Vanitha Vijayakumar: ‘பிறக்கும் போதே தங்கஸ்பூன்.. பணக்காரி பணக்காரி மாதிரிதான் நடப்பா..' - வனிதா விளாசல்!
Oct 17, 2023, 07:54 AM IST
வனிதா விஜய்குமார் தனக்கு வரும் நெகட்டிவான கமெண்டுகளுக்கு ஜோவிகாவுடன் இணைந்து முன்னதாக கொடுத்த பேட்டிதான் இது!
வனிதா பேசும் போது, ‘நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை சில பேர் கோழைத்தனமான முடிவு என்று பேசினார்கள். எனக்கு ஒரு விஷயம் பிடிக்க வில்லை என்றால், அது எனக்கு ஒத்து வராது என்றால், அந்த விஷயத்திற்கு என்னால் நோ சொல்ல முடியும். நிறைய பேருக்கு நோ சொல்ல தெரியாது. நோ சொல்லத்தெரியாதவர்கள் வாழ்க்கையில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
நோ சொல்லத்தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை மிகவும் ஈஸியாகி விடும். ஒருவர் என்னை வைத்து பிரபலத்தை தேடிக்கொள்ள விரும்பினால் அது நடக்கிறது. என்னுடன் யாராவது இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டு போட்டாலே, அது செய்தியாகி விடுகிறது. அதனை நான் உருவாக்கவில்லை. மீடியாதான் என்னை பற்றி எழுதுகிறார்கள்.
பிக்பாஸில் ஓவியா மிகவும் பிரபலமாக பேசப்பட்டார். ஆனால் அவர் அவரின் பாய் ஃபிரண்டுடன் ஒரு போட்டோவை பதிவிட்டால் யாருமே அதனை ஒரு பெரிய விஷயமாக கருதவில்லை. ஆனால் நான், என்னுடைய நண்பருடன் ஒரு போட்டோவை போட்டாலோ அல்லது என்னுடன் நடிக்கும் சக நடிகருடன் ஒரு போட்டோவை போட்டாலோ, இவரைத்தான் வனிதா கல்யாணம் செய்து கொள்ளப்போகிறாரா என்று போட்டு விடுகிறார்கள்.
மக்களுக்கு என்னை மிகவும் பிடிக்கிறது. என்னைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் என்னைப்பற்றி எழுதுகிறார்கள். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் கூட மீண்டும் அங்கு வருவதில்லை. காரணம், நம்மை அவர்கள் அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். சிலர் நான் பெரிய பணக்காரிபோல நடப்பதாக சொல்கிறார்கள். பணக்காரி பணக்காரி போலதான் நடப்பாள்.” என்று பேசினார்.
நன்றி: கலாட்டா!
டாபிக்ஸ்