தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Venkat Prabhu: ‘நண்பர் செய்த தவறு.. அதனால கல்யாணத்துக்கு யாரும் வர வேண்டாம்’ - வெங்கட்பிரபு அதிர்ச்சி அறிக்கை!

Venkat Prabhu: ‘நண்பர் செய்த தவறு.. அதனால கல்யாணத்துக்கு யாரும் வர வேண்டாம்’ - வெங்கட்பிரபு அதிர்ச்சி அறிக்கை!

Jun 05, 2024, 01:05 PM IST

google News
Venkat prabhu: இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. - வெங்கட்பிரபு
Venkat prabhu: இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. - வெங்கட்பிரபு

Venkat prabhu: இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. - வெங்கட்பிரபு

பிரபல இயக்குநரான வெங்கட்பிரபு தன்னுடைய தம்பியான பிரேம்ஜி கல்யாணம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இது குறித்து வெங்கட் பிரபு வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், “இத்தனை வருடங்களாக என் குடும்பத்தாருக்கும் எனக்கும் ஆதரவையும், அளவில்லாத அன்பையும் வழங்கிய இரசிகர்களுக்கும் பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் வணக்கம்!

பல வருடங்கள் கழித்து நல்ல நிகழ்வு

எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. "பாகுபலியைக் கட்டப்பா ஏன் கொன்றார்? சொப்பன சுந்தரியை இப்போ யார் வெச்சிருக்கா!" இதை எல்லாவற்றையும் விட, பிரேம்ஜிக்கு கல்யாணம் எப்போ?" என்ற உங்கள் கேள்விக்கு பதில் கிடைக்கும். வரும் 9 ஆம் தேதி சிறிய அளவில் குடும்பத்தினர் மற்று நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், பிரேம் ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மாவின் ஆசிர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்ந்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிய முறையில் நடத்த விரும்புகிறோம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமணப் பத்திரிக்கையை பொதுவெளியில் பகிர்ந்துவிட்டார். எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ, அதேபோல் மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலாவுகின்றன. மணமகள் மீடியாவை சேர்ந்தவர் இவ்லை. திருமணம் முடிந்தடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்தி, அதையும் வைரலாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். உறுதியாக திருமண வரவேற்பில் அனைவரும் சந்திப்போம்” என்று குறிப்பிட்டு இருக்கிறார். 

முன்னதாக, பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் மற்றும் நகைச்சுவை என பன்முகத்தன்மை கொண்ட பிரேம்ஜி, இசையமைப்பாளரும் இயக்குனருமான கங்கை அமரனின் மகனான ஆவார். தமிழ் சினிமாவில் ராப் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அத்துடன் அவரது மூத்த சகோதரரான வெங்கட் பிரபுவின் படங்களில் நகைச்சுவையான நடிப்பிற்காக அறியப்படுகிறார். 

சினிமாவில் நுழைந்தது எப்படி?

இசையமைப்பதில் முதன்மையான ஆர்வம் கொண்ட பிரேம்ஜி, திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் அவரது உறவினர் யுவன் ஷங்கர் ராஜாவிடம் உதவியாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், பின்னணிப் பாடகராக மாறினார், யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் பெரும்பாலும் ராப் பகுதிகளைப் பாடினார். யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணிபுரிந்த அவர், தனது இசையமைப்பில் சிலவற்றை ஒலிப்பதிவு ஆல்பங்களுக்காக ரீமிக்ஸ் செய்தார், முதலில் வல்லவன் திரைப்படத்தின் “லூசு பெண்ணே” பாடலை ரீமிக்ஸ் செய்தார்.

2006 ஆம் ஆண்டில், சிலம்பரசனின் வல்லவன் படத்தில் கதாநாயகியின் தோழனாக அறிமுகமானார், அதைத் தொடர்ந்து அவர் தனது சகோதரர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 (2007) இல் சீனுவாக நடித்தார். இந்த திரைப்படம் அந்த ஆண்டின் மிகப்பெரிய கோடைகால வெற்றிப்படமாக மாறியது, பிரேம்ஜியையும் நகைச்சுவை நடிகராக நிலைநிறுத்தியது. அவர் தனது அடுத்த படமான சரோஜாவில் தனது சகோதரருடன் இணைந்தார். தொடர்ந்து, கோவா, மங்காத்தா, சேட்டை (2013) உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.  அதன் பின்னர் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரேம்ஜி நீண்ட நாட்களாக திருமணம் செய்து கொள்ளாமல் பேச்சுலராகவே இருந்து வந்தார். 

வெங்கட்பிரபு பதில் 

வெங்கட் பிரபுவிடம் பிரேம்ஜியின் திருமணம் குறித்து கேட்டால் அவருக்கு எப்போது திருமணம் என்று எனக்கு தெரியாது என்றே கூறுவார்.  இந்நிலையில், பிரேம்ஜி அமரனுக்கு திருமணம் முடிவாகியிருப்பது தொடர்பான பத்திரிகை இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் அவர் விளக்க அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். இப்போது அவர் நடிகர் விஜயை வைத்து கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் த டைம் என்ற படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி