Cook With Comali: செருப்பாலே அடிப்பேன்... உனக்கு உரிமையே இல்ல... சூடான வெங்கடேஷ் பட்
Sep 21, 2024, 06:25 PM IST
Cook With Comali: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் மணிமேகலை- பிரியங்காவிற்கு இடையே ஏற்பட்ட சண்டை குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய வெங்கடேஷ் பட் காட்டமாக தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.
விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் அதில் பங்கேற்பாளராக வந்த பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பூகம்பமாக மாறி, சோசியல் மீடியாவில் நான் ஸ்டாப்பாக சுழன்று வருகிறது.
இதுகுறித்து, பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்போது, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தவரும் கடந்த சீசனிலேயே இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி இந்த நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவியில் டாப்பு குக்கு டூப்பு குக்கு நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருபவருமான வெங்கடேஷ் பட் நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.
இது மோசமான ஒன்று
மணிமேகலை- பிரியங்கா இருவருக்கும் இடையிலான பிரச்சனை அவர்களுக்கான தனிப்பட்டது. இது குறித்து பிறர் கருத்து தெரிவிப்பதே மோசமான ஒன்று. இவர்களுக்கு இடையில் என்ன நடந்தது என தெரியாமல் பேசுவதே மிகவும் தவறான ஒன்று. நான் இருவருடனும் பணியாற்றி உள்ளேன். என்னுடைய கல்யாணத்தை தொகுத்து வழங்கியர் மணிமேகலை. நான் பங்கேற்ற நிகழ்ச்சியில் என் கௌரவம் குறையாமல் பார்த்துக் கொண்டவர் பிரியங்கா. தன் திறமையால் இவ்வளவு பெரிய இடத்திற்கு இருவரும் வந்துள்ளனர்.
அக்கா- தங்கை சண்டை
இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்வது என் வீட்டு உறுப்பினர்கள் சண்டை போடுவது போன்றது. இது அக்கா- தங்கை சண்டை. மணிமேகலைக்கு பிரியங்காவும், பிரியங்காவிற்கு மணிமேகலையும் தான் பதில் தர வேண்டுமே தவிர மற்றவர்கள் அல்ல. இதுகுறித்து எதுவும் தெரியாமல் பலரும் கருத்து சொல்கின்றனர். முதலில் இந்த விஷயம் குறித்து கருத்து கேட்பதே தவறு.
செருப்பால் அடிப்பேன்
பெண்களைப் பற்றி அவதூறாக யார் பேசினாலும் அவர்களை செருப்பால் அடிப்பேன். அதை யார் பேசியிருந்தாலும் சரி. அவர்களின் குடும்ப பெண்களை அவ்வாறு பேசுவார்களா? வீடியோவில் இருக்கும் விஷயத்தை மட்டும் பேசவேண்டும். வீடியோ வெளியிட்ட நபரின் தனிப்பட்ட விஷயத்தையும், அவர்களின் கடந்த காலத்தை பற்றியும் யாரும் கருத்து சொல்லக் கூடாது. சோசியல் மீடியாவில் சென்சார் இல்லாத காரணத்தினால் பலரும் பல கருத்துகளை கூறுகின்றனர். அதை லட்சக் கணக்கான மக்கள் பார்த்து கமெண்ட் செய்கின்றனர். இது மிகவும் தவிர்க்க வேண்டிய ஒன்று. என்னைப் பொறுத்தவரை இது குடும்ப சண்டை. இதை கண்டுகொள்ளாமல் விட்டால் அவர்களாகவே சரியாகிவிடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
பிரபலங்கள் கருத்து
முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்ற குரேஷி, சுனிதா, புகழ் உள்ளிட்டோரும், விஜய் டிவி பிரபலங்களும் இந்த சண்டை குறித்து பேசியது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மட்டுமின்றி, சோசியல் மீடியா பயனாளிகள், திரைப் பிரபலங்கள், செய்தியாளர்கள் என பலரும் இந்த சம்பவம் குறித்து பல கருத்துகளை கூறி வந்தனர். இவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வெங்கடேஷ் பட் பேசியுள்ளார்.
முன்னதாக, இருவருக்கு இடையிலான பிரச்சனையை மொழி பிரச்சனையாகவும், சாதி தொடர்பான பிரச்சனையாகவும் திசைத்திருப்பி வந்தனர். மேலும், சோசியல் மீடியாவில் ஆடியோ, வீடியோ, போஸ்ட் என பல தகவல்களை பலரும் பரப்பி வருவதால், எந்த தகவல் உண்மையானது எந்தத் தகவல் போலியானது என புரியாமல், இந்த பிரச்சனையை தீர்க்க அவகாசமும் அளிக்காமல் செயல்படுவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்