Story of Song : இந்த இடத்தில் இப்படி போட்டால் நல்லா இருக்கும்.. டிஎம்ஸ் ஐடியாவை ரிஜெக்ட் செய்த கேவிஎம்.. யாருக்காக பாடல்
Jan 17, 2024, 05:45 AM IST
வசந்த மாளிகை படத்தில் இடம்பெற்ற யாருக்காக இது யாருக்காக பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்ற பெயரை சொன்னால் நினைவுக்கு வரும் படங்களில் ஒன்றாக இருப்பது வசந்த மாளிகை. ரெமாண்டிக் மெலே டிராமா பாணியில் உருவாகியிருக்கும் அந்த படம் இத்தனைக்கும் ரீமேக் என்றாலும் ஒரிஜினலை விட அதிக நாள்கள் ஓடிய படமாகவே ரசிகர்களின் இதயத்துக்கு நெருக்கமான படமாகமாக மாறியதற்கு சிவாஜி கணேசனின் தனித்துவமான நடிப்பு திறமை முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
தெலுங்கில் 1971இல் வெளியாகி ஹிட்டடித்த பிரேம நகர் என்ற படத்தை தமிழில் வசந்த மாளிகை என்ற பெயரில் ரீமேக் செய்தனர். இதில் சிவாஜி கணேசன் - ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. ஆனால், தாயாரின் இறப்பு காரணமாக ஜெயலலிதா கடைசி நேரத்தில் நடிக்க முடியாமல் போனது. அந்த கதாபாத்திரத்தில் தெலுங்கில் நடித்த வாணிஸ்ரீயை நடிக்க வைத்தார்.
தெலுங்கில் இயக்கிய பிரகாஷ் ராவ், தமிழிலிலும் இயக்கினார். ஆனால் தமிழ் தான் ஒரிஜினல் என்று கூறும் அளவுக்கு தனது அற்புத நடிப்பால் மெருகேற்றியிருந்தார் சிவாஜி கணேசன். படத்தில் சிவாஜி கணேசன் - வாணிஸ்ரீ இடையிலான காதல், அன்பு, பாசம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக இருந்த எமோஷனல் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்து கிளாப்ஸ்களை அள்ளின.சிவாஜி கணேசனின் தனித்துவமான நடிப்பு திறமை முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது.
தெலுங்கில் இசையமைத்த கேவி மகாதேவன் தமிழிலும் இசையமைத்தார். கண்ணதாசன் பாடல் வாரிகள் ஒரு கின்னத்தை ஏந்துகிறேன், குடிமகனே, அடியம்மா ராசாத்தி, மயக்கம் என்ன, இரண்டு மனம் வேண்டும், யாருக்காக என ஒவ்வொரு பாடலும் ஒவ்வெரு ரகமாக ரசிகர்களை கவர்ந்து ஹிட்டடித்தது. இதன் காட்சியமைப்புகளும் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் இடம்பெற்ற யாருக்காக பாடல் உருவான கதை குறித்து இதில் காண்போம்.
”யாருக்காக
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
யாருக்காக
இது யாருக்காக
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
மரணம் என்னும் தூது வந்தது
அது மங்கை என்னும் வடிவில் வந்தது
சொர்கமாக நான் நினைத்தது
இன்று நரகமாக மாறிவிட்டது”
இந்த படத்தின் காட்சியை கே.வி.எம் கண்ணதாசனிடம் சொன்னவுடன் அதற்கு ஏற்றார் போல் வரிகளை எழுதிவிட்டார் கண்ணதாசன் வரிகள் ஒவ்வொன்றும் அற்புதமாய் அமைந்தது. இதனைப் பார்த்து கேவியம் கண்டிப்பாக இந்த பாடல் வெற்றியடையும். இந்த படத்திற்கு இப்பாடல் அடையாளமாக இருக்கும் என சொல்கிறார்.
இப்பாடலை டிஎம்எஸ் சௌந்தரராஜன் பாடுகிறார். இப்பாடலை பாடுவதற்கு முன் டிஎம்எஸ் இப்பாடலை பார்த்துவிட்டு கண்டிப்பாக இந்த பாடல் வெற்றி அடையும் நல்ல ஹிட் கிடைக்கும் என கேவிஎம் இடம் சொல்கிறார். ஆனால் டி எம் எஸ் சௌந்தரராஜன் இந்த விஷயத்தை மட்டும் பண்ணினால் பாடல் இன்னும் அருமையாக இருக்கும் என சொல்கிறார். அதாவது யாருக்காக யாருக்காக என பாடல் வரும்போது எக்கோ சவுண்ட் கொடுத்தால் பாடல் இன்னும் அருமையாக இருக்கும் என சொல்லி உள்ளார்.
ஆனால் கேவிஎம் அதை கேட்காமல் வேண்டாம் இதுவே நன்றாக தான் உள்ளது என சொல்லியுள்ளார். பின்னர் தான் கேவிஎம் அந்த எக்கோ சவுண்டை பாடலில் கொடுத்துள்ளார். தியேட்டரில் இப்பாடல் வரும் போது குறிப்பாக இந்த எக்கோ சவுண்ட் வரும் போது மக்கள் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதை பார்த்த கேவிஎம் அப்போதுதான் டி எம் எஸ் சௌந்தரராஜன் சொன்னதை உணர்ந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9