The Goat: கோட் படத்துல யுவன் பாட்டுதான் கொஞ்சம் ஒரு மாதிரி.. ஆனா.. - மேடையில் ஓப்பனாக போட்டுடைத்த வெங்கட் பிரபு!
Aug 18, 2024, 01:21 PM IST
The Goat: மங்கத்தா படத்தில் அஜித் சார், இனிமேல் குடிக்கவே கூடாது டா என்று சொல்லும் டயலாக்கை, விஜய் சாரை வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் அந்த டயலாக்கை படத்தில் வைத்தேன் - வெங்கட் பிரபு!
கோட் திரைப்படத்தில் யுவனின் பாடல்களுக்கு கலவையான விமர்சனங்கள் வந்த நிலையில், அதற்கு வெங்கட் பிரபு பதில் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “கோட் படத்தில் யுவன் இசையமைத்த பாடல்களைப் பொறுத்தவரை, அதற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை நாங்கள் கவனித்தோம். ஆனால், நீங்கள் படம் பார்த்து விட்டு வெளியே வரும் பொழுது பாடல்கள் அனைத்தும் உங்களுக்கு விஷுவல் ட்ரீட் ஆக அமைந்து பிடித்துதான் வெளியே வருவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்தப்படத்தில் நடித்த பிரபுதேவா பிரசாந்த் உள்ளிட்டவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் என்னவென்றால், இந்தப்படத்தில் எல்லா கேரக்டர்களுக்கும் அதிக முக்கியத்துவம் இருந்த போதும், ஒன்றாக அவர்கள் நடிக்க ஒத்துக் கொண்டது பெரிய விஷயம். இது உங்களுக்கு நிச்சயமாக ட்ரீட்டாக அமையும். எந்த இடத்திலும் படம் முகம் சுளிப்பது போல நிச்சயமாக இருக்காது.
விஜய் சாரிடம் இருந்தும்
இது குறித்து அவர் பேசும் போது, “ மங்காத்தா திரைப்படத்தின் போது, அஜித் சாரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொண்டேன் என்று கூறி இருக்கிறேன். அதேபோல விஜய் சாரிடம் இருந்தும் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். குறிப்பாக ஒழுக்கமாக எப்படி வேலை செய்வது என்பதை அவரிடம் இருந்து நான் இந்தப் படத்தில் கற்றுக் கொண்டேன்.
அவர் இன்று அவ்வளவு பெரிய உயரத்தில் இருக்கிறார். ஆனால், அவர் அவ்வளவு ஒழுக்கமாக வேலை செய்து கொடுக்கிறார். அவ்வளவு பணிவாக, சிம்பிளாக எங்களிடம் நடந்து கொண்டார். முதலில் நாங்கள் உண்மையிலேயே விஜய் சாருடன் எப்படி வேலை செய்யப் போகிறோம் என்பது குறித்து பயந்து இருந்தோம்.
கில்லி படத்தின் மிகப்பெரிய ரசிகன்.
ஆனால், அவர் அதை மிகவும் ஈசியாக்கிவிட்டார். ஆகையால், நாம் எவ்வளவு பெரிய உயரத்தில் இருந்தாலும், நம்மை சுற்றி உள்ளவர்களை சௌகரியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டேன். நான் கில்லி படத்தின் மிகப்பெரிய ரசிகன்.
அதே மாதிரியான ஒரு சூழ்நிலை படத்தில் அமைந்ததால், அந்த பாடலை அப்படியே அதில் வைத்து விட்டோம். மங்கத்தா படத்தில் அஜித் சார், இனிமேல் குடிக்கவே கூடாது டா என்று சொல்லும் டயலாக்கை, விஜய் சாரை வைத்து செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால்தான் அந்த டயலாக்கை படத்தில் வைத்தேன்.” என்று பேசினார்.
மேலும் பேசும் போது, “ இந்தப்படம் எனக்கு மறக்க முடியாத பயணம் என்று சொல்லலாம். இந்தப் படம் எப்படி ஆரம்பித்து, எப்படி முடிந்தது என்றே தெரியவில்லை. இந்தப் இடத்தில், நான் அர்ச்சனாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். காரணம் என்னவென்றால், இந்தக் கதையை முதலில் நான் அர்ச்சனாவிடம் தான் கூறினேன்.
விஜய் சாரின் அப்பாயிண்ட்மெண்ட்
இந்தக்கதையை எப்படி செய்யலாம் என்று நானும் அவரும்தான் டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தான் விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மூலமாக விஜய் சாரின் அப்பாயிண்ட்மெண்ட் எனக்கு கிடைத்தது. அந்த அப்பாயிண்ட்மெண்டில்தான் நான் அவரிடம் இந்தக் கதையை கூறினேன். கதை அவருக்கு பிடித்து விட ஏஜிஎஸ் நிறுவனமும், விஜயும் கைகோர்த்து விட்டார்கள்.” என்று பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரண்டு பேரும் கைகோர்த்து விட்டதால், பட்ஜெட் பற்றி பிரச்சினையே இல்லாமல் ஆகி விட்டது. என்ன வேண்டும் என்றாலும் யோசிக்கலாம் என்பது போல சூழ்நிலை மாறிவிட்டது. நாங்கள் படம் ஆரம்பித்ததே அமெரிக்காவில்தான். இந்தப் படத்திற்காக அவ்வளவு நாடுகளுக்கு நாங்கள் பயணப்பட்டு இருக்கிறோம். ஆனால் சூழ்நிலை ரஷ்யாவில் தான் எங்களுக்கு சரி வர அமைந்தது.
அதனால் அங்கு படப்பிடிப்பை நடத்தினோம். ரஷ்ய போர் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போதுதான் அங்கு சென்று நாங்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதை எங்களால் மறக்கவே முடியாது. இந்த மாதிரியான தயாரிப்பாளர் கிடைக்கும் பொழுதுதான் எங்களால் அப்படி யோசித்து படம் எடுக்க முடியும்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்