தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Manimegalai: ‘லவ் ஜிகாத்தா? மதம் மாறினேனா?’ மணிமேகலை ஓப்பன் பேட்டி!

Manimegalai: ‘லவ் ஜிகாத்தா? மதம் மாறினேனா?’ மணிமேகலை ஓப்பன் பேட்டி!

Jul 05, 2023, 08:49 AM IST

google News
‘இதைப் பற்றி யாரும் கவலைப்படாதீங்க. என் உயிர் மூச்சு இருக்கிற வரை மணிமேகலையா தான் இருப்பேன்’ (iammanimegalai Instagram)
‘இதைப் பற்றி யாரும் கவலைப்படாதீங்க. என் உயிர் மூச்சு இருக்கிற வரை மணிமேகலையா தான் இருப்பேன்’

‘இதைப் பற்றி யாரும் கவலைப்படாதீங்க. என் உயிர் மூச்சு இருக்கிற வரை மணிமேகலையா தான் இருப்பேன்’

முன்னாள் டிவி தொகுப்பாளரும், குக் வித் கோமாளி போட்டியாளரும், தற்போது அதே நிகழ்ச்சியில் தொகுப்பாளராக மாறியிருக்கும் மணிமேகலை, யூடியூப் ஒன்றுக்கு சமீபத்தில் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:

‘‘கடவுள் புண்ணியத்துல வாழ்க்கை ஒரு மாதிரி நல்லா போய்ட்டு இருக்கு. பி.எம்.டபிள்யூ கார் ஒன்று தான் வாங்கினோம். ஒரு பைக் வாங்கினோம். அவ்வளவு தான், வேறு எதுவும் வாங்கவில்லை. பைக் வாங்கினோம், பூஜை போட்டோம், ரீல்ஸ் போட்டோம், ஈசிஆர் போனோம்,  அதோடு பைக் தரை தளத்தில் தான் நிற்கிறது. அதுக்கு அப்புறம் அந்த பைக் வெளியவே வரல.

பொதுவா நமக்கு ஏதாவது ஒரு விசயம் பண்ணனும் ஆசைப்படும். இப்போ நான் பண்ணிட்டு இருக்கிற நகைச்சுவை என்னுடைய ஜானர் அல்ல. எனக்கே தெரியாமல் அமைந்தது இது. இது மாதிரி எல்லாம் எனக்கு பண்ண வருமா என்றே எனக்கு தெரியாது. முதல் சீசனில் நான் அமைதியாக தான் இருந்தேன். இரண்டாவது சீசனில் தான் நான் காமெடியே பண்ண ஆரம்பித்தேன். 

மூன்று ஆண்டுகள் குக்வித் கோமாளியில் இருந்ததால், சரி மற்றவர்களுக்கு வழி விடலாம் என்று தான் நிகழ்ச்சியில் இருந்து விலகினேன். எனக்கும் பர்சனலா சில விசயங்கள் இருந்தது. அதுவும் ஒரு காரணம். ஆங்கரிங் என்னோட ஃபேஷன் என்பதால், மீண்டும் நான் அந்த நிகழ்ச்சிக்கு ஆங்கராக வந்தேன்.

கோமாளியா இருந்ததை விட, ஆங்கரா இப்போ வந்ததால ரொம்ப சந்தோசமா இருக்கேன். வீடு கட்டுவதால் நான் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாக கூறினார்கள். வீடு கட்டினால், கூடுதலாக தான் வேலை பார்ப்பதாக இருக்குமே தவிர, இருக்குற வேலையை யாரும் விடமாட்டாங்க. அது காரணமே இல்லை. 

லாக்டவுனில் நாங்கள் போய் தங்கிய இடம், அது எங்களுக்கு பிடித்துவிட்டது. திருப்பூர் பக்கம் அதாவது கோவை விமான நிலையத்திலிருந்து ஒரு மணி நேரம் தூரத்தில் ஒரு இடத்தில் தான் வீடு கட்டிக் கொண்டிருக்கிறோம். அங்கே போய் செட்டில் ஆகப் போவதில்லை. போனா, வந்தால் தங்கிக் கொள்ளத் தான் கட்டுகிறோம். 

ஹூசைன் என்னை லவ் ஜிகாத் செய்து விட்டார் என்று கூறுகிறார்கள்.  ஹூசைனை நான் திருமணம் செய்து கொண்டதால், நான் மதம் மாறிவிட்டதாக கூறுகிறார்கள். இப்போ வரை நான் மணிமேகலை தான். ஸ்ரீ ராமஜெயம், மாஷா அல்லா, ஏசப்பா எல்லாமே எனக்கு ஓகே தான். எல்லாம் ஓகே என்பது வெறும் வாய் வார்த்தை கிடையாது. அதனால் தான் நாங்கள் இருவரும் கணவன், மனைவியா இருக்கோம். 

இவர் கூட நான் நிறைய போட்டோ போட்டிருக்கேன். அவரோடு நான் நிறைய கோயில் போட்டோக்கள் போஸ்ட் போட்டிருக்கேன். ரம்ஜானுக்கு இவர் கூட இருந்ததை விட, கோயிலுக்கு நாங்க போன ஸ்டில்ஸ் தான் நிறைய பார்த்திருப்பீங்க. எல்லா போட்டோவும் இன்ஸ்டாகிராமில் இருக்கு.

திருமணம் பண்ண அன்று, 80 சதவீதம் பேர் வாழ்த்தினார்கள். மிதமுள்ளவர்கள் ‘இது ஒரு 6 மாதம் இருக்கும்,  இது முடிந்துவிடும், பிரிந்து விடுவீர்கள்’ என்றெல்லாம் சொன்னார்கள். ஒரு வருடம் ஆன போது, ‘இரண்டு வருசத்துல ஓடிருவீங்க’ என்றார்கள். இரண்டு ஆண்டு போச்சு, ‘பணம் இல்லைனா வந்திடுவீங்க’ என்றார்கள். அதுக்கு அப்புறம், ‘பிஎம்டபிள்யூ, வீடு எல்லாமே வந்துச்சு’. 

4 ஆண்டு ஆன எப்படி இருப்பீங்க பார்க்கலாம், 10 ஆண்டு ஆன எப்படி இருப்பீங்க பார்க்கலாம் என ஒவ்வொரு ஆண்டையும் அவர்கள் அதிகரித்துக் கொண்டே தான் போவார்கள். 70 வயசு ஆனாலும், ‘வயசான எப்படி இருப்பீங்கனு பார்க்கலாம்’ என்று கூறுவார்கள். அப்படி பேசுபவர்களை பற்றி கவலை இல்லை. 

நான் மணிமேகலையா தான் இருக்கேன் . என்னோட கணவர் எனக்கு அந்த உரிமையை கொடுத்திருக்கார். இதைப் பற்றி யாரும் கவலைப்படாதீங்க. என் உயிர் மூச்சு இருக்கிற வரை மணிமேகலையா தான் இருப்பேன். உசேன் என் கூட கோயிலுக்கு வருவான்,’’

என்று அந்த பேட்டியில் மணிமேகலை கூறியுள்ளார். 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி