தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  The Goat Box Office: இரண்டாவது வெள்ளிக்கிழமை..பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு! தி கோட் தற்போது வரை எவ்வளவு கலெக்சன்?

The Goat Box Office: இரண்டாவது வெள்ளிக்கிழமை..பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு! தி கோட் தற்போது வரை எவ்வளவு கலெக்சன்?

Sep 14, 2024, 01:21 PM IST

google News
The Goat Box Office Collection Day 9: புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் தளபதியின் விஜய்யின் தி கோட் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் வெளியாகி இரண்டாவது வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை கண்டுள்ளது. தற்போது வரை படம் எவ்வளவு கலெக்சன் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.
The Goat Box Office Collection Day 9: புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் தளபதியின் விஜய்யின் தி கோட் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் வெளியாகி இரண்டாவது வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை கண்டுள்ளது. தற்போது வரை படம் எவ்வளவு கலெக்சன் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.

The Goat Box Office Collection Day 9: புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில் தளபதியின் விஜய்யின் தி கோட் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. படம் வெளியாகி இரண்டாவது வெள்ளிக்கிழமை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவை கண்டுள்ளது. தற்போது வரை படம் எவ்வளவு கலெக்சன் செய்துள்ளது என்பதை பார்க்கலாம்.

தளபதி விஜய் - இயக்குநர் வெங்கட் பிரபு முதல் முறையாக கூட்டணி அமைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் தி கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கடந்த வாரம் வியாழக்கிழமை வெளியானது. படம் வெளியாகி ஒன்பது நாள்கள் ஆகியிருக்கும் நிலையில் பாக்ஸ் ஆபிஸில் இந்தியாவில் மட்டும் ரூ. 184. 50 கோடி வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

ரூ. 300 கோடி கிளப்பில் தி கோட்

தி கோட் வெளியான ஐந்தாவது நாளிலேயே படம் ரூ. 300 கோடி கிளப்பில் இணைந்தது. இதைத்தொடர்ந்து லியோ படத்துக்கு அடுத்தபடியாக ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்த விஜய் படம் என சாதனை புரிந்தது.

இதையடுத்து பாக்ஸ் ஆபிஸ் வசூல் தகவல்கள் தெரிவிக்கும் sacnilk.com இணையத்தளம் தி கோட் படம் ஒன்பது நாள் முடிவில் உலக அளவில் ரூ. 350 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் படம் தற்போது வரை ரூ. 184.50 கோடி வசூலை ஈட்டியுள்ளது. முதல் வார முடிவில் ரூ. 178 கோடி வசூலித்திருந்தது.

புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் தி கோட் திரைப்படம் வெளியாகி இரண்டாவது வெள்ளிக்கிழமை ரூ. 6.5 கோடி ஈட்டியுள்ளது. பட வசூலில் தமிழ் பதிப்பு ஆக்கிரமிப்பு 33.07% ஆக உள்ளது.

படம் தொடர்ந்து ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடி வருவதாக கூறப்படும் நிலையில், வரும் வாரத்திலும் பெரிய படங்கள் ஏதும் வெளிவர போவதில்லை என்பதால் தி கோட் வசூல் ரூ. 400 கோடியை எட்டலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

விறுவிறுப்பான திரைக்கதையில் தி கோட்

தி கோட் படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் விஜய் தோன்றியுள்ளார். இதில் மகனாக வரும் விஜய் டீஏஜிங் தொழில்நுட்பத்தில் 25 வயது இளைஞனாக வருகிறார். அத்துடன் அவர் வில்லனாகவும் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சிநேகா, லைலா, ஜெயராம், அஜ்மல் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளார்கள். விறுவிறுப்பான திரைக்கதை, ஏராளமான டுவிஸ்ட், யுவன் ஷங்கர் ராஜாவின் தெறிக்கவிடும் பிஜிஎம், விஜயகாந்த், சிவகார்த்திகேயன், த்ரிஷா போன்றோரின் கேமியோ உள்ளிட்ட அம்சங்கள் தி கோட் படத்தை ரசிக்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது. படத்துக்கு முதல் நான்கு நாள்கள் கலவையான விமர்சனங்கள் வெளிவந்தபோதிலும் பேமிலி ரசிகர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தளபதி 69 அப்டேட்

விஜய்யின் கடைசி திரைப்படமான தளபதி 69 குறித்தான அப்டேட் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருக்கிறது. அதற்கு முன்னர் விஜய்யின் கடைசி படமாக அமைய இருக்கும் தளபதி 69 குறித்து ரசிகர்கள் பேசும் விடியோவை படத்தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஒன் லாஸ்ட் டைம்..ஒன் லாஸ்ட் டான்ஸ் என தளபதி 69 படம் குறித்து ரசிகர்கள் கண்ணீர் விட்டு வருகிறார்கள். இந்த படத்துக்கு பிறகு விஜய் தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளார். விஜய் அரசியலில் வருவதற்கு முன் உருவாகும் இந்த படத்தை எச். வினோத் இயக்குகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி