்ததும் இவர் தான். அத்துடன் கமலை வைத்து அந்தரங்கம், சிம்லா ஸ்பெஷல் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

முக்தா சீனிவாசனின் அறிமுகங்கள்

தமிழ் சினிமாவில் தங்களது நடிப்பாலும், திறமையாலும் பேரும், புகழும் அடைந்ததோடு தங்களுக்கென தனி அடையாளமும் பெற்ற பல கலைஞர்களை முக்தா சீனிவாசன் அறிமுகப்படுத்தியுள்ளார். அவரால் அறிமுகமாகி திரையுலகில் ஜாம்பவான்களாக ஜொலித்தவர்களில் முக்கியமானவர்களாக மறைந்த பாடலாசிரியர் கவிஞர் வாலி, மறைந்த நடிகை தேவிகா, மறைந்த இயக்குநர் நடிகர் விசு, நடிகர் இயக்குநர் மெளலி என சொல்லிக்கொண்டே போகலாம். அதேபோல் நகைச்சுவை ஜாம்பவானான நடிகர் நாகேஷை திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.

தயாரிப்பாளர் சங்கத்தை நிறுவிய முக்தா சீனிவாசன்

சினிமா பைத்தியம், பூஜைக்கு வந்த மலர், பொம்மலாட்டம், தவப்புதல்வன், சூரியகாந்தி, அந்தரங்கம், அந்தமான் காதலி, அவன் அவள் அது, மேதைகள், வாய்க்கொழுப்பு உட்பட 40க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இவர் இயக்கியுள்ளார். அதேபோல் 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

அதேபோல் இவர் 350க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று நாவல்களும் எழுதியுள்ளார். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைக் கொண்ட தனிநபர் நூலகத்தை தன் இல்லத்தில் இவர் வைத்திருந்தார்.

திருக்குடந்தை பதிப்பகம் என்ற பதிப்பு நிறுவனத்தை உருவாக்கிப் பல புத்தகங்களை இவர் வெளியிட்டுள்ளார். தனது வாழ்க்கை வரலாற்றை ஒரு ஏழை ஏறி வந்த ஏணி என்ற தலைப்பில் இவரே எழுதி அதை வெளியிட்டார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுவியவர்களில் ஒருவராக இருந்து வரும் முக்தா சீனிவாசன், அதன் தலைவராகவும் செயல்பட்டுள்ளார். சென்சார் போர்டு உறுப்பினர், தமிழ்நாடு அரசு நிறுவிய பிலிம் சிட்டியின் தலைவர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை தலைவர் என பல உயரிய பொறுப்புகளில் இருந்தவரான முக்தா சீனிவாசன் பிறந்தநாள் இன்று.

எத்தனையோ ஜாம்பவான்களைத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது. ஆனால் ஒரு சிலர் மட்டுமே வரலாறு படைத்து விட்டுச் செல்கின்றனர். அப்படிப்பட்ட தமிழ் சினிமா கலைஞர் தான் முக்தா சீனிவாசன்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி