தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி.. வலைப்பேச்சு அந்தணன் பேட்டி

கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி.. வலைப்பேச்சு அந்தணன் பேட்டி

Marimuthu M HT Tamil

Nov 23, 2024, 04:35 PM IST

google News
கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி என மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியளித்துள்ளார்.
கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி என மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியளித்துள்ளார்.

கள்ளத்தொடர்பு சர்ச்சை.. சிறக்காத தாம்பத்தியம்.. ஏ.ஆர்.ரஹ்மான் உண்மையில் எப்படி என மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேட்டியளித்துள்ளார்.

கள்ளத்தொடர்பில் தொடர்புபடுத்தி ஏ.ஆர்.ரஹ்மானை சிலர் பேசிவரும் நிலையில், அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் அளித்த பேட்டி வைரல் ஆகி வருகிறது.

சமீபத்தில் அதிர்வலைகளை உண்டாக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு விவாகரத்து பற்றி கிங் 24*7 யூட்யூப் சேனலுக்கு, வலைப்பேச்சு அந்தணன் பேட்டியில் கூறியிருப்பதாவது, ’ ஏ.ஆர்.ரஹ்மான் பணிநிமித்தமாக பிரிந்திருப்பது சாயிரா பானுவுக்கு தனிமையைக் கொடுத்திருக்கு. ஏ.ஆர். ரஹ்மான் அம்மாவுக்கும் சாய்ராவுக்கும் ஆரம்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வந்திருக்கு. இப்போது வரைக்கும் ஏ.ஆர். ரஹ்மான் பிஸியாகத் தான் இருக்கிறார்.

தன் பிள்ளைகளுக்குண்டானது எல்லாம் பார்த்து பார்த்து செய்து கொடுத்தாலும் தினமும் வீட்டுக்கு வருவதை ஏ.ஆர்.ரஹ்மானால் செய்யமுடியவில்லை. சாய்ரா பானுவும் அடிப்படையில் சீக்கிரம் கோபப்படக்கூடிய குணம் கொண்டவங்கன்னு சொல்றாங்க. இதில் சாயிரா பானு எடுத்த முடிவு ஏ.ஆர்.ரஹ்மானுக்கே தெரியவில்லை. 30 ஆண்டுகளை நிறைவு செய்வோம்ன்னு நினைக்கிறோம். ஆனால், இப்படி நடந்திடுச்சுன்னு ஏ.ஆர். ரஹ்மானே வருத்தப்படுகிறார்.

”ஜெயம் ரவி விவகாரத்தில் ஆர்த்தி பொய் சொல்கிறார்”:

சாய்ரா பானு திடீர்னு மும்பைக்குப் போறாங்க. ஒரு நோட்டீஸ் அனுப்புறாங்க. ஏ.ஆர்.ரஹ்மான் விஷயத்தில் அவர் எதையும் வெளியில் சொல்லவில்லை. ஆர்த்தி - ஜெயம் ரவி விவாகரத்தில் ஆர்த்தி தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என சொல்வது பொய் தான்.

ஏ.ஆர். ரஹ்மான் விஷயத்தில் கள்ளத்தொடர்பு என்ற பேச்சுக்கே இடம் கிடையாது. முதலில் அவர் அத்தகைய நபர் கிடையாது. அடிப்படையாக அவர் வந்து நேர்மையான மனிதர். இந்த மாதிரி அநாகரிகமான செயலில் அவர் எந்தக் காலத்திலும் ஈடுபடமாட்டார். நான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டது எல்லாமே மிஸ்டர் கிளீன் அப்படின்னு தான்.

தவறான நபர்களை ஏ.ஆர்.ரஹ்மான் பக்கத்தில் சேர்த்துக்கொண்டதே கிடையாது. தன் தோழிகளிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டார் என்றால், அவரை தன் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார், ஏ.ஆர். ரஹ்மான். அப்படிப்பட்ட நபர். ஒழுக்கம் முக்கியம் நினைக்கும் நபர் ஏ.ஆர்.ரஹ்மான். யாரை பற்றியும் புறம்பேசமாட்டாராம், ரஹ்மான். அவருடன் பாடல்கள் எழுதும் பலபேர் எனக்குத் தெரியும். சம்பந்தம் இல்லாத யாரையாவது பற்றி பேசினால், நம் வேலை அது கிடையாது எனச் சொல்லிவிடுவாராம்.

புறம்பேசாத ஏ.ஆர்.ரஹ்மான்:

படங்கள் பற்றிப் பேசுவாராம். மியூஸிக் பற்றி பேசுவாராம். ஆனால், தனி நபர்களைப் பற்றி பேசமாட்டாராம். மிகவும் கடவுள் நம்பிக்கை உள்ள மனிதர் ஏ.ஆர். ரஹ்மான். ரஹ்மானை பற்றி சிலர் தவறாகப் பேசும்போது திரைக்கதை எழுதுவதற்கு ஒரு அளவு இல்லையா.

ஒருவரது தாம்பத்திய வாழ்க்கையைப் பற்றி பேசவேண்டாம். அது தவறு. அவரைப் போல் காதல் பாடல்கள் யாரும் போட்டிருக்க முடியாது. அப்படி காதல் உணர்வோடு இருக்கும் நபர் எப்படி தன்னைத் துறவி மாதிரி வைத்திருப்பார்.

இங்கு கணவன் - மனைவி எல்லாம் விடுங்க. இங்கு 100 விழுக்காடு சரியாக வாழ்ந்தவங்கன்னு யாரும் இல்லை. அதற்காக உடனே டைவர்ஸ்ன்னு போறது சரியா. அதனால், நிறைய இடங்களில் கவுன்சிலிங் கொடுக்கணும். எங்கு பார்த்தாலும் தியரியாகத் தான் இருக்கு. முன்பு எல்லாம் கூட்டுக்குடும்பத்தில் இருப்பாங்க. சண்டை நடக்கும். அதில் இருந்து எப்படி சமாளிக்கணும்ன்னு தெரிந்தது. இப்போது அப்படியில்லை இரண்டு இரண்டுபேரோட முடிஞ்சது வாழ்க்கை.

சினிமாவில் யாரும் தனிமையாக எல்லாம் இல்லை. அடிக்கடி கெட் டூகெதர் நடக்கும். விவாகரத்துக்கு முக்கியமாக ஒரு விரிசல் ரொம்ப காலமாக இருந்திருக்கும். ஏ.ஆர். ரஹ்மானையும் சாய்ரா பானுவையும் சேர்த்து வைப்பதற்குண்டான பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன’’ என வலைப்பேச்சு அந்தணன் பேசி முடித்தார்.

நன்றி: கிங் 24X7 யூட்யூப் சேனல்

பொறுப்புத்துறப்பு: இந்தப் பேட்டியில் கூறப்பட்ட கருத்துக்கும் இந்துஸ்தான் டைம்ஸ் நிறுவனத்துக்கும் அதை எழுதியவருக்கும் எந்த தார்மீக உரிமையும் கிடையாது. இது முழுக்க முழுக்க பேட்டியளிப்பவரின் தனிப்பட்ட கருத்து மட்டுமே!

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி