நின்று போன திருமணம்..50 சவரன் நகையை வாங்கிவிட்டு ஏமாற்றிய சிங்கப்பூர் மாப்பிள்ளை? சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்
Oct 25, 2024, 01:15 PM IST
நவம்பர் மாதம் திருமணம் நடைபெறுவதாக இருந்த நிலையில், ஏமாற்றப்பட்டு இருப்பதாக நடிகை ஜெனிப்பிரியா தெரிவித்துள்ளார். 50 சவரன் நகையை வாங்கிவிட்டு சிங்கப்பூர் மாப்பிள்ளை ஏமாற்றியதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
சன்டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜெனிப்பிரியா. இவர் ராஜமன்னார் வகையறா என்ற சீரியலில் லீட் ரோலில் நடித்தார். தமிழ்ப்படம் 2 படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.
இதையடுத்து இவர் சிங்கப்பூரை சேர்ந்த பைலட்டை திருமணம் செய்வதாக இருந்த நிலையில், தான் ஏமாற்றப்பட்டிருப்பதாக நடிகை ஜெனிப்பிரியா கூறியுள்ளார். அத்துடன் திருமணமும் நின்று போயுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பைலட்டுடன் நிச்சயதார்த்தம்
நடிகை ஜெனிப்பிரியாவுக்கும், சிங்கப்பூரை சேர்ந்த பைலட்டான துநேசன் என்பவருக்கும் இடையே திருமண உறுதி செய்யப்பட்டு, சென்னையில் நலுங்கு நிகழ்ச்சி கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
இதையடுத்து இவர்களின் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் மாதம் 8 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஜெனிப்பிரியாவுக்கு நெருக்கமான பலரும் அவரது திருமண நிகழ்வுக்கு செல்ல தயாராக இருந்துள்ளனர்.
நான் ஏமாற்றப்பட்டுள்ளேன்
இந்த நேரத்தில் துநேசன் குடும்பத்தினரால் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக நடிகை ஜெனிப்பிரியா தெரிவித்துள்ளார். அத்துடன் தனது நகைகளை வாங்கிக்கொண்டு அவர்கள் மீண்டும் தர மறுப்பதாகவும் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் ஊடகமான ஆனந்த விகடனுக்கு நடிகை அளித்த பேட்டியில், " மேட்ரிமோனி மூலம் துநேசன் குடும்பத்தினர் எனக்கு அறிமுகமானார்கள். அவர் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து ஆனாவர். இதுதொடர்பான ஆவணங்களையும் காண்பித்தார். இரண்டு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வந்த அவர் மீது எனக்கு பரிவு ஏற்பட்டது.
வரதட்சனையாக அவர்கள் 200 சவரன் வரைக் கேட்க, நூறு சவரன் போட முடியும் சொன்னேன். அதுற்கு அவர்களும் சம்மதிக்க திருமண ஏற்பாடு நடந்துச்சு.
கடந்த மாதம் 26ஆம் தேதி நலுங்கு நிகழ்ச்சி சென்னையில் சிம்பிளா நடந்தது. அ்தன் பின்னர் சிங்கப்பூர் புறப்பட்ட அவரது குடும்பத்தினர், 100 சவரன் நகைகளை கேட்டாங்க.
இதுபற்றி கேட்டபோது, நீங்க கொண்டு வரும்போது ஏர்போர்டில் கஸ்டம்ஸ் செக்-அப் முதலான விஷயங்கள் ஏதாவது பிரச்னை வரலாம் எனவும், பைலட் என்பதால் நான் எடுத்து செல்லும்போது எந்த பிரச்னையும் வராதுன்னு எனவும் அவர் சொன்னதை நம்பி 50 சவரன் நகைகளை மட்டும் கொடுத்தேன்.
ப்ரீவெடிங் ஷூட் சென்றபோது கிடைத்த அதிர்ச்சி தகவல்
அதன் பின் சில நாள்கள் கழித்து சிங்கப்பூருக்கு சென்றேன். அப்போதுதுநேசனுடன் ப்ரீ வெட்டிங் ஷூட் நடைபெற்றது. அந்த நேரத்தில் அவர் என்னை அறிமுகப்படுத்துவதற்காக அழைத்து சென்ற உறவினர்கள் மூலம் அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன.
முதல் மனைவியை இவரேதான் துரத்தி விட்டிருப்பது தெரியவந்தது. இவரது மூத்த பையன் நடவடிக்கையுமே வித்தியாசமா இருந்தது. அதை பற்றி கேட்க வேண்டாம் என சொன்னதோடு, மொபைல் கேம்க்கு அடிமையாகி இருப்பதாகவும் சொன்னார்.
இதன் பின் சென்னை வந்த அவரை தொடர்பு கொண்டபோது அவர் லைனில் வரவில்லை. சரி திருமணம் செட் ஆகாது என சிங்கப்பூர் புறப்பட்டு நண்பர்கள் மூலமா அவர்கிட்டப் பேசியபோது, அவரிடம் இருக்கும் என்னுடைய பொருட்களை வாங்கிவிட்டு போக சொன்னார்.
அதன் பின் அவர் வீட்டுக்கு சென்றபோது வெளியே கூட வராமல் தநேசன் தாய் மற்றும் அவரது சகோதரர் துணிகள் உள்பட மற்ற பொருள்களை தந்தார்கள். நகையை கேட்டபோது, நகையெல்லாம் தரவில்லை என சொன்னது அதிர்ச்சியை கிளப்பியது.
சட்ட நடவடிக்கை எடுக்க போறேன்
அப்போ அந்த ஊரில் என்ன செய்வது என தெரியாமல் நின்றேன். இந்த சம்பவத்துக்கு பின் சென்னை வந்த வழக்கறிஞர்கள் சந்தித்து ஆலோசனை செய்த பின், துநேசன் வேலை பார்க்கற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு ஒரு மெயில் போட்டிருக்கேன். நகைகளை நான் கொடுத்ததற்கு போன் சாட்டிங், அவர் தங்கியிருந்த ஹோட்டல் வீடியோ ஃபுட்டேஜ்னு சில சாட்சிகள் தான் இருக்கு. இதை வச்சு அவர் மீது புகார் தர்றது பத்தி யோசிச்சிட்டிருக்கேன்" என்று கூறியுள்ளார். நவம்பர்ல திருமணம் நடக்கபோகிறது என இன்விடேஷன்லாம் அடிச்சு எல்லாருக்கும் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
யார் இந்த ஜெனிப்பிரியா?
ஜெனிப்பிரியா நடிகையாக மட்டுமில்லாமல் மேக்கப் கலைஞராவும் இருந்து வருகிறார். ஜல்லிக்கட்டு போராளியாக பிரபலமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற புகழ் பெற்ற ஜூலிக்கு விதவிதமாக மேக்கப் போட்டிருக்கிறார். ஜெனிப்பிரியா கைவண்ணத்தில் உருவான லுக்கில் ஜூலியும் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.