Story of Song : கவிஞர் வைரமுத்து வரிகள்.. இளையராஜா இசை.. மனதை மயக்கும் பாடல்.. துள்ளி துள்ளி உருவான கதை!
Nov 06, 2023, 06:15 AM IST
சிப்பிக்குள் முத்து படத்தில் இடம்பெற்ற துள்ளி துள்ளி நீ பாடம்மா பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
கே. விஸ்வநாத் இயக்கத்தில் 1986-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சிப்பிக்குள் முத்து. கமல்ஹாசன், ராதிகா ஜோடியாக நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் சரத்பாபு, ஒய்.விஜயா, மேஜர் சுந்தரராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். கன்னட மொழியில் இந்தப்படம் சுவாதி முத்யம் என்ற பெயரில் வெளியானது.
இத்திரைப்படம் தெலுங்கில் சுவாதிமுத்யம் என்ற பெயரில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. இத்திரைப்படத்தின் இசையமைத்தவர் இளையராஜா. இத்திரைப்படத்தின் பாடல்களைப் பாடியவர்கள் எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா, எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. சைலஜா.
இத்திரைப்படமானது பெங்களூர் பல்லவி திரையரங்கில் தெலுங்கு மொழியில் அதிகபட்சமாக 450 நாட்கள் வரை ஓடியது. இத்திரைப்படம் 1989 ஆம் ஆண்டு இந்தி மொழியில் அனில் கபூர் நடிப்பில் ஈஸ்வர் எனும் பெயரில் இயக்குநர் கே. விஸ்வநாத் மீண்டும் படமாக்கினார்.
இப்படத்தில் இடம்பெற்ற துள்ளி துள்ளி நீ பாடம்மா பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
”துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன் கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா”
இளையராஜா அற்புத இசையில், கவிஞர் வைரமுத்து அவர்கள் இலக்கிய தரத்துடன் எழுதிய அருமையான பாடல் இது. இராமாயணமத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல் என்றாலும் அனைவருக்கும் புரியும் வகையில் தனக்கே உரித்தான எளிய வடிவில் பாடலைப் எழுதி இருப்பார் கவிப்பேரரசு.
பாடலின் ஆரம்பத்தில் எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களில் ஆலாபனை சரணத்திற்கு இடையில் வரும் கன்றுக்குட்டியின் சலங்கை ஒலி என அனைத்தும் அப்படி ஒரு உணர்வை தெரும்.
எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஜானகி இருவரின் குரல்வளம் அருமையாக இருக்கும். எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்களிக்கு ஜானகி அவர்கள் சொல்லி கொடுக்கும் விதம் இருக்கே அப்படி ஒரு அழகு. கமலஹாசன், ராதிகா இருவரின் நடிப்பு, நடனம் இப்பாடல் காட்சியில் அருமையாக அமைந்திருக்கும்.
கமல் அவர்கள் இப்பாடலில் நடனம் தெரியாத ஒருவர் ஆடினால் எப்படி இருக்கும் அப்படி துள்ளி துள்ளி ராதிகாவை சுற்றி ஆடுவார்.இதில் கமல் அவர்களில் நடிப்பு திறமை நம்மை வியப்பில் ஆழ்த்தும் என்றே சொல்லலாம். அதே போல தண்ணீரில் குதித்து, குடத்தை குச்சியால் கமல் தட்டும் போது அதில் வரும் இசை இருகே அவ்வளவு துல்லியமாக அமைந்திருக்கும். இப்படி இப்பாடல் குறித்து கொல்லிக்கொண்டே போகலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்